பளார்னு ஒரு அறை விட்ருக்கலாமே.. அமீர் முத்தம் கொடுத்தும் அமைதியாக இருந்த பாவனியை விளாசும் ஃபேன்ஸ்!
சென்னை: போன வாரம் தான் அபிநய் விஷயத்தால் பாவனிக்கு அந்த அளவுக்கு பெயர் டேமேஜ் ஆன நிலையில், இந்த வாரம் முத்தக் காட்சி வேற இடம் பெற்று பாவனியை ஒட்டுமொத்தமாக நெட்டிசன்கள் திட்டி தீர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாவனிக்கு இதுநாள் வரை சப்போர்ட் பண்ணி வந்த ஆர்மியினர் மொத்தமாக இந்த செயலால் ஆஃப் ஆகி அமைதியாகி விட்டனர்.
அமீர் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்ததே பாவனிக்கு முத்தம் கொடுக்கத்தானா? என்று அமீரை ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

அமீர் அடிச்ச கிஸ்
காதில் ரகசியம் சொல்வது போல நெருங்கி பேசி பாவனிக்கு கிஸ் அடித்து பிக் பாஸ் சீசன் 5 டிஆர்பியை உச்சத்துக்கு எகிற வைத்து விட்டார் அமீர். அபிநய் தன்னை லவ் பண்றாரா இல்லையா என்கிற டவுட்டிலேயே அவரை அசிங்கப்படுத்திய பாவனி அமீர் நேரடியாக சொல்லியும் அமீரை அதட்டாமல் விட்ட விளைவு தான் இது என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

டிரெண்டான முத்தக் காட்சி
சனிக்கிழமை எபிசோடில் ராஜு மட்டும் சேவ் ஆகப் போகிறார் அது தானே வேற என்ன இருக்கப் போகுது என நினைத்த ரசிகர்களுக்கு ஷாக்கிங் பேக்கேஜாக அமீர் பாவனிக்கு முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அரெஸ்ட் பண்ணுங்க
பிக் பாஸ் வீட்டில் பாவனிக்கு தேவையில்லாமல் லவ் டார்ச்சர் கொடுக்கிறான் அமீர் அவனை உடனடியாக அரெஸ்ட் பண்ணுங்க என நெட்டிசன்கள் மீண்டும் கொந்தளித்து வருகின்றனர். இதற்கும் ஒரு ஈசியான வழியை வைத்து பஞ்சாயத்தை கமல் முடித்து விடுவார் என்பது வேறு கதை.

பெண்ணை குறை சொல்லாதீங்க
அமீர் அத்துமீறி முத்தம் கொடுத்ததுக்கு அவனை திட்டாமல் பாவனியை ஏன் திட்டுறீங்க, குறை சொல்றீங்க எப்போதுமே பெண்கள் தான் இது போன்ற சூழ்நிலையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாவனி அமைதியா நோ சொன்னாலும் நோ தான் என பாவனிக்கு ஆதரவாக பெண்களின் குரல்களும் எழுந்து வருகின்றன.

அறை விட்ருக்கலாம்
அமீர் எல்லை மீறி முத்தம் கொடுத்த பிறகும் பாவனி அமைதி காத்திருக்க கூடாது பளார்னு ஒரு அறை விட்ருக்கலாம். அதுக்கு மேல பாவனி பக்கமே அமீர் தலை வச்சு படுத்திருக்க மாட்டான் என நெட்டிசன்கள் பாவனி பண்ணது தப்பு என்று சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ரெட் கார்டு கொடுங்க
பாவனிக்கு பிடிக்காத நிலையில் அமீர் அவருக்கு முத்தம் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் அமீருக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியே துரத்தி விடுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். பாவனிக்கும் அமீர் மீது காதல் இருப்பதால் தான் அவர் அமைதி காத்தார். இருவரும் காதலித்தால் என்ன தப்பு என்றும் ஆதரவும் எதிர்ப்பும் சமமாக கிளம்பி வருகின்றன.

தொடை நடுங்கி பாவனி
செய்றதை எல்லாம் செய்து விட்டு சனிக்கிழமை எபிசோடில் பாவனிக்கு தொடை நடுங்கி பட்டத்தையும் அமீர் கொடுத்ததை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் எரிச்சலின் உச்சத்துக்கே சென்று விட்டனர். பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த பிறகு பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











