»   »  நேத்தே ட்விட்டரை விட்டு போறேன்னு சொல்லிட்டு இன்னும் என்னம்மா பண்றீங்க காயத்ரி?

நேத்தே ட்விட்டரை விட்டு போறேன்னு சொல்லிட்டு இன்னும் என்னம்மா பண்றீங்க காயத்ரி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
தொடர்ந்து ட்வீட் செய்து வரும் காயத்ரி- வீடியோ

சென்னை: நான் ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன் என்று கோபமாக கூறிவிட்டு இப்படி தொடர்ந்து ட்வீட் போடுகிறீர்களே காயத்ரி ரகுராம் என்று நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தன்னை காங்கிரஸை சேர்ந்த மீம் கிரியேட்டர்கள் கலாய்ப்பதாக குற்றம் சாட்டினார் காயத்ரி ரகுராம். தான் இது குறித்து தொடர்ந்து ட்வீட்டியும் யாரும் ஆதரவு தெரிவிக்காததால் ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக நேற்று அறிவித்தார்.

இது தான் என் கடைசி ட்வீட் என்று கூறி ஒரு ட்வீட்டையும் போட்டார் அவர்.

கமல்

கமல்

கடைசி ட்வீட் என்று கூறிய பிறகும் இரண்டு முறை ட்வீட் போட்டார் காயத்ரி. அதில் ஒரு ட்வீட்டில் கமல் ஹாஸன் தனது தலைமுடியை பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். பிக் பாஸ் வீட்டில் காயத்ரி ம..ர் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியபோது அவரை கண்டித்த கமல் தனது தலைமுடியை பிடித்துக் காட்டிய புகைப்படம் தான் அது. பின்னர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

காயத்ரி

ட்விட்டரை விட்டு போவதாகக் கூறிவிட்டு இன்று காலையில் இருந்து தொடர்ந்து ட்வீட்டிக் கொண்டிருக்கிறார் காயத்ரி. இதை பார்ப்பவர்கள் இந்த அம்மா நேற்றே ட்விட்டரை விட்டு போனவர் தானே என்று கேட்கிறார்கள்.

அரசியல்

பெண்களுக்கு அரசியல் பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். அது ஏன் என்பது புரிந்துள்ளது. ஆனால் நான் அரசியலில் இருப்பேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க போராடுவேன். அவர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று இன்று ட்வீட்டியுள்ளார் காயத்ரி.

பெண்கள்

மறைந்த ஜெயலலிதா அம்மாவுக்கு ஹாட்ஸ் ஆஃப். அவர் உண்மையான இரும்பு மனுஷி. பெண்கள் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் சக பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பார்கள் என்பதால் அவர்களை வர விடாமல் ஆண்கள் தடுக்கிறார்கள் என்கிறார் காயத்ரி.

சித்தார்த்

விக்ரம், சித்தார்த், நண்பர் ஜே.கே. ஆனந்த் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

English summary
Gayathri Raghuram who went out of twitter yesterday is back and busy tweeting about politics, national affairs and others. Netizens are asking her as to what happened to the decision of staying away from twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X