Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
'தமன்னாவ சுத்தி சுத்தி பார்த்துட்டேன்'.. ஒரு பொட்டுக் கூட கருப்பு இல்லை.. ராதா ரவி சர்ச்சை பேச்சு!
சென்னை: கனல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதா ரவி தமன்னா பற்றி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சினிமா நிகழ்ச்சிகளில் சர்ச்சையாக பேசினால் தான் யூடியூபில் நம்மை பற்றி போடுவார்கள் என்று ஆரம்பத்திலேயே பேசிய ராதா ரவி இப்படியொரு விஷயத்தை அதற்காக பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
கருப்புன்னா அவ்வளவு கேவலமா? என ராதா ரவியின் பேச்சுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
லெஜண்ட்
அண்ணாச்சி
மேல்
என்ன
கோபம்..கடுமையாக
விமர்சித்த
ராதாரவி

பொம்பளைங்க திட்டணும்
எம்.ஆர். ராதாவின் மகனும் நடிகருமான ராதா ரவி தமிழ் திரையுலகில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கனல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், பொம்பளைங்க என்னை கண்டபடி திட்டணும், அப்பத்தான் எனக்கு துட்டு ஏறும் என சினிமாவில் தான் எப்படிப்பட்ட வில்லனாக வலம் வந்தேன் என்பது குறித்து பேசினார். உடனடியாக இதையெல்லாம் பேசினால், யூடியூபில் டைட்டில் போட்டு டிரெண்டாக்க மாட்டார்கள் என்றும் கூற அரங்கமே அதிர்ந்தது.

சர்ச்சை பேச்சு
சர்ச்சை கிளப்ப வேண்டுமே என்பதற்காக கனல் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதா ரவி பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. நடிகை தமன்னா பற்றி அவர் பேசியதற்கும், வெள்ளை மற்றும் கருப்பு நிற பாகுபாட்டை ஊக்குவிக்கும் அளவுக்கு ராதா ரவி பேசியதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமன்னா உடம்புல
கனல் படத்தின் ஹீரோயினை பாராட்டி பேச நினைத்த ராதா ரவி, "அதுயாரு சமந்தாவா.. ச்சே.. சமந்தா கிடையாது.. தமன்னா.. உடம்புல கொஞ்சம் கூட கருப்பே இல்லை.. சுத்தி சுத்தி நானும் பார்த்துட்டேன் கொஞ்சம் கூட கருப்பே இல்லை.. அதே போலத்தான் கனல் பட ஹீரோயினும் செகப்பா அழகா இருக்காரு, கிளாமராத்தான் நடிக்கப் போறாருன்னு நினைச்சேன், ஆனால், படத்தை பார்த்ததும் நடிப்பிலும் அசத்தி உள்ளார் என ராதா ரவி பேசி உள்ளார்.
Recommended Video

குவியும் கண்டனம்
கருப்பா இருப்பவர்கள் எல்லாம் அழகானவர்கள் கிடையாதா? என்கிற கேள்வியுடன் சமூக ஆர்வலர் பலர் ராதா ரவிக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், நடிகை தமன்னா பற்றியும் ராதா ரவி பேசி டோன் கொச்சையாக இருப்பதாகவும் ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். ராதா ரவி எதிர்பார்த்த டிரெண்டிங் அவருக்கு கிடைச்சிடுச்சுப்பா இதுக்காக எப்படியெல்லாம் மனுஷன் பேசியிருக்காரு பாருங்க என்று நெட்டிசன்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.