மோடி பட தயாரிப்பாளர் யார் தெரியுமா?: தீயாக பரவும் அதிர்ச்சி தகவல்

By Siva

மும்பை: பி.எம். நரேந்திர மோடி படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் வெளிநாட்டு சிறுவனக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ள அந்த படத்தை சந்தீப் சிங் தயாரித்துள்ளார்.

Netizens make fun of PM Narendra Modi crew

முன்னதாக சந்தீப் சிங் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மைனர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியவர். இந்நிலையில் மோடி படத்தை யார் தயாரிக்கிறார் என்று பாருங்கள் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சந்தீப் சிங் கடந்த ஆண்டு தான் பாலியல் புகாரில் சிக்கினார். அதன் விபரம் இதோ,

சந்தீப் சிங் புது படத்திற்கு லொகேஷன் பார்க்க மொரீஷியஸுக்கு சென்றார். அங்கு அவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சிறுவனிடம் நைசாக பேசி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுவன் அவர் பிடியில் இருந்து தப்பிச் சென்று தனது தந்தையிடம் நடந்தது பற்றி தெரிவித்துள்ளார்.

சிறுவனின் தந்தை ஹோட்டல் ரிசப்ஷனுக்கு சென்றால் அங்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லையாம். ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சிறுவனிடம் சில்மிஷம் செய்த வேகத்தில் சந்தீப் ஹோட்டலை விட்டு வெளியேறி, மறுநாளே நாடு திரும்பிவிட்டார்.

இது குறித்து சிறுவனனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி நடந்த சம்பவம் பற்றி மக்கள் தற்போது மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X