நிரூப் சண்டையா முக்கியம்...அமீர் கிஸ் அடிப்பதை பற்றி கேட்கமாட்டிங்களா ஆண்டவரே?
சென்னை : பிக்பாஸ் வீட்டிற்குள் இதுவரை நடந்த சண்டைகள், மோதல்கள் அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது பாவனி - அமீர் காதல் விவகாரம். அந்த அளவிற்கு நான் ஸ்டாப்பாக போய் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் பாவனி - அபினய் இடையேயான காதல் விவகாரத்தால் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்து ஓய்ந்தது. ராஜு கேட்டதை தவறு என்று சொன்னவர்கள், பிறகு அனைவருமே தங்களுக்கும் அந்த சந்தேகம் உள்ளது என பேச துவங்கி விட்டனர்.

என்ன சொல்றீங்க பாவனி
ஆனால் எவ்வளவு பிரச்சனையாக வெடித்தாலும் தான் பாவனியை ஃபிரண்டாக தான் நினைப்பதாக கடைசி வரை சொல்லி வந்தார் அபினய். தானும் ஃபிரண்டாக நினைப்பதாக பாவனியும் சொன்னாலும், மற்றவர்களுக்கு இருப்பதை போலவே அபினய் தன்னை காதலிக்கிறாரா என்ற எண்ணம் தனக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்.

வாயடைத்து போன கமல்
வாரா வாரம் வரும் கமல் மற்ற பிரச்சனைகள் பற்றி எல்லாம் பேசுகிறார். இவர்களின் காதல் விவகாரம் பற்றி பேச மாட்டாரா என பாவனி, ரசிகர்கள் என பலரும் கேட்டனர். அதற்கு பிறகு கமலும் இது பற்றி கேட்டதுடன், மற்ற போட்டியாளர்களையும் கண்டித்தார். ஆனால் அடுத்த நாளே தனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக கூறி கமலையே குழம்ப வைத்தார். அதற்கு பிறகு கமல் அந்த விவகாரம் பற்றி பேசவேயில்லை.

முத்தம் கொடுத்த அமீர்
அந்த வாரமே அபினய்யும் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். இதனால் பிரச்சனை ஓய்ந்தது என்று பார்த்தால், அதுவரை நெருக்கமாக பழகி வந்த அமீர், பாவனியிடம் லவ் ப்ரபோஸ் செய்து விட்டார். அதோடு விடாமல் முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்வது என விவகாரம் முற்றிப் போனது. பாவனியும் அவருக்கு சிரித்தபடி நோ சொல்கினாரே தவிர, பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. இது ரசிகர்களை கடுப்பாக்கியது.

இவருக்கு இது தான் வேலையா
என்ன டிரெஸ் போடுவது என்று கூட பாவனி, அமீரிடம் தான் கேட்கிறார். அமீர், ரொமான்சாக பேசுகிறார். உன்னை தவறாக காட்டி விட்டனோ என கவலைப்படுகிறார். இரந்தாலும் பாவனி பின் சுற்றுவதை நிறுத்தவில்லை. பாவனியோ, நீ எனக்கு ஃபிரண்ட் தான் என கூறி வருகிறார். இதற்கிடையில் அமீரின் கதையை கேட்டு விட்டு, இவர் அவரது சூழ்நிலையை மற்ந்து விட்டு எதற்காக பாவனி பின்னாலேயே சுற்றுகிறார் என நெட்டிசன்கள் கழுவி ஊற்ற துவங்கி விட்டனர்.

இதெல்லாம் கேட்க மாட்டீங்களா
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில், கேப்டன்சி டாஸ்கின் போது நிரூப், பிரியங்காவை கடுமையாக திட்டியதை கமல் விசாரிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், நிரூப்பை தான் எப்பவும் கேட்பீர்களா, அமீர் செய்வதெல்லாம் கமல் கண்டு கொள்ள மாட்டாரா. அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்ததை கடந்த வாரமும் கமலோ, பிக்பாசோ கேட்வில்லை. இந்த வாரமாவது கமல் கேட்பாரா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதுவா இப்போ முக்கியம்
நிரூப் - பிரியங்கா சண்டை எப்போதும் நடப்பது தான். அதுவா இப்போது முக்கியம். ஒருத்தன் கிஸ் அடிக்கிறான். பெரிய லவ் சீனே ஓட்டிக்கிட்டு இருக்கான் அவனை கேட்க மாட்டீங்களா ஆண்டவரே என கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











