என்னாச்சு ஐஸ்வர்யாவுக்கு...யாருக்கு என்ன மெசேஜ் சொல்ல வர்றாரு ?

சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் சமீபத்திய சோஷியல் மீடியா போஸ்ட்களை வைத்து, அவர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார். என்னாச்சு அவருக்கு, யாருக்கு என்ன மெசேஜ் சொல்ல வருகிறார் என பலரும் கேட்டு வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாக இருவரும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர்.

 ரசிகர்களின் விருப்பம்

ரசிகர்களின் விருப்பம்

அதற்கு பிறகு இவர்களின் விவாகரத்திற்கு என்ன காரணம் என ஏராளமான வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரவின. இவர்களை சமாதானப்படுத்த குடும்பத்தினர் உள்ளிட்டோர் பலர் முயற்சித்தனர். இந்த தம்பதி மீண்டும் சேர வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் ஐஸ்வர்யாவும், தனுஷும் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தனர்.

என்ன இப்படி போஸ்ட் போடுறாரு

என்ன இப்படி போஸ்ட் போடுறாரு

தனுஷை பிரிய முடிவு செய்திருப்பதாக போட்ட போஸ்டிற்கு பிறகு சோஷியல் மீடியா பக்கமோ தலை காட்டாமல் இருந்த ஐஸ்வர்யா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட பிறகு மோஷியல் மீடியாவில் செம ஆக்டிவானார். காபி குடிப்பது, புத்தகம் படிப்பது, மகன்களுடன் இருப்பது, ஒர்க் அவுட் செய்வது என அனைத்தையும் தொடர்ந்து போஸ்ட் போட துவங்கினார். எந்த தினம் வந்தாலும் அவை அனைத்திற்கும் ஒரு போஸ்ட் போட்டு வருகிறார்.

பாலிவுட்டில் பிஸியாகிறாரா

பாலிவுட்டில் பிஸியாகிறாரா

படங்களை பற்றிய சில போஸ்டர்களையும் போட்டு வந்ததால் பாலிவுட்டில் படம் இயக்க போகிறார். அதற்காக தான் இந்த போஸ்ட் என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப நாட்களாக டைரக்ஷன் பற்றிய விஷயங்களை விட தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய போட்டோக்களை தான் அதிகம் போஸ்ட் செய்து வருகிறார் ஐஸ்வர்யா.

என்ன ஆச்சு ஐஸ்வர்யாவுக்கு

என்ன ஆச்சு ஐஸ்வர்யாவுக்கு

அப்படி தற்போது #WorldEarthDay முன்னிட்டு பஞ்ச பூதங்களின் அவசியத்தை கேப்ஷனாக பதிவிட்டு, சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஹோமத்தில் கலந்து கொண்டது, அருவியில் குளிப்பது, தியானம் செய்தது என வரிசையாக பல போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள், என்னவாயிற்று இவருக்கு. எதற்காக இப்படி போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். யாருக்கு என்ன மெசேஜ் சொல்ல நினைக்கிறார் என கேட்டு வருகின்றனர்.

தனுஷிற்காக தான் இந்த போஸ்டா

தனுஷிற்காக தான் இந்த போஸ்டா

அதே சமயம் இன்னும் சிலர், தனுஷ் தன்னை கவனிக்க வேண்டும் என்று தான் ஐஸ்வர்யா இப்படியெல்லாம் செய்கிறாரா. தனுஷை பிரிந்த மன உளைச்சலில் இருக்கிறீர்கள் என அப்பட்டமாக தெரிகிறது. தனுஷின் கவனத்தை ஈர்க்க இப்படியெல்லாம் செய்கிறீர்களா அல்லது என்ன செய்கிறோம் என தெரியாமல் பதற்றத்தில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறீர்களா. மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்க நினைக்கிறாரா ஐஸ்வர்யா என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X