சின்ன பொண்ணை வெளியேற்ற போறீங்களா...கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 18 போட்டியாளர்களில் ஏற்கனவே முதல் வார இறுதியில் நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களால் தானே வெளியேறி விட்டார்.

இந்நிலையில் மீதமுள்ள 17 போட்டியாளர்களில் 15 பேர் நாமினேட் எவிக்ஷன் ப்ராசசில் நாமினேட் ஆகி உள்ளனர். இதற்கிடையில் போட்டியாளர்கள் தங்களின் கதையை சொல்வதும் தொடர்ந்து வருகிறது. வீட்டின் தலைவரை தேர்வு செய்யும் போட்டியில் இருந்தே வீட்டிற்குள் மோதல், குரூப்பிசம் ஆகியன துவங்கி விட்டது.

வரும் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 5 ன் முதல் எவிக்ஷன் நடைபெற உள்ளது. இந்த சீசனில் முதல் ஆளாக யார் வெளியேற போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை கமல் வரும் எபிசோடில் வெளியேறுபவர் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

முதலில் வெளியேற போறவர்

முதலில் வெளியேற போறவர்

இதற்கிடையில் நாமினேட் ஆன 15 பேருக்கு பதிவான ஓட்டுக்களில் 3 போட்டியாளர்கள் டேஞ்சர் ஜோனில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்ன பொண்ணு, அபிஷேக் ராஜா, அபினய் ஆகியோருக்கு தான் மிக குறைவாக ஓட்டு பதிவாகி உள்ளதாம். அதனால் இந்த வாரம் சின்ன பொண்ணு அல்லது அபிஷேக் ராஜா இருவரில் யாராவது ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறைந்த ஓட்டு வாங்கிய அபிஷேக்

குறைந்த ஓட்டு வாங்கிய அபிஷேக்

மற்றொரு தகவலின் படி போட்டியாளர்களில் சுருதிக்கு 4.02 சதவீதம் (24,095 ஓட்டுக்கள்), அபினய்க்கு 3.93 சதவீதம் (23,531 ஓட்டுக்கள்), சின்ன பொண்ணுக்கு 3.42 சதவீதம் (20,503 ஓட்டுக்கள்), அபிஷேக் ராஜாவுக்கு 3.29 சதவீதம் (19,816 ஓட்டுக்கள்) பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிக குறைவாக ஓட்டு பெற்றுள்ள அபிஷேக் ராஜா தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 விஜய் டிவியை எதிர்க்கும் நெட்டிசன்கள்

விஜய் டிவியை எதிர்க்கும் நெட்டிசன்கள்

ஆனால் சின்ன பொண்ணை வெளியேற்ற நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சும்மா பேருக்கு கூப்பிட்டு விட்டு, 40 வயதிற்கு மேற்பட்ட போட்டியாளர்களை முதல் ஆளாக வெளியேற்றும் விஜய் டிவி.,க்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தி பிக்பாஸில் திறமையை மட்டும் பார்க்கிறார்கள். வயது வித்தியாசமோ அல்லது பாலினத்தையோ பார்ப்பதில்லை. ஆனால் தமிழ் பிக்பாஸில் 40 வயதிற்கு மேற்பட்ட போட்டியாளர்கள், பரபரப்பிற்காக அழைக்கப்பட்டு, பிறகு வெளியேற்றப்படுவதாக பலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

அடுத்து இவரா

அடுத்து இவரா

இன்னும் எப்படியும் 2 வாரங்களில் இமான் அண்ணாச்சி வெளியேற்றப்படுவார் என சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். ஆனால் இமான் அண்ணாச்சி இன்னும் சில வாரங்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். முதல் ஆளாக வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் சின்ன பொண்ணு இருப்பது பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதற்கு முந்தைய சீசன்களிலும் 40 வயதிற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் மிக குறுகிய நாட்களிலேயே வெளியேற்றப்பட்டதையும் பலர் பட்டியலிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X