ஹவுஸ்மெட்களை ஒருமையில் பேசும் அபிஷேக்...க்ரைம் கூடிகிட்டே போகுதே
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 16 வது நாளை எட்டி உள்ளது. மொத்தமுள்ள பங்கேற்ற 18 போட்டியாளர்களில் இதுவரை நமீதா மாரிமுத்து , நாடியா சாங் என இருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.
மீதமுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளவருக்கான எவிக்ஷன் ப்ராசஸ் நேற்று நடைபெற்றது. இதில் 9 பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானவர்களால் நாமினேட் செய்யப்பட்டவர் அபிஷேக் ராஜா.

கமலை கலாய்த்த அபிஷேக்
யூட்யூப்பரான அபிஷேக் ராஜா, பிக்பாஸ் வீட்டிற்கு போவதற்கு முன்பு தான் கமலை கலாய்த்தார் என்றால், பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் கமலை கிண்டல் செய்துள்ளார். இந்த வாரம் வார இறுதி எபிசோடில் கமல் வந்து, போட்டியில் கலந்து கொண்டவர்களில் யார் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என கேட்டார் கமல். அதற்கு அண்ணாச்சி, தாரை ஆகியோர் கைகளை தூக்கி, தங்களின் கருத்தை கூறினர்.

நீங்க தான் காரணம்
நிரூப், வருண் போன்றோர் கை தூக்கிய பிறகு யோசித்து பார்த்து கை தூக்கிய அபிஷேக், நான் சொல்லலாமா சார் என அடக்கமாக கேட்டார். சொல்லுங்க என கமல் அனுமதி கொடுத்ததும். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை. அதற்கு காரணம் நீங்க தான். நீங்க தொகுத்து வழங்குவதால் தான் பார்க்கவில்லை. வேறு யாராவது தொகுத்து வழங்கி இருந்தால் கண்டிப்பாக பார்த்திருப்பேன் என்றார் அபிஷேக். அதற்கு கமலும் சரியான கவுன்ட்டர் கொடுத்தார்.

வெறுப்பை சம்பாதித்த அபிஷேக்
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பிருந்தே பலரின் வெறுப்பை சம்பாதித்திருப்பவர் அபிஷேக். முதல் வாரத்தில் சக போட்டியாளர்களை ரெவ்யூ செய்து கொண்டு ஓரமாக இருந்த அபிஷேக், இரண்டாவது வாரத்தில் பலருடன் சண்டை, ஓவர் சண்டை, குழப்பமான பேச்சு ஆகியவற்றால் ஏராளமானவர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டுள்ளார்.

ஒருமையில் பேச்சு
அதில் வயதில் மூத்தவர்களான இமான் அண்ணாச்சி, தாமரை, சின்ன பொண்ணு ஆகியோரை நீ, வா, போ என ஒருமையில் பேசி வருகிறார். அத்துடன் பெண் போட்டியாளர்களை போடி, வாடி என பேசி வருவது ரசிகர்கள் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. கேட்டால் தோழி, சகோதரி என்கிறார். அதிலும் பிரியங்கா, இசைவாணி மற்றும் பாவனியிடம் பேசுகையில் டீ சொல்லியே பேசுகிறார்.

கேள்வி கேட்கும் ரசிகர்கள்
நேற்று நடைபெற்ற தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்கில், இசைவாணியை டார்கெட் செய்து பெண் வேடமிட்டு வந்து செய்த அலம்பல்கள், அவர் பேசிய வார்த்தைகள் அருவெறுக்கதக்கதாக உள்ளதாக ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். உரிமை, பாசத்தை காட்ட சக வயதுடையவர் அல்லது வயது குறைந்தவர்களை போ, வா என்று பேசலாம். இவர் எதற்காக பெண் போட்டியாளர்கள் அனைவரையும் டீ போட்டுகிறார் என பலர் கேள்வி கேட்டுள்ளனர்.

முன்பே சொன்ன பிக்பாஸ்
அதே போல் யாரை நாமினேட் செய்தோம் என்பதை வெளியில் யாரிடமும் சொல்லவோ அது பற்றி ஆலோசிக்கவோ கூடாது என்பது பிக்பாசின் முக்கியமான விதிகளில் ஒன்று. இதனை முதல் வாரத்திலேயே பிக்பாஸ் தெளிவாக கூறி, நீங்கள் நல்லவர்கள் என காட்டி கொள்ள முயற்சி செய்ய வேண்டாம் என முகத்தில் அறைந்தது போல் தெளிவாக கூறி இருந்தார்.

விதியை மீறிய அபிஷேக்
இருந்தாலும் அந்த விதிகளை மீறி, யாரை நாமினேட் செய்தாய் என அபிஷேக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பிரியங்கா மற்றும் நிரூப்பும், தாங்கள் யாரை நாமினேட் செய்தோம் என்பதை வெளிப்படையாக சொல்லி விட்டனர். அதே சமயம் அங்கு வரும் ராஜுவிடமும் அபிஷேக் அதே கேள்வியை கேட்கிறார். ஆனால் தான் யாரை நாமினேட் செய்தேன் என்பதை சொல்ல ராஜு மறுத்து விட்டார். இதை பார்த்த ரசிகர்கள், முதல் நாமினேஷன் நடக்கையில், விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிக்பாஸ். ஆனால் இவர்கள் ஓப்பனாக பேசியும் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கேட்க துவங்கி விட்டனர்.

குறும்படம் இருக்கு உனக்கு
தலைவர் போட்டிக்கான தேர்வின் போது, அண்ணாச்சியை பார்த்து அவன், இவன் என்று வேறு அபிஷேக் பேசி உள்ளார். இதை எல்லாம் கமல் கேட்க மாட்டாரா என கேட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்த செயல்பாடுகளால் அபிஷேக் மீதான க்ரைம் ரேட் கூடிக் கொண்டே செல்கிறது. இதனால் இந்த வாரம் அவர் தான் வெளியேற்றப்படுவார். கண்டிப்பாக குறும்படம் இருக்கு என்றெல்லாம் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











