For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இன்னைக்கு நைட் விளக்கேத்த சொன்ன ஜீவா.. ஜிப்ஸியில நடிச்சத மறந்துட்டீங்களான்னு கலாய்க்கும் ஃபேன்ஸ்!

  |

  சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு, தீப ஒளியை ஏற்றுங்கள் என நடிகர் ஜீவா வீடியோ வெளியிட்டுள்ளார்.

  கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

  மக்கள் ஊரடங்கின் போது மாலை 5 மணிக்கு நாட்டு மக்களை கைதட்ட சொன்ன பிரதமர் மோடி, இன்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு, வீட்டுக்கு வெளியே, அல்லது மொட்டை மாடியில் நின்று, தீப ஒளிகள் அல்லது டார்ச் லைட்டுகளை அடித்து ஒற்றுமையை காட்ட கூறியுள்ளார்.

  நீயாம்மா இடுப்ப புடிச்சான்னு கத்துன.. ஆண் நண்பருடன் ஆபாச நடனம்.. மீராவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

  நடிகர்கள் பரப்புரை

  நடிகர்கள் பரப்புரை

  பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க பல சினிமா பிரபலங்களும் வீடியோ மூலம் தீப ஒளிகளை இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டு வருகின்றனர். டோலிவுட் நடிகர்களான சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பலர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

  ஜீவாவும்

  டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டில் நடிகர் ஜீவா, பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். Janata Curfew-ன் போது மக்கள் எப்படி ஒற்றுமையுடன் கை தட்டினோமோ அதே போல கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் இன்று இரவு ஒளியேற்றி நம் ஒற்றுமையை காட்ட வேண்டும் என பேசியுள்ளார்.

  ஜிப்ஸி ஜீவாவா இது

  லாக் டவுனுக்கு முன்னதாக வெளியான நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி படத்தில், பாஜகவுக்கு எதிரான வசனங்களும், படத்தின் வில்லனாக உத்தர பிரதேச முதல்வர் போன்ற கேரக்டரை இயக்குநர் ராஜு முருகன் வடிவமைத்திருப்பார். அந்த படத்தில் அப்படி நடித்து விட்டு, இப்போ அவர்களுக்கு சார்பாக இப்படி பேசுறீங்களே என பலரும் ஜீவாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

  கோயிந்தா இந்த விஷயம்

  பிரதமர் மோடியின் அறிவிப்பை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வீடியோ போட்ட ஜீவாவை சிலர் கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர். மேலும், கோயிந்தா இந்த விஷயம் அண்ணன் ராஜு முருகனுக்கு தெரியுமா என அவரையும் டேக் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர்கள் படத்தில் நடிப்பது போன்றே நிஜ வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என நினைப்பதே முதலில் தவறு.

  சங்கி வகையறா

  பாஜக அரசுக்கு ஆதரவாக நடிகர் ஜீவா குரல் கொடுத்துள்ளார் என்றும், அவரை சங்கி என்றும் சில திராவிட கட்சியை சேர்ந்த நெட்டிசன்கள் தொடர்ந்து படு மோசமாகவும், ஆபாசமான வார்த்தைகளாலும் நடிகர் ஜீவாவை திட்டித் தீர்த்து வருகின்றனர். ஜிப்ஸி படத்துல நடிச்சத பார்த்து தப்பா நினைச்சுட்டோம் என்றே பலரும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர்.

  ராஜுமுருகனின் நிலைமை

  ஜீவாவை வைத்து ஜிப்ஸி படத்தை இயக்கிய இயக்குநர் ராஜுமுருகனின் நிலைமை இப்படித் தான் இருக்கும் என கவுண்டமணியின் போட்டோ ஒன்றை போட்டு இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார். "ராஜு முருகன் நவ், இவன வச்சா படம் எடுத்தோம்" என பங்கமாக கமெண்ட் செய்துள்ளார்.

  வீடியோ மாட்டிக்கிச்சா

  "மச்சி என்ன மச்சி.. நீ இப்படி பேசுற ஆள் இல்லையே மச்சி.. எதுன்னா வீடியோ மாட்டிக்கிச்சா? சரி அதை விடு மச்சி ஒரு குவாட்டர் சொல்லு" என சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா பேசும் ஸ்லாங்கிலும் ரசிகர்கள் கமெண்ட் செய்து நடிகர் ஜீவா பெரிய தப்பு செய்து விட்டதை போல திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  English summary
  Actor Jiiva shared a video message to ask his fans to do PM Modi request on today night to lights up in your house to fight against Corona virus. Many Gypsy fans against his idea.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X