பிரியங்கா உடல் வலிமை இல்லாதவரா...யார் சொன்னது...அடித்து நொறுக்கும் நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் பிரியங்கா, தாமரை இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு மோதிக் கொண்ட விவகாரம் தான் பெரிதாக வெடித்துள்ளது. யார் மீது தவறு என்பது பற்றி பெரிய ஆராய்ச்சியும், விவாதமும் நடந்து வருகிறது.

இந்நிலையில் தாமரையின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பிரியங்காவை வெறுப்பவர்களும் சேர்ந்து பிரியங்கா இதற்கு முன் செய்த தவறுகள், அவர் எப்படி சூழ்நிலைக்கு ஏற்ப மாறி, மாறி நடந்து கொள்கிறார் என்பதை காட்ட பிரியங்காவின் பழைய விஷயங்கள், வீடியோக்களை தோண்டி எடுத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

நிரூப்பை வெளியேற்ற பிரியங்காவின் காரணம்

நிரூப்பை வெளியேற்ற பிரியங்காவின் காரணம்

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கின் முதல் நாளில், நிரூப்பிற்கு இந்த டிக்கெட்டை பெற தகுதியில்லை. அவர் அளவிற்கு எனக்கு உடல் வலிமை கிடையாது. அதனால் அவருடன் மோதி என்னால் ஜெயிக்க முடியாது என்பதால் நிரூப்பை வெளியேற்ற விரும்புகிறேன் என்பதை காரணமாக சொன்னார் பிரியங்கா. அதே பிரியங்கா நேற்றைய டாஸ்கின் போது, என்னுடைய உடல் வலிமை வேறு. ஒவ்வொருவரின் உடல் வலிமை வேறு. அதை வைத்து விளையாடுகிறேன் என்றார்.

பாவனியை தூக்கிய பிரியங்கா

பாவனியை தூக்கிய பிரியங்கா

இதே போல் அன்சீனில் பாவனியை அலேக்காக தூக்கிக் கொண்டு நடந்து செல்கிறார் பிரியங்கா. அரசியல் மாநாடு டாஸ்கின் போது, நிரூப்பை பிடித்து தள்ளி விட்டு, கொடியை கைப்பற்றினார் பிரியங்கா. இந்த வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, இப்போது சொல்லுங்கள் பிரியங்காவா உடல் வலிமை இல்லாதவர்.

மாத்தி மாத்தி பேசாதே

மாத்தி மாத்தி பேசாதே

மாத்தி மாத்தி பேசாதே என தாமரையிடம் கத்திய பிரியங்கா, அவர் தான் மாத்தி மாத்தி பேசி வருகிறார். தாமரை ஒரு முறை தானே தள்ளி விட்டார். பிரியங்கா ஏன் இத்தனை முறை தள்ளி விடுகிறார். டாஸ்க் என்றால் இவர் தானே நேரடியாக மோதி விளைாயட வேண்டும். எதற்காக பிக்பாஸ், அமீர் என கத்தி உதவி கேட்கிறார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 29th December 2021 - Promo 3 | Priyanka நீங்க Game-கு உண்மையா இல்லை Niroop குற்றச்சாட்டு
பிரியங்காவை விளாசும் நெட்டிசன்கள்

பிரியங்காவை விளாசும் நெட்டிசன்கள்

தாமரை, வாயை உடைத்து விடுவேன் என சொன்னதை குறிப்பிட்டு பலரும் கமெண்ட் செய்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பு பிரியங்கா, த்தூ...அமீரிடம் மோத வக்கில்லை. என்கிட்ட வந்து பேசுகிறாய் என முதலில் வார்த்தையை விட்டது பிரியங்கா தான். இதே பிரியங்கா இன்றைய ப்ரோமோவில், வார்த்தையை விடாதே என அமீருக்கு அட்வைஸ் செய்கிறார் என பிரியங்காவிற்கு எதிரான விஷயங்களை புட்டு புட்டு வைக்கிறார்கள் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X