Just In
- 14 min ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 58 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 1 hr ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
Don't Miss!
- News
வாரே வா.. பாஜகவுக்கு செக்.. "இங்கு"தான் நான் போட்டியிட போகிறேன்.. தொகுதியை அறிவித்தார் மம்தா பானர்ஜி
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ப்பா.. மோசமான டிரெஸ்.. அதைவிட மோசமான ஆட்டிட்யூட்.. பிக்பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!
சென்னை: பொது நிகழ்ச்சி ஒன்றில் அரைகுறை ஆடையில் பங்கேற்ற பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் சரமாரியாக விளாசி வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, பாயும் புலி, அச்சாரம், ஆறாத சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

மக்கள் கோபம்
நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் ஹிட்லர் டாஸ்கிகன் போது சக போட்டியாளர்களிடம் மிகவும் ரூடாக நடந்து கொண்டார் ஐஸ்வர்யா தத்தா. குறிப்பாக சக போட்டியாளரான பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டியதால் மக்களின் கோபத்திற்கு ஆளானார்.

கிளாமர் போட்டோ
ஆனாலும் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா இரண்டாவது சீசனின் ரன்னர் அப் ஆனார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து, தன்னுடைய போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். பிக்பாஸில் பங்கேற்றும் பயன் இல்லை என்று அறிந்த ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
கவர் பேஜ்
காலண்டர் அட்டை, கவர் பேஜ் என அவர் காட்டும் கிளாமர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆடை விஷயத்தில் ரொம்பவே கஞ்சத்தனம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பவர்களை காட்டிலும் திட்டி தீர்ப்பவர்கள்தான் ஜாஸ்தி. ஆனாலும் அதற்கெல்லாம் அசராத ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

குட்டி ஷார்ட்ஸ்
இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். அதாவது, பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதில் முழு தொடையும் தெரியும் படியான குட்டி டைட் ஷார்ட்ஸை அணிந்திருக்கிறார்.

செம கெத்து
நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் முதல் வரிசையில் கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் உள்ளவர்களை பற்றியெல்லம் கொஞ்சமும் கவலைப்படாமல் கெத்தாக அமர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி தள்ளியிருக்கின்றனர்.

பேட் ஆட்டிட்யூட்
இந்த நெட்டிசன் உங்களுக்கு முறையாக பிஹேவ் பண்ண தெரியாத என கேட்டுள்ளார். மோசமான டிரெஸிங், பேட் ஆட்டிட்யூட் என்றும் நெட்டிசன்கள் விளாசி இருக்கின்றனர். இன்னும் சிலர், நடிகையாக இருந்து கொண்டு எந்த நிகழ்ச்சிக்கு எப்படி டிரெஸ் போடனும் என்று கூட தெரியாதா என கேட்டும் விளாசியிருக்கின்றனர்.

வைரல் போட்டோஸ்
ஒரு படம் கூட ஹிட் கொடுக்கல, ஆனா அதுக்குள்ள என்னா பந்தா என்று விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன். இந்த ஷார்ட்ஸ்க்கு பதில் பேண்ட் போட்டிருந்தால் இன்னும் கெத்தாக இருந்திருக்கும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். ஐஸ்வர்யா தத்தாவின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.