ஸ்ட்ராடஜியை சரியாக சொல்ல தெரியாத தாமரை.. கேலி செய்த பிரியங்கா.. இயலாதவரை கேலி செய்வது சரியா?

சென்னை: தாமரைக்கு தொடர்ந்து தான் தான் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தந்து வருவதாக ஒரு மாயையை உருவாக்கி வரும் பிரியங்கா தாமரையை பல இடங்களில் கேலி செய்யவே பயன்படுத்தி வருகிறார் என்கிற குற்றச்சாட்டை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

கிராமத்து நாடக கலைஞரான தாமரை சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்கிற முயற்சியிலேயே பிக் பாஸ் கதவுகளை தட்டி இருக்கிறார்.

தாமரைக்கு எல்லாமே தெரியும் என ஆரம்பத்தில் இருந்து சொல்லி வந்த பிரியங்கா பின்னர் தான் தான் அவருக்கு ஒவ்வொரு விஷயமாக கற்றுக் கொடுத்து அவருக்காக பல இடங்களில் பிரச்சனைகளை சந்தித்தேன் என சொல்வது நியாயம் ஆகுமா? என்றும் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

பிக் பாஸ் வரலாற்றிலேயே

பிக் பாஸ் வரலாற்றிலேயே

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே தாமரை தான் சிறந்த கண்டுபிடிப்பு என ரசிகர்கள் மற்றும் சக ஹவுஸ்மேட்களே பாராட்டி வருகின்றனர். கிராமத்தில் இருந்து வந்தாலும் எந்த இடத்திலும் துவண்டு விழாமல் மோதி பார்த்து விடலாம் என விளையாடி வரும் தாமரை 90 நாட்களை கடந்து ஃபைனல்ஸை நோக்கி வீர நடை போட்டு வருகிறார்.

அப்பாவித்தனம்

அப்பாவித்தனம்

ஒட்டுமொத்த பிக் பாஸ் டீமுக்கும் சமைத்துக் கொடுத்துக் கொண்டு வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் எடுத்து செய்யும் போது தாமரையை பாராட்டும் சக ஹவுஸ்மேட்கள் அவர் எதிர்த்து விளையாடினால் மட்டும் ஏன் கோபப்படுகின்றனர்? என்கிற கேள்வியை தாமரையின் ஆர்மியினர் முன் வைத்து வருகின்றனர்.

வாலி போல

வாலி போல

ஒன்றுமே தெரியாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தாலும் வாலி போல எதிரில் உள்ளவனின் பாதி பலத்தை வாங்கி விடும் திறமை தாமரைக்கு அதிகமாகவே உள்ளது. பல தடைகளை தாண்டி பல போட்டிகளை சந்தித்து இந்த இடத்தில் வந்து நிற்கும் தாமரைக்கு பிக் பாஸ் முடிந்ததும் சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருக்கு என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

பிரியங்கா செய்தது சரியா

பிரியங்கா செய்தது சரியா

நிரூப் வார்த்தைக்கு வார்த்தை ஸ்ட்ராட்டஜி என்று சொல்லிக் கொண்டே தனது விளையாட்டை விளையாடி வரும் நிலையில், அதை பார்த்து கடுப்பான பிரியங்கா நான் நின்றால் ஸ்ட்ராட்டஜி, நடந்தால் ஸ்ட்ராட்டஜி என காமெடி பண்ணிக் கொண்டு இருந்தார். அப்போது ஸ்ட்ராட்டஜி என்றால் என்ன என தெரியாததை போல தாமரை அந்த வார்த்தையை தப்பாக சொல்ல அதை பார்த்த பிரியங்கா அது கூட தெரியாதா? என கலாய்ப்பதை பார்த்த தாமரை செல்வியின் ரசிகர்கள் இயலாதவரை கேலி செய்வது சரியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Recommended Video

Thamarai-க்கு இவ்ளோ பெரிய சொந்த வீடா, வைரலாகும் புகைப்படம் | Bigg Boss Thamarai Selvi House
டிரான்ஸ்லேட்டர்

டிரான்ஸ்லேட்டர்

ஃப்ரீஸ் டாஸ்க்கில் குடும்ப உறுப்பினர்கள் வந்து தாமரையை பாராட்டும் போது மட்டும் தாமரைக்கு டிரான்ஸ்லேட்டரா? நடிச்சீங்க இப்போ மட்டும் கிண்டல் பண்றீங்க என பிரியங்காவின் உரக்கச் சொல் டோனிலேயே கமெண்ட்டுகளை போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர். தாமரை சூட் கேஸ் தூக்காமல் கடைசி வரை போராடி டைட்டில் வின் பண்ண வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X