For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அர்ச்சனா மடியில் ரியோ.. தலை கோதும் நிஷா.. என்னடா பிக் பாஸ்ல பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓடுது!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனா மடியில் ரியோ தலை வைத்து படுத்திருப்பதை பார்த்து ரொம்பவே டென்ஷன் ஆகி உள்ளனர்.

  பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா அக்கா மற்றவர்களை தன் அன்பால் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்.

  கேம் விளையாட வந்த இடத்தில் இப்படி குரூபிசம் க்ரியேட் பண்ணி எஸ்கேப் ஆவது என்ன நியாயம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  யாருக்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு.. நீங்களே ரூல்ஸ பிரேக் பண்ணா எப்டி? வசமா சிக்கிய ரியோ!

  அன்பு இல்லம்

  அன்பு இல்லம்

  இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ரொமான்ஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அர்ச்சனா அக்கா அடிக்கடி சொல்லும் அந்த அன்புக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ரியோ, நிஷா, அர்ச்சனா, சோம், ஜித்தன் ரமேஷ் எல்லாம் ஒரு டீமாக அன்பாக இருக்கின்றனர். பாலாஜி, ஷிவானியுடன் அன்பாக இருக்கிறார். அனிதா, சனம் அன்பாக இருக்கின்றனர். சம்யுக்தா, பாலா, ஷிவானி அன்பாக இருக்கின்றனர். கேபி ஆஜீத்தும் தனியாக அன்பாக இருக்கின்றனர். ஆரி அன்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறார்.

  ஆனாலும் சர்ச்சை

  ஆனாலும் சர்ச்சை

  பெரிய கேங்குக்கும் சின்ன கேங்குக்கும் இடையே நடக்கும் குரூபிச சண்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தங்களுக்கு பிடித்தவர்கள், தங்களுக்கு செய்யும் ஃபேவரிசம் குறித்து பேசாதவர்கள், அடுத்தவர்களுக்கு நடக்கும், அடுத்தவர்களுக்கு கிடைக்கும் ஃபேவரிசத்தை பற்றி மட்டுமே பேசிய் பிரச்சனையை கிளப்பி வருகின்றனர் என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டு.

  ஆக்டிங் அன்னை

  ஆக்டிங் அன்னை

  இன்றைய முதல் புரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், அர்ச்சனாவின் மடியில் ரியோ படுத்துக் கொண்டு, சனம் ஷெட்டியின் சமாதானத்தை ஏற்க முடியாது, ரொம்ப டயர்ட் ஆகிட்டேன் என பேசுவதை பார்த்து கிண்டல் செய்து வருகின்றனர். "ஆக்டிங் அன்னையிடம் அடைக்கலமாகிய அழிச்சாட்டிய ரியோ" என இந்த நெட்டிசன் ரொம்பவே கழுவி ஊற்றி உள்ளார்.

  ரம்யா டிராமா

  ரம்யா டிராமா

  குக் வித் கோமாளி பாக்கும் போது ரம்யா நல்லா சமைப்பாங்கன்னு நினைச்சோம். ஆனால், இந்த பிக் பாஸ் வீட்டில் டோட்டலா வேற மாதிரி இருக்காங்களே என இந்த ரசிகர் மீம் போட்டுள்ளார். ரியாலிட்டி ஷோவில் ரியாலிட்டி இருக்கவே இருக்காது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளாத வரை தான் டிஆர்பி ரேட்டிங் எல்லாம் கிடைக்கும்.

  சம்பளத்தை கொடுப்பார்களா?

  சம்பளத்தை கொடுப்பார்களா?

  "சமுக அக்கறைக்காக bigbosss போட்டியாளர்கள் தமது முழு சம்பளத்தையும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவார்கள் (கமல் உட்பட) கொளுத்தி போடுவோம்" என இந்த பிக் பாஸ் ரசிகை முதலுக்கே மோசம் விளைவிக்கிற வேலையை பார்த்துள்ளார். கஸ்தூரிக்கே ஒரு வருஷம் கழிச்சுதான் சம்பளம் கொடுத்தார்களாம். கம்பெனி ஆர்டிஸ்ட்டுகளுக்கு பாப்புலாரிட்டி மட்டும் தான்.

  பெஸ்ட் பெர்ஃபார்மர்

  பெஸ்ட் பெர்ஃபார்மர்

  ஒரே ஒரு கஸ்டமர் கேர் டாஸ்க் கொடுத்து, ஒட்டுமொத்த பேரையும் எதிரி ஆக்கி விட்டுட்டீங்களே பிக் பாஸ். நீங்க தான் இந்த வாரத்திற்கான பெஸ்ட் பெர்ஃபார்மர் என போட்டியாளர்கள் மத்தியில் கொளுத்திப்போட்டு நாரதர் வேலையை ஆரம்பித்த பிக் பாஸையும் விட்டு வைக்காமல் பங்கம் பண்ணி வருகின்றனர்.

  சீரியல்

  சீரியல்

  "பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அக்காவின் மடியில் தம்பி, தம்பிக்கு தலையை வாரி விடும் தங்கை, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இன்று இரவு 9.30 pm மணிக்கு உங்கள் Vijay TV யில்.. காணத்தவறாதீர்கள்" என இந்த நெட்டிசன் ரொம்பவே நக்கலடித்து பிக் பாஸ் நிகழ்ச்சியை மெகா சீரியல் என்றே கலாய்த்து விட்டார்.

  Aari or Bala? Who is the hero | BIG BOSS TAMIL | Filmibeat Tamil
  வெள்ளமே வந்தாலும்

  வெள்ளமே வந்தாலும்

  பிக் பாஸ் வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்து விட்டது என்ற தகவலை அடுத்து, ஏகப்பட்ட மீம்களும் பறக்க ஆரம்பித்துள்ளன. ஜித்தன் ரமேஷ், நல்லா தூங்கும் காட்சியை எடுத்துப் போட்டு பண்ணி உள்ள வெள்ள எடிட் வேற லெவலில் வைரலாகி வருகிறது. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, வெள்ளமே வந்தாலும் தலைவனை எழுப்ப முடியாது என ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியை தாலாட்டி வருகின்றனர்.

  English summary
  Rio Raj slept in Archana’s lap in Bigg Boss promo 1 and Nisha combing Rio’s hair while Sanam Shetty talks with Rio. Netizens slams Rio’s behavior after watching the first promo of Day 54.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X