Just In
- 20 min ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 41 min ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
- 1 hr ago
செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்!
Don't Miss!
- Sports
இவங்களை எதுவும் செய்ய முடியலை.. விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா.. கையில் எடுத்த "அந்த" மோசமான யுக்தி!
- News
டெல்லி டிராக்டர் பேரணிக்கு உ.பி. விவசாயிகள் ரெடி..பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க முடிவு!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Finance
பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிருகத்தனமானது.. புடிச்சு ஜெயில்ல போடுங்க.. பாடகிக்கு எதிராக கொதிக்கும் நெட்டிசன்ஸ்! #KanikaKapoor
சென்னை: தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மறைத்து பார்ட்டியில் கலந்து கொண்ட பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
உலக நாடுகளை மிரட்டி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தாக்குதலால் இதுவரை உலகம் முழுக்க 2 லட்சத்து 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்கவும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சோதனை
இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டதை மறைத்து பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிகா கபூர் கடந்த 9ஆம் தேதி தான் இந்தியா திரும்பியிருக்கிறார். விமான நிலையத்தில் கொரோனா சோதனையில் இருந்து தப்பித்து மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

கொரோனா உறுதி
பின்னர் மார்ச் 11ஆம் தேதி விமானம் மூலம் சொந்த ஊரான லக்னோவுக்கு சென்றுள்ளார். மார்ச் 15ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற பார்ட்டியில் பங்கேற்றிருக்கிறார் கனிகா கபூர். இந்த பார்ட்டியில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் பங்கேற்றனர். இந்நிலையில் 16ஆம் தேதி கனிகாவுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதியானது.

எம்பிக்களுக்கு தொற்று?
இதனால் அந்த பார்ட்டியில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோர் கனிகா கபூருடன் நெருக்கமாக இருந்துள்ளனர்.

நெட்டிசன்கள் கொந்தளிப்பு
அதில் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா தாக்குதல் இருப்பதை மறைத்து பார்ட்டியில் பங்கேற்ற கனிகா கபூர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கனிகா கபூருக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

கடுமையான தண்டனை
தீவிரவாத தடுப்பு சட்டங்களின் கீழ் கனிகா கபூர் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள்! இது அரசுக்கு எதிரான பயங்கரவாத செயல் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். கனிகா கபூர் போன்ற முட்டாள்கள் எந்த மருத்துவ சேவையையும் மறுக்கக்கூடாது. நீங்கள் சமுதாயத்திற்கு தீங்கு செய்தால், சமூகம் உங்களுக்கு துணை நிற்காது. கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
கடுமையான தண்டனை
செலிபிரிட்டியாக இருப்பவர்கள் எப்படி இவ்வளவு கேர்லெஸாக இருக்கலாம்? இந்த பெண் கைது செய்யப்பட வேண்டும் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். இதுபோன்ற குற்றத்திற்காக கனிகா கபூருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற மூளை இல்லாதவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்கிறார் இவர்.
|
மிருகத்தனமான செயல்
கனிகா கபூரின் இந்த மிருகத்தனமான செயல் உண்மையில் மன்னிக்க முடியாதது. அவள் எந்த மருத்துவ வசதிகளுக்கும் கூட தகுதியற்றவள், இறக்கும் வரை இருண்ட அறையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களைக் கொல்ல அவருக்கு உரிமை இல்லை. உங்களுக்கு வெட்கமா இல்லையா கனிகா கபூர் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.