For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  95 நாளா கோமாவுல இருந்தியா.. அதே பத்து வருஷ பழைய கதை.. கேப்டனாவே ஆகல.. சோமை கிழிக்கும் ஃபேன்ஸ்!

  |

  சென்னை: இன்றைய பிக் பாஸ் புரமோக்களை பார்த்த ரசிகர்கள் பாலாவை தற்காலிகமாக டிஸ்சார்ஜ் செய்துவிட்டு சோமசேகரை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

  திடீரென ஞானோதயம் பிறந்தது போல சோமசேகர் ஆரி பற்றி அடுக்கும் குற்றச்சாட்டுகளை பார்த்த ஆரியின் ஆர்மியினர் 95 நாளா சோம் கோமாவுல இருந்தார் போல என கலாய்த்து வருகின்றனர்.

  முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்.. வெறித்தனமாக வசனம் பேசும் விஜய்.. ஏதாவது உள்குத்து இருக்கா?

  பப்பட், வேர்க்கடலை சாப்பிடுறவன் என சொன்ன பாலாவுக்கு இப்படி சோம் சப்போர்ட் செய்வது வேடிக்கையாக இருக்கிறது என வச்சு செய்கின்றனர்.

  குறை சொல்வதிலும் குரூபிசம்

  குறை சொல்வதிலும் குரூபிசம்

  "புலம்பல் ஒரு நாள் கேக்கலாம் இரண்டு நாள் கூட சரிதான்! வாரக் கணக்கா அதே புலம்பல் line மாறாம!!, ஆரி குறை, ஆரி குறை, ஆரி குறை! அய்யயய்ய! இம்சை தாங்கலப்பா!" என்றும் ஆரி பற்றி குறை சொல்வதிலும் எப்படி குரூப்பா ஹவுஸ்மேட்ஸ் செயல்படுறாங்க பாருங்க என்றும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

   சோம்

  சோம்

  "டேய் லூசு சோம்.. மற்றும் #குட்டிசினேகன்_ரியோ நீயும் வெளியே வந்து பிக் பாஸ் நிகழ்ச்சி பாருங்க அப்போ தெரியும்.. ஆரி பின்னாடி பேசல, சோம் நீ பின்னால் சுற்றும் #விஷம்_ரம்யா தான் பின்னாடி நல்லாவே பேசுறாள்!!!" என ஏகப்பட்ட ஆரி ரசிகர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சோமசேகரையும், ரியோவையும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  அன்பு அணி லீலைகள்

  அன்பு அணி லீலைகள்

  "நைட் மசாஜ் & குரூப்பிஸம், அன்பு அணியில் பெஸ்ட் பர்ஃபாமர் தேர்ந்து எடுப்பது, அடுத்தவர் துணி துவைப்பது & சமையல் அணியில் இருந்து நாமினேஷன் ஆகாமல் காப்பது, மன்னிப்பு கேட்டு பின்னாடி போய் பேசுவது 70 நாட்களாக ரியோ & சோம் அன்பு பெட்டில் தஞ்சம்." என லிஸ்ட்டே போட்டு விட்டனர்.

  95 நாளா கோமா

  95 நாளா கோமா

  பாலாவை திடீரென நல்லவனாக சோமசேகர் அரவணைத்து ஆரியை வில்லனாக்குவதை பார்த்த ரசிகர்கள், 95 நாளா லவ் பெட்ல கோமா பேஷன்ட் மாதிரி இருந்துட்டு, இப்போ பெரிய பிளேயர்ஸ் ரேஞ்சுக்கு டிஸ்கஸ் பண்றீங்க, எல்லாருமே விஜய் டிவி புராடக்ட்ஸ் என்பதை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரமா மறந்துருப்பாங்களா என்ன? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

  அந்து போச்சு கெளம்பு கெளம்பு

  அந்து போச்சு கெளம்பு கெளம்பு

  என் கிட்ட மத்தவங்க பத்தி பின்னாடி பேசுற நீ, மத்தவங்க பத்தி பின்னாடி பேச மாட்டேன்னு என்ன நிச்சயம் என ஆரியை பார்த்து சோம் கேட்கிறாரே, என்னைக்காவது ரியோவை பார்த்து அந்த கேள்வியை கேட்க அவருக்கு தைரியம் வந்ததா? ரியோ ஆரிக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்ததும், சூப்பர் என தம்ப்ஸ் அப் காட்டிய ஆரியின் செயலை பார்த்த ரசிகர்கள், ரியோ மற்றும் சோமுக்கு எதிராக அந்து போச்சு கெளம்பு கெளம்பு என பாட்டு பாடி வருகின்றனர்.

  சத்தம் கேட்குதா

  சத்தம் கேட்குதா

  ஆரியை பற்றி திடீரென சோம் பேசியதை பார்த்து நெட்டிசன்கள் ரொம்பவே கடுப்பாகி உள்ளனர். லவ் பெட்டில் இத்தனை நாட்களாக இருந்து கொண்டு, எந்த ஒரு கருத்தையும் முன் வைக்காமல், சேஃப் கேம் ஆடிவிட்டு, இப்போ பேசுறீங்களா என கேட்டு வருகின்றனர். 95 நாட்களாக ஆரியின் ஆட்டத்தை பார்த்தவர்கள் நாங்கள் என்றும், சத்தம் கேட்குதா என சர்கார் படக்காட்சியை போட்டு பட்டையை கிளப்பி வருகின்றனர் ஆரியின் ரசிகர்கள்.

  விஜய் டிவியின் சதி

  விஜய் டிவியின் சதி

  ஆரியை குறை சொல்லியே பிழைக்கும் கும்பல், விஜய் டிவியின் உதவியுடன் தான் சதிகளை செய்கிறார்கள். இப்போது இருக்கும் 7 போட்டியாளர்களில் 6 பேர் விஜய் டிவியின் நெருங்கிய தொடர்பில் முன்னதாக இருந்தவர்கள். அதனால், ஆரியை வெளியேற்ற விஜய் டிவியே பக்கா பிளான் போட்டு புரமோஷன்களில் ஆரியை வில்லனாக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளது என குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த வாரம் எவிக்‌ஷனில் விஜய் டிவியின் தந்திரம் வெளிப்படும் என்றும் அஞ்சுகின்றனர். பார்க்கலாம்!

  English summary
  Netizens slams Somshekar and Rio Raj after watching they both criticize Aari in blaming task.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X