For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  போன சீசன்தான்.. ஆள்தான் மாறியிருக்காங்க.. உலக மகா நடிப்புடா சாமி.. பயில்வானை விளாசும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் ஷிவானிக்காக கண்ணீர் விட்ட பாலாஜியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

  பிக்பாஸ் வீட்டில் இன்று தொடங்கிய ஃபிரீஸ் டாஸ்க்கில் முதல் நபராய் உள்ளே வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜியுடனான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை திட்டி தீர்த்தார்.

  ஆனா ஆவன்னா அப்னா டைம்னா.. மாஸ்டர் ரிலீஸ்.. அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்!

  இதனை பார்த்த பாலாஜி, தன்னால் தான் எல்லாமே என்று கண்ணீர் விடுகிறார். மேலும் தனக்கு குற்ற உணர்ச்சியாக இருப்பதாகவும் ஆஜித்திடம் புலம்புகிறார்.

  நல்லாவே நடிக்கிறார்

  நல்லாவே நடிக்கிறார்

  இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜி நல்லாவே நடிக்கிறார் என்று சாடி வருகின்றனர். சுச்சி வந்து கூறிய பிறகுதான் ஷிவானியிடம் ரொம்பவே நெருக்கமானார் பாலாஜி என்றும் தற்போது ஒன்றுமே தெரியாதது போல் நடிக்கிறார் என்றும் கூறி விளாசியுள்ளார்.

  நீதான் காரணம்

  நீதான் காரணம்

  புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீ பெரிய நடிகன் பயில்வான். நீ யாருன்னு எங்களுக்கு தெரியும் ஓரமா போய் உட்காரு. அந்த பொண்ணு வீணா போனதுக்கு நீதான் காரணம் என திட்டியுள்ளார்.

  எதுக்கு அனுப்பணும்?

  எதுக்கு அனுப்பணும்?

  19 வயசுல எவ்ளோ முதிர்ச்சி இருக்கும் இந்த பிரஷர சமாளிக்க! அவங்கம்மா கொஞ்சம் ஓவர்? அப்படி அவ்ளோ கஷ்டம்னா எதுக்கு பிக்பாஸுக்கு அனுப்பனும்! வீட்டில போய் புத்திமதி சொல்றத விட்டுட்டு இங்க இத்தனை கேமரா முன்னாடி பேசியிருக்க வேணாம்.. அவர் ஏற்கனவே டிப்ரஸாயி இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

  ஏதாவது சொல்லியிருப்பாரா?

  ஏதாவது சொல்லியிருப்பாரா?

  புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு நாளாவது இந்த பயில்வான் தன் அடிமைகளான ஆஜித்துக்கும் சிவானிக்கும், முன்னேறுவதற்கு ஏதாவது சொல்லியிருப்பாரா?. இல்லையே! என்று பாலாஜியை விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

  கவின்னு நினைப்பு?

  கவின்னு நினைப்பு?

  பாலாஜி அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், உனக்கு கவின்னு நினைப்பு? நீ கவினுக்கு பக்கத்தில நிற்க கூட தகுதியில்லாத டுபாக்கூர் பயில்வான். கவின் என்ன தப்பு பண்ணுனாலும் அடுத்தவங்கள மதிக்க தெரிஞ்சவர் தலைக்கணம் இல்லாதவர் பொய் சொல்ல மாட்டார் உன்னை மாதிரி. உலகத்துல ஒரு மனுசனுக்கு எது எல்லாம் இருக்ககூடாதோ அதுக்கு சொந்தக்காரன் நீ என கன்னாபின்னாவென வாங்கியுள்ளார் இந்த நெட்டிசன்.

  நம்பர் ஒன்..

  நம்பர் ஒன்..

  பாலாஜி ஒன்றுமே தெரியாதது போல் அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜி உலக மகா பிராடுல நம்பர் ஒன்.. என்று கழுவி ஊற்றியுள்ளார்.

  பக்கோடா பயில்வான்

  பக்கோடா பயில்வான்

  பாலாஜி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இப்போ திருடனுக்கு தேள் கொட்டியது போல இருக்காம்!... ஆஜித்தையும் சிவானியையும் தன் அடிமைகளாக்கிய பக்கோடா பயில்வான்.. என விளாசியுள்ளார்.

  லிஸ்ட்லயே இல்லையே..

  லிஸ்ட்லயே இல்லையே..

  இரண்டாவது புரமோவில் பாலாஜி அழுவதை பார்த்த நெட்டிசன், அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்ல இல்லையே... என வாயை பிளந்துள்ளார்.

  அனுபவி ராஜா அனுபவி..

  அனுபவி ராஜா அனுபவி..

  புரமோவை பாரத்த இந்த நெட்டிசன், தம்பி பயில்வான் பாலாஜி இதை தானே ஆரி உனக்கு வந்த நாளில் இருந்து கூறினார். ஷிவானியுடன் சேர்ந்து விளையாடாத தனியா விளையாடு. வெளிய வேறமாதிரி ப்ரொஜெக்ட் ஆகுது என்று. இதை சொன்னதுக்கு ஆரிய என்னபேச்சு பேசினாய்? இப்ப அனுபவி ராஜா அனுபவி.. ஆரி சொன்னதை கேட்டிருந்தால் இப்ப நீ அழுதிருக்கமாட்டாய் என கூறியுள்ளார்.

  ஆரி மட்டுமே எதிர்த்தார்..

  ஆரி மட்டுமே எதிர்த்தார்..

  இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜி அன்ட் ஷிவானி பண்ணதுக்கு.. அர்ச்சனா, சுச்சி, ரம்யா இப்படி எல்லாரும் உதவி பண்ணாங்க மற்றும் ஏத்தி விட்டாங்க.. ஆரி மட்டுமே எதிர்த்தார்! உண்மையா இருந்தா பண்ணுங்க இல்லனா கூட ஒட்டிகிட்டு வேலை செஞ்சிட்டு இருக்காத! தனியா விளையாடுனு.. என்று பதிவிட்டுள்ளார்.

  பெற்றோரின் நிலை என்ன?

  பெற்றோரின் நிலை என்ன?

  புரமோவில் பாலாஜி கண்ணீர்விட்டு புலம்புவதை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு செயலை செய்யும் முன் யோசிச்சு செய்ய வேண்டும். செய்து விட்டு புலம்பி என்ன பயன்? காதல் என்று சொல்லி இருந்தால் கூட ஏற்று கொள்ளலாம். காதல் இல்லை, ஆனால் காதலர்கள் போன்ற காட்சி. பெற்றோர் நிலை வேற எப்படி இருக்கும்? என பதிவிட்டுள்ளார்.

  போன சீசன் புரமோ

  போன சீசன் புரமோ

  புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரமோ போன சீஸன்ல இருந்து எடுத்தது என்ன ஆள் தான் மாறியிருக்காங்க என கடந்த சீசனில் கவின் செய்ததை ஒப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

  English summary
  Netizens reactions over Biggboss second promo. Netizens says Balaji acting world level.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X