For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்பா, அம்மா குடிகாரங்க சரி.. பீர் ஊத்தி குளிக்கிறியே நீ யாருப்பா தம்பி.. மாட்டிக்கிட்ட பங்கு!

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டில் தான் நீடிக்க வேண்டும் என்பதற்காக, தனது அப்பா, அம்மாவை பொதுவெளியில் அவமானப்படுத்திய பாலாஜி முருகதாஸின் பீர் டிக் டாக் வீடியோ வெளியாகி அவரை வசமாக சிக்க வைத்துள்ளது.

  பாகுபலி வில்லன் மாதிரி வாட்டம் சாட்டமாக இருக்கிற பாலாஜி முருகதாஸ், இந்த பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

  பெற்றோர்கள் சரியில்லை என பகிரங்கமாக வெளிப்படுத்திய பாலாஜியின் கண்ணீர் கதையை கேட்டு பலரும் கதறியது அதுக்குள்ள வீணாகி விட்டது.

  அப்பா அம்மா குடிகாரங்க

  அப்பா அம்மா குடிகாரங்க

  எங்கப்பா அவ்ளோ கஷ்டப்பட்டு என்ன வளர்த்தாங்க, அப்பா பாம்பு கடிச்சு இறந்துட்டாரு, நான் தான் குடும்பத்தை காப்பாத்துறேன் என மற்ற போட்டியாளர்கள் தங்களின் சொந்தக் கதை, சோகக் கதை சொல்லிய நிலையில், தனது அப்பா அம்மா குடிகாரங்க என்பதை சொல்லி போட்டியாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார் பாலாஜி.

  ஏன் பெத்துக்குறீங்க

  ஏன் பெத்துக்குறீங்க

  குழந்தையை சரியா வளர்க்க முடியலன்னா அப்புறம் ஏன் பெத்துக்குறீங்க என தனது பெற்றோரை மட்டும் இல்லாமல், தவறான பெற்றோர்களுக்கு அனைவரையும் பார்த்து சாட்டை அடி கேள்வியாக பாலாஜி முருகதாஸ் கேட்டுவிட்டாரே என பிக் பாஸ் ரசிகர்கள், அவரை பாகுபலி சிலை ரேஞ்சுக்கு உயர்த்திப் பிடித்து பார்த்தனர்.

  கல்லுக்குள் ஈரம்

  கல்லுக்குள் ஈரம்

  2018ம் ஆண்டு நடந்த மிஸ்டர் இன்டர்நேஷனல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாலாஜி முருகதாஸ், லஞ்ச் நேரத்தில் சாப்பாடு கூட வராமல் கஷ்டப்பட்ட கதையை சொல்லி, பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்கள் மத்தியில் செம அப்ளாஸ் அள்ளினார். கல்லு மாறி இருக்கிற இவர் மனசுக்குள்ளேயும் இப்படி ஒரு ஈரமான கதை இருக்கே என பலரும் ஃபீல் பண்ணினார்கள்.

  இது அது இல்ல

  இது அது இல்ல

  மேலும், சில தீவிர பிக் பாஸ் ரசிகர்கள், கடந்த சீசனில் முகேன் ராவும் இதே மாதிரியான கதையைத் தானே சொன்னாரு, இது அது இல்ல என வடிவேலு மாதிரி சிந்திக்க ஆரம்பித்து, தங்களது கருத்துக்களையும் வெளியிட்டனர். பிக்பாஸ் டைரக்டர், இதுக்கும் அவரே ஸ்க்ரிப்ட் எழுதி தருகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

  பீர் குளியல்

  பீர் குளியல்

  பாலாஜி முருகதாஸின் கண்ணீர் கதையை கேட்டு, அவங்க அப்பாவை திட்டத் தொடங்கிய கூட்டம், இப்போ திடீரென நீச்சல் குளத்தில் பீர் குளியல் போடும் பாலாஜி முருகதாஸின் டிக்டாக் வீடியோ ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்களை பார்த்து, நீயும் குடிகாரன் தானா? பிரபலத்துக்காக பெத்த அம்மா அப்பாவையே அசிங்கப்படுத்திட்டியே என்றும் விளாசி வருகின்றனர்.

  மாட்டிக்கிட்ட பங்கு

  மாட்டிக்கிட்ட பங்கு

  கதை சொல்லும் டாஸ்க்கில் அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஆல்கஹலிக் என பொங்கிய அவரை பார்த்து அழுத கண்கள் எல்லாம் இப்போ உத்தமன் வரான் சொம்பை எடுத்து ஒளித்து வை என்கிற கணக்காக பாலாஜி முருகதாஸை திட்டித் தீர்க்க தொடங்கி விட்டனர். மாட்டிக்கிட்ட பங்கு!

  அது அவரோட வலி

  அது அவரோட வலி

  அதுக்குள்ள பாலாஜி முருகதாஸோட ரசிகர்கள் ஆனவர்கள், பீர் எல்லாம் ஆல்கஹால் கிடையாது என்றும், அவர் குடிக்கவில்லையே, குளிக்கத்தானே செய்றாரு, ஏதாவது பார்ட்டியாக இருக்கும். சின்ன வயசுல இருந்து அவரு அனுபவிச்ச வலியை சொல்றாரு, இதையெல்லாம் இப்படி கலாய்க்கக் கூடாது என்றும் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

  English summary
  Balaji Murugadoss who told about his parents alcoholic habbits In public. Now, netizens found a beer bath clip of Balaji and slammed him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X