Mohanlal Net Worth: பல நூறு கோடிகளுக்கு அதிபதி.. கேரளாவில் மட்டும் இத்தனை சொத்துக்களா?
கொச்சி: மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், சினிமா உலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது 2023-க்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு செப்டம்பர் 23 அன்று அதாவது நாளை மறுநாள்அவருக்கு இந்த விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது. இந்தியத் திரையுலகில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக மோகன்லால் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைப்பட விநியோகஸ்தர், பாடகர் என சகலகலா வல்லவனாக அவர் தனக்கான தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். தனது திரைப் பயணத்தில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மலையாளத் திரையுலகம் மட்டுமல்லாமல், டோலிவுட், கோலிவுட், பாலிவுட் போன்ற பிற இந்திய மொழித் திரையுலகங்களிலும் பணியாற்றியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.
65 வயதிலும் அவர் ஓய்வின்றி தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக, ஆக்ஷன் திரைப்படங்களில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மோகன்லால் தனது நடிப்பு வாழ்க்கையில் எவ்வளவு கோடி சம்பாதித்துள்ளார் என்பது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல்வேறு தகவல்களின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு நூற்றுக்கணக்கான கோடிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சம்பளமும் முதலீடும்: ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சுமார் ரூபாய் 30 கோடி வரை சம்பளமாக பெறுவதகா தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனது வருவாயை முதலீடுகளில் செலுத்தி வந்துள்ளார். கொச்சியில் அவருக்கு ஒரு பெரிய மருத்துவமனை சொந்தமாக உள்ளது. கேரளா மற்றும் பிற மாநிலங்களில் மோகன்லாலுக்குப் பல உணவகங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கொச்சியில் ஒரு ஆடம்பரமான திரையரங்கையும் அவர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், ரோல்ஸ் ராய்ஸ் கார், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி, போர்ஷே கெய்ன், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் ஆடம்பர படகுகள் எனப் பலவற்றையும் அவர் சொந்தமாகக் கொண்டுள்ளார்.
பங்களாக்கள்: கொச்சி நகரின் குந்தனூரில் 9,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு ஆடம்பரமான டூப்ளக்ஸ் அபார்ட்மென்ட் அவருக்குச் சொந்தமாக உள்ளது. இதன் மதிப்பு கோடிகள் ஆகும். அதேபோல், கொச்சியில் உள்ள தேவாராவில் ஒரு ஆடம்பரமான வில்லாவையும் மோகன்லால் வைத்துள்ளார். கொச்சியில் உள்ள ஐடென்டிட்டி பில்டிங் காம்ப்ளக்ஸின் 15 மற்றும் 16-வது தளங்களில் அவருக்குச் சொந்தமான பிளாட்டுகளும் உள்ளன. பிரணவம் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் புரொடக்ஷன் நிறுவனம், மேக்ஸ் சினிமாஸ் அண்ட் எண்டர்டெயின்மென்ட் தியேட்டர்ஸ், மற்றும் பிரீ அண்ட் போஸ்ட் புரொடக்ஷன் நிறுவனமான விஸ்மாயஸ் மேக்ஸ் ஆகியவையும் மோகன்லாலுக்குச் சொந்தமானவை.
சொத்து மதிப்பு: இதன் மூலம் அவர் ஆண்டுக்கு பல கோடிகளை ஈட்டி வருகிறார். இந்தச் சொத்துக்களின் நிகர மதிப்பு ரூபாய் 470 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல்கள் கூறப்படுகிறது. மலையாளத் திரையுலகிலேயே மிகவும் பணக்காரர் பட்டியலில் மோகன்லால் பெயர் உச்சரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும் யூகங்களின் அடிப்படையிலானது. மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லாலும் இளம் நடிகராகப் பெரும் வருவாயை ஈட்டி வருகிறார். "ஹிருதயம்" திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் அங்கீகாரத்தைப் பெற்ற அவர், தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











