Don't Miss!
- News
ஜாமியா பல்கலைக்கழக வன்முறை வழக்கு: ஷார்ஜில் இமாமை விடுவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி?
Recommended Video

சென்னை: சுசித்ரா வெளியிட்ட வீடியோ ஆதாரம் பொய் என்று கூறும் சின்மயியிடம் நெட்டிசன்கள் ஒரேயொரு கேள்வியை தான் கேட்கிறார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி புகார் தெரிவித்தார் ஆதாரமற்ற அந்த புகாரில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார் வைரமுத்து.
இந்நிலையில் பாடகி சுசித்ரா தன்னை பற்றி வெளியிட்ட வீடியோ பொய் என்கிறார் சின்மயி.

வீடியோ
பட வாய்ப்பு பெற சின்மயி அட்ஜஸ்ட் செய்வதாகக் கூறி சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டார். சுசித்ராவின் வீடியோ ஆதாரம் பொய் என்றால் அதில் இருப்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வீடியோவில் இருப்பது நான் இல்லை, அது டூப் என்று சொல்வது ஃபேஷனாகிவிட்டது. அதனால் சின்மயி அப்படி சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

முக்கியத்துவம்
யார் இந்த நெட்டிசன்கள், அவர்களுக்கு எதற்காக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சாதாரண மக்கள் தான் இந்த நெட்டிசன்கள். அவர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு விமர்சனம் செய்தததால் தான் சின்மயி விளக்கம் அளித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.

நம்புவது
சுசித்ராவின் வீடியோ ஆதாரமே பொய் என்றால் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வைரமுத்து மீது நீங்கள் கூறும் புகார் மட்டும் உண்மை என்று எப்படி நம்புவது என்று நெட்டிசன்கள் சின்மயியிடம் கேட்கிறார்கள். பாலியல் தொல்லை கொடுத்தபோது அதை வீடியோ எடுக்கவா முடியும் என்பதே பாதிக்கப்பட்ட பலரின் கூற்று.

மனநலம்
சத்தம் இல்லாமல் வீடியோ மேல் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சுசித்ரா. அப்போது அவருக்கு மனநலம் சரியில்லை என்று கூறிவிட்டார்கள். சுசிக்கு மனநலம் சரியில்லை என்று கூறிய சின்மயி தற்போது தான் கூறும் புகார்களை அனைவரும் நம்ப வேண்டும் என்று நினைப்பதை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். சின்மயி ஆதாரம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.