For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சுத்தி வளைச்சு நீங்க பேசும் போதே தெரியுது.. சந்தோஷ் நாராயணன் விளக்கத்தை விளாசும் நெட்டிசன்கள்!

  |

  சென்னை: என்ஜாய் எஞ்சாமி பாடல் பிரச்சனை திடீரென மீண்டும் பூதாகரமாகி உள்ளது. தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போஸ்ட் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், சந்தோஷ் நாராயணன் அதற்கு மிக நீண்ட விளக்கத்தை கொடுத்து சமாதான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார்.

  Recommended Video

  Enjoy Enjami சர்ச்சை, உங்கள் பொக்கிஷத்தை அபகரிக்கலாம், யாரும் Tune கூட தரல *Entertainment

  யாருமே எனக்கு டியூன் போட்டுத் தரல, ஆறு மாசம் தூங்காம இந்த ஒரு பாட்டுக்காக வேலை செஞ்சிருக்கேன் என தெருக்குரல் அறிவு அதிரடியாக அறிவித்த நிலையில், சந்தோஷ் நாராயணனின் சப்பைக்கட்டுகளை நெட்டிசன்கள் விளாசி உள்ளனர்.

  மகள் தீக்கு ஆதரவாகவும் தெருக்குரல் அறிவுக்கு எதிராகவும் சந்தோஷ் நாராயணன் செய்த விஷயங்கள் தான் அவரையும் பா. ரஞ்சித்தையும் பிரித்து விட்டது என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

  அஜித்தின் வெற்றிக்கு இந்த பணிவு தான் காரணம்..இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!அஜித்தின் வெற்றிக்கு இந்த பணிவு தான் காரணம்..இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!

  429 மில்லியன் வியூஸ்

  429 மில்லியன் வியூஸ்

  கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தெருக்குரல் அறிவு பாடல் எழுதி பாடகி தீ உடன் பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் இதுவரை 429 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சுமார் 42 கோடி மக்கள் இந்த பாடலை யூடியூபில் பார்த்துள்ளனர். இந்த பாடலுக்காக ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தில் தெருக்குரல் அறிவின் புகைப்படம் ஆரம்பத்தில் வராதது பெரும் பிரச்சனையை கிளப்பியது.

  பா ரஞ்சித் சப்போர்ட்

  பா ரஞ்சித் சப்போர்ட்

  பாடகி தீ மற்றும் வெளிநாட்டு பாடகர் டிஜே ஸ்நேக்கின் புகைப்படங்கள் மட்டுமே வெளியான நிலையில், அதற்கு சந்தோஷ் நாராயணன் எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காத்தது ஏன்? என்கிற கேள்வியை இயக்குநர் பா. ரஞ்சித் அதிரடியாக முன் வைத்து 9 ஆண்டுகளாக இருந்த இசைக் கூட்டணியை ஒட்டுமொத்தமாக உடைத்து விட்டார். சந்தோஷ் நாராயணன் உடன் தனது புதிய படங்களில் அவர் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  தெருக்குரல் அறிவு உருக்கம்

  இந்த பாடலின் பிரச்சனை எல்லாம் எப்பவோ முடிந்து விட்டதாக நினைத்து வந்த நிலையி,ல் தற்போது திடீரென தெருக்குரல் அறிவு தான் 6 மாதமாக இந்த பாடலுக்காக தூங்காமல் உழைத்துள்ளதாகவும், தனக்கு யாரும் ட்யூன் போட்டுத் தரவில்லை என்றும், என் உழைப்பை திருடிவிட்டதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தியது.

  சந்தோஷ் நாராயணன் விளக்கம்

  சந்தோஷ் நாராயணன் விளக்கம்

  இந்நிலையில், அந்த பாடலை தயாரித்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனது மகள் தீ இந்த ஐடியாவோடு தன்னிடம் வந்ததாகவும், தான் முதலில் ட்யூன் போட்டுக் கொடுத்தேன். பின்னர், அவரவர் போர்ஷனுக்கு அவரவர் ட்யூன் போடட்டும் எனக் கூறினேன். இதுவொரு கூட்டு முயற்சி, தெருக்குரல் அறிவின் பங்கு பெருமளவில் இருந்தாலும், இது அனைவரது உழைப்பு என விளக்கம் கொடுத்திருக்கிறார்.

  ரசிகர்கள் விளாசல்

  ரசிகர்கள் விளாசல்

  "சுத்தி வளைச்சு நானும் கூடமாட வேலை பார்த்தேன்'னு சொல்ல வர்றீங்க, ஆனால் ஐடியா என்னோடது, ட்யூன் என்னோடது'னு முழுசா உரிமை கொண்டாட #அறிவு சொல்ற மாதிரி சொல்ல முடியலை. இந்த பூசி மெழுகல்'ல தெரியுது யார் பக்கம் நியாயம்'னு. அறிவு இவ்வளவு நாள் அமைதியா இருந்திருக்கான்." என சந்தோஷ் நாராயணனை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

  இதுதான் காரணமா

  இதுதான் காரணமா

  சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் கலை நிகழ்ச்சியில் பாடகி தீ மட்டுமே கலந்து கொண்டு பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் வீடியோ 2 மில்லியன் வியூக்களை கடந்து டிரெண்டாகி வருவது தான் தெருக்குரல் அறிவை இந்த விவகாரத்தில் தற்போது குரல் கொடுக்க வைத்துள்ளது. இந்த பாடலில் இருந்து அவரை ஒட்டுமொத்தமாக சந்தோஷ் நாராயணனும் பாடகி தீயும் ஓரங்கட்டியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.

  English summary
  Netizens slams Santhosh Narayanan over Enjoy Enjaami issue. Therukkural Arivu blasts and opens up how he worked hard for to make a world hit independent song Enjoy Enjaami in his instagram post.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X