»   »  அனிதா விவகாரம்: ரித்திகா சிங்கை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!

அனிதா விவகாரம்: ரித்திகா சிங்கை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'நீட்' தேர்வால் மருத்துவக் கனவு பறிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவிற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், 'இறுதிச் சுற்று' நடிகை ரித்திகா சிங் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

அவர் பதிவு செய்த அந்த ட்வீட்டால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். தற்கொலை செய்துகொண்டவருக்கு பாடம் எடுப்பதை விட்டுவிட்டு அரசைக் கேள்வி கேளுங்கள் எனக் கொந்தளித்தனர்.

Netizens puffed up against ritika's tweet

'மார்க் மட்டுமே வாழ்க்கையில்லை, படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் தான் உலகத்தில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர். தேர்வுகள் உங்களது வாழ்க்கையைவிட முக்கியமானவை அல்ல' என அனிதா தற்கொலையைப் பற்றி ட்வீட்டியிருந்தார் ரித்திகா சிங்.

அதைப் பார்த்த நெட்டிசன்கள் 'முதலில் எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள்' என அவரை வறுத்தெடுக்கத் துவங்கிவிட்டனர்.

பின்னர் இதுபற்றி விளக்கமளித்த ரித்திகா சிங், 'எனக்கு எல்லாம் தெரியும். நான் பேசியது ஒரு உயிர் போனதைப் பற்றி' எனக் கூறியுள்ளார்.

English summary
'Iruthi sutru' fame Ritika singh tweets about Anitha's suicide. Netizens puffed up against her tweet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil