பிக் பாஸ் வரலாற்றிலேயே வொர்ஸ்ட் ஃபைனலிஸ்ட்னா அது நிரூப் தான்.. கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: இப்படி ஃபைனல்ஸ்க்கு போறதுக்கு நிரூப் சிபிக்கு முன்னாடி கெளரவமா பெட்டியை எடுத்துக் கொண்டே வெளியேறி இருக்கலாம் என பிக் பாஸ் ரசிகர்கள் நிரூப்பை கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த பாடத்தையும் படித்து விட்டு உள்ளே வந்த நிரூப்பின் நரித்தனம் பல முறை அவரை இந்த நிகழ்ச்சியில் சேவ் செய்ய உதவி இருக்கிறது.
பிரியங்கா, ராஜு உள்ளிட்டோர் இரக்கப்பட்டே நிரூப்புக்கு இந்த ஃபைனல்ஸ் வாய்ப்பை கொடுத்துள்ளனர்.

நோ சொல்லாத பாவனி
பிரியங்கா, ராஜு, அமீர், தாமரை என நான்கு பேரும் ஒரு மனதாக பாவனியை ஃபைனல்ஸ் அனுப்ப முடிவு செய்த நிலையில், நிரூப் மட்டும் முடியவே முடியாது என பாவனிக்கு தண்ணீர் ஊற்றவில்லை. ஆனால், பதிலுக்கு நிரூப்புக்கு மற்றவர்கள் தண்ணீர் ஊற்றும் போது பாவனி அதற்கு நோ சொல்லி இருந்தால் இந்த கேம் வேற மாறி சென்றிருக்கும்.

இது சீட்டிங்
பாவனியை அமர வைத்து மத்தவங்களாம் கண்டபடி புத்தி சொல்லி தண்ணி ஊற்றி கடைசியில் பிக் பாஸ் நிரூப் ஊற்றாததால் பாவனியை ஃபைனல்ஸ்க்கு அனுப்ப முடியாது என மறுத்து விட்டார். மெஜாரிட்டியை ஏற்கவில்லை. ஆனால், நிரூப் அமர்ந்த நிலையில், அவருக்கு சொன்ன அனைத்தும் உண்மை என்பது போல பிக் பாஸ் அமைதி காத்து நிரூப்பை சேவ் செய்தது சீட்டிங் என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

வொர்ஸ்ட் ஃபைனலிஸ்ட்
பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை இப்படியொரு ஃபைனலிஸ்ட் இறுதி சுற்றுக்கு வந்ததில்லை என ரசிகர்கள் விளாசி தள்ளி வருகின்றனர். அமீராவது இறுதி வரை போராடி ஜெயித்து டிக்கெட் டு ஃபினாலே வென்றார். ஆனால், நிரூப் இப்படி அவமானப்பட்டு ஃபைனலிஸ்ட் ஆகி இருப்பதை பார்த்த ரசிகர்கள் வொர்ஸ்ட் ஃபைனலிஸ்ட் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

டென்ஷனாகிட்டாங்க
இதுவரை ஸ்ட்ராங் பிளேயர் என நினைத்து நிரூப்புக்கு ஓட்டுப் போட்டு வந்த அந்த ரசிகர்களே தற்போது நிரூப் செய்த செயலால் பயங்கர கடுப்பாகி அவரை வெட்கமே இல்லையா என திட்டித் தீர்த்து வருகின்றனர். என்ன இருந்தாலும் இது ஒரு கேம் தான் வெளியே வந்ததும் சரி பண்ணிக்கலாம் என்றே நிரூப் ஃபைனல்ஸ் போகும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் சில ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

எக்ஸ்போஸ் பண்ண பிரியங்கா
நிரூப்பின் இந்த மோசமான விளையாட்டை முதலில் சூப்பராக எக்ஸ்போஸ் பண்ண பிரியங்கா கடைசியில் வேறு வழியில்லாமல் நிரூப்பின் தந்தை சொன்ன அந்த வார்த்தைக்காகவும் நிரூப்பின் மீது உள்ள நட்புக்காகவும் அவரை ஃபைனல்ஸுக்கு அனுப்பி உள்ளார்.

பாவனிக்கு நீதி வேண்டும்
மறுபடியும் #WeStandWithPavni என்ற ஹாஷ்டேக்குடன் பாவனி ஆர்மியினர் பாவனியை சேவ் செய்யாமல் நிரூப்பை சேவ் செய்தது என்னங்கய்யா நியாயம் என பிக் பாஸிடம் கெஞ்சி வருகின்றனர். அதிகமாக ஓட்டுக்களை போட்டு தாமரையை வெளியேற்றி விட்டு பாவனியை ஃபைனல்ஸ் அனுப்பலாமே என நிரூப் ரசிகர்கள் பதிலுக்கு வெளியேவும் நிரூப்பாக மாறி விட்டனர்.

சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
சிபி ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பாடியது போலவே எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை பட பாடலான நான் ஆணையிட்டால் பாடலில் வரும் சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் எனும் வரிகளை கமெண்ட் செய்து நிரூப்பை எந்த அளவுக்கு வச்சு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு வச்சு செய்து விட்டனர்.
Recommended Video

ஓட்டு கிடைக்குமா
இப்படி அடுத்த வாரம் ஃபைனல்ஸ் போகும் நிரூப்புக்கு அடுத்த வாரம் அமீருடன் குறைவான ஓட்டுக்களே கிடைக்கும் என இப்போதே பிக் பாஸ் ரசிகர்கள் கணித்து விட்டனர். ஆனால், அடுத்த வாரமும் பிக் பாஸ் டீம் வேற பிளான் பண்ணி நிரூப்பை கடைசியில் ஸ்டேஜுக்கே கொண்டு வந்து விட போகின்றனர் என்றும் கதறல் கமெண்ட்டுகளும் காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











