twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாக்குப்பதிவு...பல பேர காணோமே?இணையத்தில் போட்டோக்களை தேடும் ரசிகர்கள்! மாறுவேடத்தில் யார் வந்தது?

    |

    சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

    முன்னணி நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், என்று பலரும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்..

    3 வாரத்திலே டபுள் எவிக்ஷனா? இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியேற போறது இவங்க தானா?3 வாரத்திலே டபுள் எவிக்ஷனா? இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியேற போறது இவங்க தானா?

    அனைவரும் கண்டிப்பாக வாக்கு செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் நிலையில், பல சினிமா பிரபலங்கள் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றது.

    காலையிலேயே ஷார்ப்பா வந்த விஜய்

    காலையிலேயே ஷார்ப்பா வந்த விஜய்

    காலையிலேயே நடிகர் விஜய் சிகப்பு நிற காரில் சிம்பிளாக வந்து தனது வாக்கினை செலுத்தினார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாதாரண எளிமையாக சுடிதாரில் வந்து தனது ஜனநாயக கடமையை செய்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் டிரைவர் ஜமுனா படத்தின் தயாரிப்பாளருமான எஸ்.பி சவுத்ரியும் தனது ஜனநாயக கடமையை செய்துள்ளார்.சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து வந்து தங்களது ஜனநாயக கடமையை செய்தனர்.

    வெள்ளை சட்டையில் அருண் விஜய்

    வெள்ளை சட்டையில் அருண் விஜய்

    நடிகர் அருண்விஜய் வாக்களித்த புகைப்படங்களும் அவர் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. நடிகர் எஸ்வி சேகர் தனது தாயுடன் வந்து வாக்களித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. பல பிரபலங்களும் வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் முன்னணி நடிகர்களான அஜித், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்,விக்ரம் வாக்களிக்கவில்லை என்று முணுமுணுத்து வரும் நிலையில், அதற்கான காரணங்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    காரணம் பதிவிடும் ரசிகர்கள்

    காரணம் பதிவிடும் ரசிகர்கள்

    நடிகர் அஜித் மும்பையில் இருப்பதாகவும், நடிகர் தனுஷ் ஐதராபாத்தில் இருப்பதாகவும், நடிகர் சிவகார்த்திகேயன் காரைக்காலில் இருப்பதாகவும், நடிகர் சிம்பு மும்பையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் தனது ஜனநாயக கடமையை முடித்துவிட்ட நிலையில், தனது மகனை சென்னைக்கு வந்து ஓட்டு போட சொல்லி இருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

    ஆளே காணோம்

    ஆளே காணோம்

    அது போலவே முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, நயந்தாரா, திரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் வாக்களித்துவிட்டார்களா? இல்லையா? இல்லை ஓட்டு போடவே வரவில்லையா? என்று பல கேள்விகள் குழப்பங்கள் இருக்கும் வேளையில், இவர்களது புகைப்படங்களை ரசிகர்கள் இன்டர்நெட்டில் தேடி வருகின்றனர். இவர்கள் வாக்களித்த புகைப்படங்கள் வெளிவருமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    மறைமுகமாக மாறுவேடத்தில்

    மறைமுகமாக மாறுவேடத்தில்

    சினிமா நட்சத்திரங்கள் ஒரு பக்கம் ஓட்டு போட்டார்களா இல்லையா என்பதை ரசிகர்கள் தேடி வருகிறார்கள், இன்னொரு பக்கம் மிகவும் பிரபலமான சீரியல் நடிகர்கள், நடிகைகள் எங்கே போனார்கள் ? இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை இல்லையா அல்லது மறைமுகமாக மாறுவேடத்தில் வந்து ஓட்டு போட்டு விட்டு செல்கிறார்களா? . பிக் பாஸ் கன்டஸ்டன்ட்ஸ் பல பேர் சென்னையில் இருந்தும் அவர்கள் ஓட்டு சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் எதுவும் பரபரப்பாக வரவில்லை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் சீரியல் பார்க்கும் பெண்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசுரத்தனமான ரசிகர்கள் இந்த ஜனநாயக கடமையை பற்றி ஓட்டுரிமை பற்றியும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த சீரியல் மற்றும் பிக் பாஸ் பிரபலங்கள் ஓட்டுப்போட்ட புகைப்படங்கள் விரைவில் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். அனைவரும் கண்டிப்பாக வாக்கு செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் நிலையில், பல சினிமா பிரபலங்கள் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றது.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X