For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எது காதல், எது ஃப்ளர்ட், எது நட்புன்னு தெரியாமையாடா பாக்கிறோம்.. பாலாவை விளாசித் தள்ளிய ரசிகர்கள்!

  |

  சென்னை: ஆணும் பெண்ணும் ஒன்றாக பழகினால் அதுக்கு பேர் காதல் இல்லைன்னு சொல்லிக் கொடுத்துருக்கேன் என முதல் புரமோவில் பாலா பேசியதை எதிர்த்து ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

  முதல் புரமோவுக்கு கீழே வண்டி வண்டியாக பாலாவை திட்டியும், பங்கம் பண்ணியும் கமெண்ட்டுகள் குவிந்து கொண்டே வருகின்றன.

  எது காதல், எது ஃப்ளர்ட், எது நட்புன்னு தெரியாமையாடா நாங்க ஷோவை பார்க்குறோம் எனவும் ஆவேசமாகி உள்ளனர்.

  ஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக் கொடுத்துருக்காராம்.. கமல் கலாய் அல்டி!

  வாயைத் திறந்தால் பொய்

  வாயைத் திறந்தால் பொய்

  பாலாஜி முருகதாஸ் இந்த நிகழ்ச்சியில் நுழைந்ததில் இருந்தே, வாயைத் திறந்தாலே பொய், பொய்யைத் தவிர வேற ஒன்றும் இல்லை என்கிற ரேஞ்சுக்கே பேசி வருகிறார். தனது அம்மா பற்றி அவர் மாற்றி மாற்றி பேசியதை பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே போட்டு அவரது சாயத்தை வெளுத்து விட்டனர்.

  எதுதான்டா காதல்

  ஆணும் பெண்ணும் ஒண்ணா பழகுனாலே காதல்ன்னு நினைக்கக் கூடாதுன்னு கத்துக் கொடுத்துருக்கேன்னு பாலா சொன்னதை கேட்டு ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். "அப்புறம் எதுதான்டா காதலு?.. இப்படி சொல்லி சொல்லியேதான்டா.. பெண்களை காலி பண்றீங்க.. என பாலாவை வெளுக்க ஆரம்பித்து விட்டனர்.

  நீ ஒரு அரவேக்காடு

  "நீ என்ன கருமத்த வேணாப் பண்ணு! ஆனால் உன் friend #Shivani infactuated or crush ஆகி 50 நாளாச்சு! நீ வேணா flirt பண்ணு அந்த பொண்ணு விவரமா contentக்கு use பண்ணுது இல்ல நிஜமாவே crush ஆயிடுச்சு! மொத்தத்துல நீ ஒரு அரவேக்காடுனு புரியவச்சுட்ட தம்பி" என கேவலமாக திட்டி வருகின்றனர்.

  11 மணிக்கு மேலயா

  தினமும் இரவு 11 மணிக்கு சோம் நல்லா காமெடி பண்ணுவான். ஆனால், அதையெல்லாம் டிவியில போட முடியாது என ரகசியத்தை போட்டு உடைக்க, என்ன காமெடியாக இருக்கும் என நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் மீம் போட்டு கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். அதிகமா gas போடுவாருன்னும் விளக்கி வருகின்றனர்.

  நிஜமாவே இம்சை அரசனா

  ரியோ ராஜுக்கு நாடா? காடா? டாஸ்க்கில் இம்சை அரசன் வேஷம் கொடுத்தா, அவரு நிஜமாவே இம்சை அரசனாகத் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் போல தெரிகிறது. ஆஜீத் ரொம்ப பாவமா, கில்லுவாரு, இல்லைன்னா கடிப்பாரு சார் என கமலிடம் மன்றாடும் காட்சிகளை வைத்தும் மீம்கள் பறக்கின்றன.

  50 நாள் 15 பேர் விலங்கிடும்

  கமல்ஹாசன் 50 நாள் ஆகிடுச்சுன்னு பெருமையா சொல்லும் போது, 15 போட்டியாளர்களை காட்டி ரசிகர்களை ரொம்பவே கடுப்பாக்கிட்டாங்க, இன்னும் 50 நாளில் எப்படித் தான் இந்தக் கூட்டத்தை கழிச்சிக் கட்டப் போறாரோ? எக்ஸ்ட்ரா ஆசீம் வேற வராராம். ஒன் மைனஸ் ஒன் பிளஸ் ஆஃபர்.

  அவசரப்பட்டுட்டியே ஆரி

  காதல் கண்ணை மறைக்குதுன்னு.. அது யாரு சொன்னது.. ரகசியமாவே இருக்கு.. சரி ரகசியமாவே இருக்கட்டும்.. ஆரி, உடனே கை தூக்கி, சார் நான் தான் சார் அது என நல்ல பிள்ளையாய் பேர் வாங்க நினைத்து மாட்டிக் கொண்டார். அதை கலாய்த்து அவசரப்பட்டுட்டியே குமாரு என மீம் போட்டு ஓட்டி வருகின்றனர்.

  எது காதல், எது ஃப்ளர்ட்

  "எது காதல் எது Flirt எது Friendshipனு தெரியாமையாடா நாங்க பாக்கிறோம்! காதலை போற்றுவோம் காதலை காதல்னு மதிப்பவர்கள் நாங்கள்.. காதல் இல்லன்னு கதருவ அப்புறம்.Flirt பண்ணுவ கேட்டா friendshipனு சொல்லுவ! இதுல class எடுக்கிறானாம்!" என இந்த நெட்டிசன் ரொம்பவே கோபப்பட்டு பாலாவை வெளுத்து வாங்கி உள்ளார்.

  English summary
  Netizens slams Balaji Murugadoss after watching today Bigg Boss promo 1. In this promo he once again told, he is not in love with Shivani Narayanan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X