Don't Miss!
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராஜ் குந்த்ராவுக்கு ஒரு நியாயம்.. ராதிகா ஆப்தேவுக்கு ஒரு நியாயமா? டிரெண்டான #BoycottRadhikaApte
மும்பை: திடீரென நடிகை ராதிகா ஆப்தேவுக்கு எதிரான ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே.
சிவகார்த்திகேயன்
பட
டைட்டிலாகும்
ரஜினி
டயலாக்...
அப்படி
என்ன
டைட்டில்
பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் படு போல்டாக நடித்துள்ள இவரை திடீரென தடை செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கொதித்து எழுவதற்கு பின்னால் சமீபத்தில் ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா விவகாரமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் டிரெண்டிங்
நடிகை ராதிகா ஆப்தேவை பாலிவுட்டில் இருந்து தடை செய்ய வேண்டும் என திடீரென நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து இந்தியளவில் தெறிக்கவிட்டு வருகின்றனர். தொடர்ந்து இந்திய கலாசாரத்தை சீரழித்து வருகிறார் ராதிகா ஆப்தே என்கிற பகீர் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

என்ன காரணம்
இப்படி திடீரென நடிகை ராதிகா ஆப்தேவுக்கு எதிரான ஹாஷ்டேக் டிரெண்டாக என்ன காரணம் என்று பார்த்தால், ஏகப்பட்ட நெட்டிசன்கள் தெளிவாக விளக்கம் அளித்து ட்வீட்களை பதிவிட்டுள்ளனர். எப்போதுமே ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் நடித்து இளைஞர்களை கெடுக்கிறார் என குற்றம்சாட்டி வருகின்றனர்.

ராஜ் குந்த்ரா விவகாரம்
கத்துவா வழக்கின் போது அனைத்து பாலிவுட் நடிகர்களும் இந்துக்களை இழிவுப்படுத்த ஒன்று திரந்து அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். ஆனால், அதே நேரத்தில் ஆபாச பட விவகாரத்தில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பல பாலிவுட் பிரபலங்களும் கிலோ கணக்கில் ஃபெவிக்காலை வாயில் அள்ளி பூசி உள்ளனர் என காரசார கமெண்ட்டுகள் பறக்கின்றன.

நிர்வாணமாக நடித்து
நடிகை ராதிகா ஆப்தே Parched எனும் படத்தில் முழு நிர்வாணமாக நடித்திருந்தார். மேலும், விளம்பர படம் ஒன்றிற்காக தனது அனைத்து அந்தரங்க பகுதிகளையும் காட்டி நடித்து இருந்தார். இது பழைய கதை என்றாலும், இப்போது இது டிரெண்டாக காரணம் சமீபத்தில் ஆபாச பட விவகாரத்தில் ராஜ் குந்த்ரா செய்யப்பட்ட நிலையில், இவ்வளவு ஆபாசமாக நடித்து இந்திய கலாசாரத்தை கெடுக்கும் ராதிகா ஆப்தேவை ஏன் போலீசார் கைது செய்யவில்லை. இருவருக்கும் சரி சமமான தண்டனை கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கொதித்து எழுந்துள்ளனர்.

கஜுராவுக்கு போய் பாருங்க
ராதிகா ஆப்தே மீண்டும் இந்த பிரச்சனையில் இழுத்து விடப்பட்டு இருப்பதை பார்த்து பதறிப் போன அவர் ரசிகர்கள், ஆபாச பட விவகாரத்தில் ராதிகா ஆப்தேவை குறை சொல்லும் நபர்கள் அவர் இந்திய கலாசாரத்தை கெடுத்தார் என்றால் போய் கஜுராவோ கோயில் சிற்பங்களை பாருங்கள் என ட்வீட் போட்டு நடிகை ராதிகா ஆப்தேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தலைவி இப்படி டிரெஸ் பண்ணலாமா
ராதிகா ஆப்தேவை பாலிவுட்டில் இருந்து தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்த நெட்டிசன் உள்ளாடையுடன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு இருக்கும் தலைவி கங்கனா ரனாவத்தையும் தடை செய்ய வெண்டும் என போட்டோவை ஷேர் செய்து கமெண்ட் அடித்து வருகிறார்.

இவங்களையும் தடை பண்ணுங்க
ஆபாசமாக நடிக்கும் ராதிகா ஆப்தேவை மட்டுமின்றி இந்தியவை சூறையாடிய முகலாயர்களின் பெயர்களை தனது மகன்களுக்கு வைத்த நடிகை கரீனா கபூர் மற்றும் போதைப் பொருள் விவகாரத்தில் வாட்ஸ் அப் குழுவின் தலைவியே தீபிகா படுகோனே தான் என கூறப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரையும் தடை செய்ய வேண்டும் என்றும் இவர்கள் நடித்த படங்களை பார்க்காமல் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் பாலிவுட்டுக்கு எதிரான மிகப்பெரிய போர்க்கொடி கிளம்பி இருக்கிறது.