தனுஷுக்கு போட்டியா போட்டோ போடுகிறாரா?... ஐஸ்வர்யாவிற்கு என்ன தான் ஆச்சு?

சென்னை : ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தனர்.

இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என சிலர் வதந்திகளை கிளப்பி வந்தாலும், பலரும் இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும். பிள்ளைகளுக்காக அனைத்தையும் மறந்து இவர்கள் மீண்டும் சேர வேண்டும் என ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தற்போது வரை கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்கள். தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா, கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பட இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவ்

சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவ்

தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு ஐஸ்வர்யா, சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து தான் ஒர்க் அவுட் செய்யும் போட்டோக்கள், சைக்கிளிங் செல்லும் வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகிறார். அவ்வப்போது கதை டிஸ்கஷனில் ஈடுபடுவது போன்ற போட்டோக்களையும் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஐஸ்வர்யா பகிர்ந்த போட்டோ

ஐஸ்வர்யா பகிர்ந்த போட்டோ

மிக அரிதாக தனது மகன்களுடன் இருக்கும் போட்டோக்களை பகிரும் ஐஸ்வர்யா, நேற்று தனது மகன்கள் இருவரையும் கட்டி அணைத்தது போன்ற போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த போட்டோ செம வைரலான நிலையில், இதற்கு லைக்குகள், கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.பலரும், சீக்கிரம் தனுஷ் உடன் ஒன்று சேருங்கள். உங்கள் பிரிவால் இந்த குழந்தைகளின் சந்தோஷம் பாதிக்கப்படுகிறது என அக்கறையாக அட்வைஸ் வழங்கி உள்ளனர்.

என்னாச்சு ஐஸ்வர்யாவுக்கு

என்னாச்சு ஐஸ்வர்யாவுக்கு

அதே சமயம் சிலர், எதற்காக இந்த பப்ளிசிட்டி. இவர் எப்போதும் கேமிராமேனை கூட வைத்திருப்பாரா. கொஞ்ச நாட்களாக இவர் என்ன செய்தாலும் அதை உடனே போட்டோ பிடித்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். என்னாச்சு இவருக்கு...திடீரென ஒர்க் அவுட் போட்டோவை பகிர்ந்து ஃபிட்னஸ் அட்வைஸ் வழங்குகிறார். திடீரென சென்டிமென்டாக ஏதாவது குடும்ப போட்டோவை வெளியிடுகிறார். ஒன்றுமே புரியவில்லையே என ரசிகர்கள் குழப்பத்துடன் கேட்டு வருகின்றனர்.

 தனுஷிற்கு போட்டியா போட்டோவா

தனுஷிற்கு போட்டியா போட்டோவா

ஆனால் நெட்டிசன்கள் சிலர், இவர் என்ன தனுஷிற்கு போட்டியாக போட்டோ போடுறாரா. தனுஷை விட தனக்கு தான் மகன்கள் மீது அதிக பாசம் உள்ளது என காட்டி கொள்ள முயற்சி செய்கிறார். எப்போதெல்லாம் மகன்கள் உடன் தனுஷ் இருக்கும் போட்டோ வெளியாகிறதோ, அடுத்த சில நாட்களில் இவரும் மகன்களுடன் இருப்பது போல் போட்டோ போஸ்ட் செய்கிறார்.

இப்போ எதுக்கு இந்த போட்டோ

இப்போ எதுக்கு இந்த போட்டோ

நானே வருவேன் ஷுட்டிங் ஸ்பாட்டில் தனுஷ், மகன் லிங்காவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்ததும் இவரும் மகன்களுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டார். இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தனுஷ், மகன்களுடன் சென்ற போட்டோவை தனுஷ் பகிர்ந்த போதும், இவர் மகன்கள் மடியில் அமர்ந்தது போன்ற போட்டோவை பதிவிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் லாஸ் ஏஞ்சல்சில் தி கிரே மேன் ப்ரீமியர் ஷோ நிகழ்வில் தனுஷ் மகன்களுடன் கலந்து கொண்ட போட்டோ டிரெண்டானது. இப்போது இவரும் மகன்களை கட்டி அணைத்தது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Ram Pothineni Exclusive | |Dhanush ஐ தெலுங்கில் Launch செய்த பெருமை எங்களுக்கு இருக்கு | *Interview
ஆதங்கத்தை கொட்டும் நெட்டிசன்கள்

ஆதங்கத்தை கொட்டும் நெட்டிசன்கள்

மற்ற நேரங்களில் ஒர்க்அவுட் போட்டோக்களை மட்டும் பகிரும் ஐஸ்வர்யா, எதற்காக தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் போட்டோவை பதிவிடும் போதெல்லாம் கரெக்டா இவரும் மகன்கள் போட்டோவை பகிர்கிறார். என்ன தான் சொல்ல வருகிறார் என ஆதங்கத்துடன் அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X