Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாலியல் புகார் விவகாரம்.. அனுராக் கஷ்யப்புக்கு ஆதரவு.. டாப்சிக்கு எதிராக டிரெண்டாகும் ஹாஷ்டேக்!
மும்பை: இயக்குநர் அனுராக் கஷ்யப்புக்கு ஆதரவாக நடிகை டாப்சி குரல் கொடுத்துள்ள நிலையில், அவருக்கு எதிராக ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் அனுராக் கஷ்யப், தன்னை கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார் என நடிகை பாயல் கோஷ் கூறியுள்ளது பாலிவுட்டில் புதிய பூகம்பமாக வெடித்துள்ளது.
நடிகை பாயல் கோஷுக்கு இயக்குநர் அனுராக் கஷ்யப், பதிலடி கொடுத்துள்ள நிலையில், நடிகை டாப்சி, அனுராக் கஷ்யப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
நாளை ஷூட்டிங்.. பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் டெஸ்ட்.. த்ரிஷ்யம் 2 டீம் அசத்தல்!

என்னை கட்டாயப்படுத்தினார்
பட வாய்ப்பு கேட்டு சென்ற போது, ஆபாச படத்தை போட்டு தன்னை பலவந்தப்படுத்தினார் என இயக்குநர் அனுராக் கஷ்யப் மீது பரபரப்பு குற்றச்சாட்டை நடிகை பாயல் கோஷ் கூறியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனுராக் கஷ்யப்புக்கு எதிராக ஏகப்பட்ட ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அனுராக் கஷ்யப் மறுப்பு
ஆனால், நடிகை பாயல் கோஷின் குற்றச்சாட்டை இயக்குநர் அனுராக் கஷ்யப் அதிரடியாக மறுத்து ஏகப்பட்ட ட்வீட்களை போட்டுள்ளார். பல பெண்கள் உடன் எனக்கு நல்ல நட்பு மட்டுமே உள்ளது என்றும், எந்த பெண்ணிடமும் இதுவரை தவறாக நடந்தது இல்லை எனக் கூறியுள்ளார். பாயல் கோஷின் குற்றச்சாட்டை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் மீ டூ அலை வீசி வருகிறது.

பெண்ணுரிமை போராளி
இயக்குநர் அனுராக் கஷ்யப்பின் நண்பரான நடிகை டாப்சி, "என் நண்பரே நீங்கள் எவ்வளவு பெரிய பெண்ணுரிமை போராளி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். சீக்கிரமே அடுத்த படத்தின் செட்டில் சந்திப்போம். அதில், பெண்களை எந்தளவுக்கு நீங்கள் சக்தி வாய்ந்த கதாபாத்திரமாக படைக்கிறீர்கள் பார்க்கிறீர்கள் எனபதை காண்பிப்போம்" என அனுராக் கஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

டாப்சிக்கு கண்டனம்
இந்நிலையில், நடிகை டாப்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து #TapseePannu என்ற ஹாஷ்டேக்கை பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், நடிகை டாப்சியின் மடியில் இயக்குநர் அனுராக் கஷ்யப் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, அனுராக் கஷ்யப்பையும் நடிகை டாப்சியையும் மோசமாக திட்டி வருகின்றனர்.

அறையணும்
நடிகை டாப்சி எப்போதெல்லாம் இதுபோன்ற போலியான பெண்ணுரிமை போராளிகளுக்கு ஆதரவு தருகிறாரோ, அப்போதெல்லாம் அவரை தப்பட் படத்தில் அறைவது போல அறைய வேண்டும் என தோன்றுகிறது என ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்கள் அந்த ஹாஷ்டேக்கில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அனுராக் கஷ்யப்பின் மன்மர்ஜியான் படத்தில் டாப்சி நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க பேசலாமா
நடிகை டாப்சியின் ட்வீட்டுக்கு கீழே அனுராக் கஷ்யாப் உடன் அவர் நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு, நீயெல்லாம் மீ டூவை பற்றி தப்பா பேசலாமா? இயக்குநர் அனுராக் கஷ்யப் உடன் இப்படி போஸ் கொடுத்துட்டு, அவருக்கு ஆதரவா? பேசலைன்னா தான் தப்பு என திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Recommended Video

ரசிகர்கள் ஆதரவு
நடிகை டாப்சியின் ரசிகர்கள் அவருக்கும் இயக்குநர் அனுராக் கஷ்யப்புக்கும் ஆதரவாக கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். நடிகை பாயல் கோஷ் குறித்தும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டும் பதிலுக்கு பதில் ட்விட்டர் சண்டையை போட்டு வருகின்றனர்.