twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியில் மட்டும் அது இல்லயே...தமிழில் இருந்த தைரியம் இப்போ இல்லையா...பயந்துட்டாரா கமல் ?

    |

    சென்னை : விக்ரம் படத்தின் பாடல் தமிழில் ஒரு மாதிரியும், இந்தியில் வேறு மாதிரியும் எழுதப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. நேரடியாக மோத முடியாமல் பயந்துட்டாரா கமல் என பலரும் கேட்டு வருகின்றனர்.

    கமல் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் எப்போ ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படம் பற்றி வெளியாகும் அடுத்தடுத்த தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. ரிலீசிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் டிக்கெட் புக்கிங் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஊரில் மட்டும் விக்ரம் முக்கூட்டியே ரிலீசாகுதாம்...கொடுத்து வைத்த ரசிகர்கள் இந்த ஊரில் மட்டும் விக்ரம் முக்கூட்டியே ரிலீசாகுதாம்...கொடுத்து வைத்த ரசிகர்கள்

     சர்ச்சை பத்தல பத்தல

    சர்ச்சை பத்தல பத்தல

    விக்ரம் படம் ஃபர்ஸ்ட் சிங்கிளாக பத்தல பத்தல பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையை சந்தித்தது. இதில் ஒன்றிய அரசை விமர்சித்து கமல் எழுதி வரிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரையில் கமலை காண்பது. கமலின் டான்ஸ், பாடல் ஆகியவற்றை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்தியில் வந்த பத்தல பத்தல

    இந்தியில் வந்த பத்தல பத்தல

    இதைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிளாக போர்கண்ட சிங்கம் சென்டிமென்ட் பாடல், மூன்றாவது சிங்கிளாக வேஸ்டட் பாடல் ஆகியன வெளியிடப்பட்டன. இவைகளும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. பட ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் இன்று விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலை இந்தி வெர்சன் வெளியிடப்பட்டது. இந்த பாடலை சமீபத்தில் பாடியதாக கமலே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருந்தார்.

    இந்தியில் மட்டும் அது இல்லியே

    இந்தியில் மட்டும் அது இல்லியே

    இந்தியில் இந்த பாடல் பதலே...பதலே என துவங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலையும் கமல் தான் எழுதி, பாடி உள்ளார். ஆனால் தமிழ் வெர்சனில் இடம்பெற்ற, ஒன்றிய அரசு வந்தும் பலனில்லை என்ற வரிகள் மட்டும் இடம்பெறவில்லை. மற்ற வரிகள் எதுவும் மாற்றப்படவில்லை. இதனால் நெட்டிசன்கள், கமல் பயந்துட்டாரா. தமிழில் எழுதும் போது இருந்த தைரியம், இந்தியில் இல்லாமல் போய் விட்டதா என கேட்டு வருகின்றனர்.

     பயந்துட்டாரா கமல்

    பயந்துட்டாரா கமல்

    மத்திய அரசு அல்லது ஆளும் கட்சியை கமல் கேள்வி கேட்கவோ அல்லது விமர்சிப்பது உண்மையாக இருந்தால் இந்தியில் எழுதும் போது தமிழை விட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தானே இந்தியில் பாடல் எழுதி இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை. படம் ஓடாது என பயந்து விட்டாரா கமல் என நெட்டிசன்கள் கேள்வி வருகின்றனர்.

    English summary
    Netizens questioning that did Kamal scarred on Central government. For this reason he removed that particular line for hindi version which criticise central government. Why Kamal removed that line in hindi version alone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X