twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஹாசினியின் இந்தி ஆதரவு பேச்சு...இது கமல்ஹாசனுக்கு தெரியுமா?...வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

    |

    சென்னை: சினிமா பிரபலங்கள் தொடர்ந்து 'இந்தி' பற்றி பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.

    Recommended Video

    Suhasini Speech | இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அதனால் கற்றுக்கொள்ளலாம்

    இந்நிலையில், புதிய வரவாக நடிகை சுஹாசினி மணிரத்னம் இந்த சிக்கலில் சிக்கி உள்ளார்.

    Moon Knight Episode 4: இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா ரேஞ்சுக்கு இருக்கே!Moon Knight Episode 4: இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா ரேஞ்சுக்கு இருக்கே!

    இந்தி நல்ல மொழி என்றும் இந்தி பேசுபவர்களிடம் பேச நாமும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நடிகை சுஹாசினி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களில் சுஹாசினியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

    சுஹாசினி என்ன பேசினார்

    சுஹாசினி என்ன பேசினார்

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சுஹாசினியிடம் நாடு முழுக்க இந்தி சர்ச்சை எழுந்து வருகிறதே அது பற்றிய உங்கள் கருத்து என்ன? என்கிற கேள்விக்கு இந்தி நல்ல மொழி, இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் பேச நாமும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி போல இந்தியும் நல்ல மொழி, அனைத்து மொழிகளும் நல்ல மொழி தான் முடிந்தவரை பல மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது என்றார்.

    மறைமுகமாக இந்தி திணிப்பு

    மறைமுகமாக இந்தி திணிப்பு

    தனது வீட்டில் காலையில் வேலைக்கு வரும் தெலுங்கு பேசுபவர் என்றும், இரவு வேலைக்கு வருபவர் இந்தி பேசுபவர் என்றும் அவர்களிடத்தில் அந்த மொழியை பேசவில்லை என்றால் சிக்கல் தான் என சிரித்துக் கொண்டே பேசிய பேச்சு மறைமுகமாக தனது இந்தி திணிப்பு கருத்தை சுஹாசினி முன் வைத்துள்ளார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

    பாரத ரத்னாவுக்காகவா

    பாரத ரத்னாவுக்காகவா

    பாரத ரத்னா விருதை வாங்க இன்னொரு கேண்டிடேட் ரெடியாகிட்டாங்க போல என சுஹாசினி மணிரத்னத்தின் இந்தி ஆதரவு பேச்சை விளாசி நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உங்கள் வீட்டில் வேலை செய்யும் சமையல்காரர் தமிழ் கற்றுக் கொள்ள ஏன் நீங்கள் சொல்லவில்லை என்கிற கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

    நல்லவர்கள் என எப்படி சொல்லலாம்

    நல்லவர்கள் என எப்படி சொல்லலாம்

    இந்தி பேசும் அனைவருமே நல்லவர்கள் என சுஹாசினி மணிரத்னம் எப்படி சொல்லலாம். அவருடைய உள்நோக்கம் இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. இந்தி நல்ல மொழி என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அனைத்து மொழிகளிலும் நல்ல மொழிகள் தான் என்பதில் பிரச்சனை இல்லை. இந்தி பேசுபவர்களிடம் பேச நாம் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என திணிப்பது தான் தவறான விஷயம் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

    சோறு தின்பது

    சோறு தின்பது

    "நீங்களும் உங்க வீட்டுக்காரரும் சோறு தின்றது தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களோட காசுல. ஆனா உங்களுக்கு ஹிந்திக்காரன் தான் நல்லவன் பெரும்பான்மையான கூத்தாடிகள் அனைவரும் தமிழின விரோதிகளே" என நெட்டிசன்கள் சுஹாசினியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

    கமலுக்குத் தெரியுமா

    கமலுக்குத் தெரியுமா

    "இப்படி பேசி...சித்தப்பாவுக்கு கிடைக்கற ஓட்டுக்கு வேட்டு வெச்சிடுங்க... ஏன்னா? எப்படியும் கேன்வாசிங் செய்யப்போவீங்க, ஜனங்க பழைச மறக்காமே...வேட்ட போட்ருவாங்கள்ல???" என்றும் இந்த விஷயம் கமலுக்குத் தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    பொன்னியின் செல்வன் வருது

    பொன்னியின் செல்வன் வருது

    மேலும், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வருது. இந்நேரத்தில் தமிழர்களை பகைத்துக் கொண்டால் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும் என நடிகை சுஹாசினிக்கு பலரும் அட்வைஸ் செய்தும் அவரது பேச்சை கண்டித்தும் வருகின்றனர்.

    English summary
    Netizens slams Suhasini Maniratnam’s talks about Hindi language and they mention Suhasini Maniratnam indirectly doing Hindi imposition.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X