twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கோப்ரா' எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றாதது ஏன்?..இதுதான் காரணம்.. லிஸ்ட் போட்டு சொன்ன ரசிகர்கள்!

    |

    சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியாகி உள்ள கோப்ரா திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெறாது ஏடன என கூறப்படுகிறது. இப்படி மோசமான விமர்சனத்தை பெற இதுதான் காரணம் என ரசிகர்கள் லிஸ்ட்போட்டு கூறியுள்ளனர்.

    செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

    மேலும், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    கோப்ரா கதை

    கோப்ரா கதை

    கணக்கு வாத்தியாரானா விக்ரம், கணித முறையில் வித்தியாசமான தொடர் கொலைகளை செய்கிறார். மர்மமாக நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் அதிகாரியாக இர்ஃபான் பதான் களமிறங்குகிறார். அப்போது அவருக்கு கொலைக்கான காரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இதில் விக்ரம் யார், அவர் ஏன் கொலை செய்கிறார் கொலைக்கான காரணம் என்பதுதான் கோப்ரா படத்தின் கதை.

    கோப்ர பாயவில்லை

    கோப்ர பாயவில்லை

    விநாயகர் சதுர்த்திக்கு வெளியான இத்திரைப்படம் முதல் நாளே பல மோசமான விமர்சனத்திற்குள்ளானதால், இரண்டாவது நாள் படத்தை பார்க்க யாருமே தியேட்டர் பக்கம் போகவில்லை. கோப்ரா படம் எடுத்து பாயாமல் சியான் விக்ரமின் கோப்ரா பம்மி விட்டது என மீம்களை நெட்டிசன்கள் போட்டு பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

    கோட்டைவிட்ட இயக்குநர்

    கோட்டைவிட்ட இயக்குநர்

    படத்துக்கு மிகப்பெரிய மைனஸ் 3 மணி நேரமாக படம் இருப்பதுதான் என படம் பார்த்தவர்கள் என்றும், ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகர்கள் கடுப்பாகி போனது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. கணித சம்மந்தப்பட்ட படம் என்பதால் படம் 3 மணிநேரம் 3 நிமிடம் 3 செகண்ட் ரன்னிங் டைம் என பக்காவாக பிளான் போட்ட இயக்குநர் கதையை கோட்டை விட்டுவிட்டார்.

    மனதில் நிற்கவில்லை

    மனதில் நிற்கவில்லை

    விக்ரம் இந்த படத்தில் 8 கெட்டப்பில் வருவார் இந்த விதவிதமான கெட்டப்பை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், பல கெட்டப்புகள் படத்தில் 3 நிமிஷத்திற்கு மேல் வரவில்லை. இதனால், எந்த கெட்டப்பும் மனதில் பதியவில்லை. ஒரு மிரட்டலான நடிகரை இயக்குநர் சரியான பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    ஒன்னும் புரியல

    ஒன்னும் புரியல

    அதுமட்டுல் இல்லாமல் படத்தின் பல காட்சிகளில் என்ன நடக்கிறது, என்ன சொல்கிறார் என ஒன்னுமே புரியவில்லை. இந்த படத்தை ஒருமுறை அல்ல பலமுறை பார்த்தால் தான் புரியம் போல. அந்த அளவுக்கு பல காட்சிகளில் குழப்பமாக இருந்தது.

    ஒப்புக்கு சப்பாகவாக வந்த ஸ்ரீநிதி ஷெட்டி

    ஒப்புக்கு சப்பாகவாக வந்த ஸ்ரீநிதி ஷெட்டி

    கேஜிஎப் திரைப்படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் நடித்துள்ளதால், அவர் மீது நிறைய எதிர்பார்த்து இருந்தது. ஆனால், படத்திற்கு நிச்சயம் ஹீரோயின் கதாபாத்திரம் தேவை என்பதற்காக ஸ்ரீநிதி ஷெட்டியை படத்தில் ஒப்புக்கு சப்பாக நடிக்க வைத்துள்ளார்கள். நல்ல நடிக்கக்கூடிய நடிகைதானே அவருக்கு இன்னும் அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்து இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

    ஆதிரா...ஆதிரா

    ஆதிரா...ஆதிரா

    கோப்ரா படத்தின் செகண்ட் ஹீரோவே ஏ.ஆர். ரஹ்மான் தான். ஆதிரா...ஆதிரா பாடலை கேட்க ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படம் ஆரம்பிக்கும் போது பாடல் வந்தது அதன் பிறகு எந்த இடத்திலும் ஆதிரா... பிஜிஎம் கூட வரல. இதனால், ரசிகர்கள் ரொம்ப நொந்து போனார்கள். குறைந்தபட்சம் பிஜிஎம்மிலாவது வைத்து இருக்கலாம் என்றும், படம் ரசிகர்களின் எதிர்பார்லப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் அடுக்கடுக்கான காரணத்தை கூறி வருகின்றனர்.

    English summary
    Cobra Movie Mistakes and Failure Reasons: More Negative Reviews and Comments Passing on Social Media Related to 'Cobra Movie', as there are few mistakes and cast confusions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X