Don't Miss!
- Sports
ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. அதிர்ஷ்டத்தால் நியூசி,யை இந்தியா வீழ்த்தியதா??.. பாக். சீனியர் விளாசல்!
- Lifestyle
உங்க கேஸ் அடுப்பில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை நீக்கி புதியது போல மாற்ற இந்த சாதாரண பொருட்களே போதும்!
- Automobiles
இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு ஸ்கூட்டரா! ஹோண்டா ஆக்டிவாவின் ஆட்டத்தை முடிக்க போகும் ஹீரோ தயாரிப்பு!
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- News
இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை.. ஆதரவு இவருக்குத்தான்..அண்ணாமலை ஆலோசனையில் நடந்தது என்ன? பின்னணி
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒரு பூஜை கூட கிடையாதா?...ஜெயிலர் பட டீமை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி அடுத்ததாக நடிக்க உள்ள ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் பற்றிய தகவல் தான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் அதிகம் விவாதிக்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.
படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் ஷுட்டிங் துவங்கப்படவில்லை. என்ன காரணத்திற்காக ஷுட்டிங் தள்ளிப் போகிறது. படம் கைவிடப்பட்டதா என கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
ஆனால் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீசிற்கு பிறகு படக்குழு சார்பிலோ, சன் பிக்சர்ஸ் சார்பிலோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்திருந்தனர்.
தென்னிந்திய நடிகர்களில் பிடித்த ஹீரோ யார்? டக்குன்னு பதில் சொன்ன நாகசைதன்யா.. அடடே இவரா?

ரம்யா கிருஷ்ணன் சொன்ன அப்டேட்
இந்நிலையில் ஜெயிலர் ஷுட்டிங் ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் 22 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக சோஷியல் மீடியாவில் ஒரு தகவல் பரவியது. அதே சமயம், ஆகஸ்ட் 10 ம் தேதி முதல் ஜெயிலர் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது. தான் ஜெயிலர் படத்தில் நடிக்கிறேன் என பேட்டி ஒன்றில் அப்டேட் வெளியிட்டார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதனால் எது உண்மை என தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.

ஜெயிலர் ஷுட்டிங் ஆரம்பிச்சுட்டாங்களா?
ஆனால் ரம்யா கிருஷ்ணன் சொன்னது தான் உண்மை என்பது போல் இன்று சென்னையில் ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டுள்ளதாகவும், முதல் நாள் ஷுட்டிங்கில் ரம்யா கிருஷ்ணன், கிங்ஸ்லே, வசந்த் ரவி ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ரஜினி இல்லாமல் ஜெயிலர் ஷுட்டிங் துவங்கப்பட்டு விட்டதாகவும், ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் தான் ரஜினி ஷுட்டிங்கில் கலந்து கொள்ள போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதிர்ச்சியில் ரசிகர்கள்
இதனால் ட்விட்டரில் #Jailer, #Rajinikanth போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி உள்ளன.ஜெயிலர் பட ஷுட்டிங் துவங்கி விட்டதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும், மற்றொரு புறம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது. ரஜினி இல்லாமல் எப்படி ஷுட்டிங்கை துவக்கினார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Recommended Video

ஒரு பூஜை கூட இல்லையா?
இது ரஜினி மற்றும் நெல்சனுக்கு நிச்சயம் ஒரு கம்பேக்காக அமையும் என சிலர் நம்பிக்கை தெரிவித்தாலும், அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய படம். அதுவும் ரஜினி படத்திற்கு ஒரு பூஜை கூட இல்லையா? ஒரு அறிவிப்பு கூட இல்லாமல் இப்படி ஆரம்பிச்சிருக்காங்க. சாதாரண நடிகர்கள் படத்திற்கு கூட பெரிய அளவில் அறிவிப்பு, பூஜை நடத்தப்பட்டு ஷுட்டிங்கை துவக்கும் போது, ரஜினி படத்திற்கு இப்படி பண்ணிருக்காங்களே. அதுவும் ரஜினி இல்லாமல் ஷுட்டிங்கா?

இதுவும் வழக்கமான நெல்சன் படம் தானா?
ஆகஸ்ட் 15 ல் ரஜினி கலந்து கொள்வார் என்றால் அன்றைக்கே ஷுட்டிங்கை துவக்கி இருக்கலாமே. இன்றைக்கே எந்த அறிவிப்பும் இல்லாமல் துவங்க வேண்டியதன் அவசரம் என்ன? ஐஸ்வர்யா ராய், சிவ ராஜ்குமார், சிவ கார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் எல்லாம் நடிப்பதாக தகவல் வந்தது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் கிங்ஸ்லே, வசந்த் ரவி ஷுட்டிங்கில் கலந்து கொள்கிறார்கள் என்றார்கள். அப்படின்னா இதுவும் வழக்கமான நெல்சன் படம் தானா? என நெட்டிசன்கள் கண்டபடி கேள்விகளையும், சந்தேகங்களையும் அடுக்கி வருகின்றனர்.