பாவனிக்கு மட்டும் பாட்டா.... என்னமோ நடக்குது...பிக்பாசை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். 5 பேர் இதுவரை வெளியேறி உள்ள நிலையில் தற்போது 13 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்த நிலையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நடந்ததை விட தற்போது நடந்து வரும் ஆறாவது வாரத்தில் பயங்கர அடிதடி சண்டை, கலாட்டாவுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பூவுக்கு பொறந்தநாளு
நிகழ்ச்சியின் 37 வது நாளான நேற்று லக்சுரி பட்ஜெட் டாஸ்க் பயங்கர சண்டை மோதலுடன் நடைபெற்றது. இந்த டாஸ்கிற்கு இடையே திடீரென, பூவுக்கு பொறந்தநாளு பாடல் ஒலிபரப்பப்பட்டு, பாவனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார் பிக்பாஸ். பிறகு பிக்பாஸ் அனுப்பிய கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் பாவனி. அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து கூறி பேசிய ஏவி ஒளிபரப்பப்பட்டது.

பிக்பாசை கலாய்த்த நெட்டிசன்கள்
இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள் பிக்பாசை செமயாக கலாய்த்து வருகிறார். என்ன பிக்பாஸ் பாவனிக்கு மட்டும் ஸ்பெஷல் சாங் பிறந்தநாளைக்கு. என்னமோ நடக்குது என கூறி உள்ளனர். ஒருவேளை பாவனியை வெளியே அனுப்ப பிளான் பண்ணிட்டாரா பிக்பாஸ். பிறந்தநாள் ஸ்பெஷல் சாங். நாமினேஷனின் போது காயின் பயன்படுத்துறீங்களான்னு பாவனி கிட்ட கேட்குறார். இது தான் க்ளூவா என கேட்கின்றனர்.

பாவனி மேல லவ்ஸ்
அதே சமயம் பாவனியின் தீவிர ரசிகர்களோ, பூவுக்கு பொறந்தநாளு...எவனோ நம்ம பய தான் இந்த பாட்டு போட்டிருக்கான். அக்ஷராவ விட பாவனி எவ்வளடோ பரவாயில்லை என கூறி உள்ளனர். பிக்பாஸ்க்கு பாவனி மேல ஒரு லவ்ஸ் தான் என கலாய்த்துள்ளனர்.

கன்ஃப்யூஸ் பண்ணத்தான் பாட்டா
பாவனிய போட முடிவு பண்ணிட்டாங்களா. அவங்க அலார்ட்டா இருக்காங்களான்னு பார்த்து பொம்மை டாஸ்க்கில் கன்ஃப்யூஸ் பண்ண தாம்ப்பா இந்த பாடல். வீட்டில் இருப்பவர்களில் முதலில் பிறந்தநாள் கொண்டாடுபவர் என்பதால் அவருக்கு பாட்டு போட்டிருக்காங்க. வேறு ஒன்னும் இல்லைப்பா என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். அதே சமயம் சுருதி வெளியே போறதுக்கு அடுத்த நாள் கூட அவருக்கு பிறந்தநாள் தான். ஆனால் பிக்பாஸ் அவர வாழ்த்தலியே. ஒரு ஆல் தி பெஸ்ட் கூட சொல்லலியே என கேட்டுள்ளனர்.

யாருக்கும் வாழ்த்து இல்லையே
வழக்கமாக எல்லா சீசனிலும் யாராவது வெளியே போகும் போது அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்புவார் பிக்பாஸ். ஆனால் இந்த சீசனில் இதுவரை வெளியேறிய ஒருவருக்கு கூட பிக்பாஸ் வாழ்த்து சொல்லி அனுப்பலியே என பலர் சந்தேகம் கிளப்பி உள்ளனர்.

க்ளூ கொடுக்குறாங்களா
இதற்கிடையில் கமல் யாரையெல்லாம் நல்லா விளையாடுங்க என குறிப்பிட்டு அதிகம் பேசுகிறாரோ அவர் அடுத்த வாரம் வெளியேறி விடுகிறார். கமல் வந்து க்ளூ கொடுக்குறாரா என சிலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். சனிக்கிழமை காலை ஒலிபரப்பப்படும் பாட்டை வைத்தே வெளியேற போவது யார் என்பதை கண்டுபிடிக்கும் ஜோசியம் வைத்துள்ளதாக சமீபத்தில் அண்ணாச்சியே சொன்னார்.

உள்குத்து இருக்குமோ
அதுபோல் ஏதாவது உள்குத்தோட தான் பாவனி பிறந்தநாளைக்கு பாட்டு போட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பி விட்டுள்ளனர். அதோடு, பாவனியின் குடும்பத்தினர் பேசும் போது, நீ யாருக்கும் உன்னை ப்ரூ பண்ண தேவையில்லை. உனக்காக விளையாடு என கூறினர். அதெப்படி இது போல எல்லாம் க்ளூ கொடுக்க அனுமதிக்கிறார்கள் என்று கூட சிலர் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











