இதுதான் டிஆர்பி.. வெயிட்டான போட்டியாளரை வெளியேத்திட்டு ஊரு ஃபுல்லா ஷோ பத்தி பேச வைக்கிறது!

சென்னை: இந்நேரம் எதிர்பார்த்ததை போலவே அபிநய் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தால் யாருமே பொங்கி இருக்க மாட்டார்கள்.

பிக் பாஸ் ஷோவும் பரபரப்பு இல்லாமல் சப்பென்று முடிந்திருக்கும். ஆனால், சுருதியின் வெளியேற்றம் இன்னும் ஒரு வாரத்துக்கு பேசப்படும் அதுதான் சார் டி.ஆர்.பி என சில நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஓவியா தான் பிக் பாஸேன்னு நினைச்சிட்டு இருந்தப்போ அவரையே வெளியேற்றி வெற்றிப் பெற்ற ஷோ தான் பிக் பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இப்படி பல திறமையான போட்டியாளர்களை வெளியே அனுப்பி இருக்காங்க!

டிஆர்பி கிங்

டிஆர்பி கிங்

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் 15 சீசன்களும் தமிழில் 5 சீசன்களும் மற்ற மொழிகளிலும் வெற்றிகரமாக செல்வதற்கு காரணமே அந்த ஷோவின் கட்டமைப்பு தான். ரியாலிட்டி ஷோ, மக்கள் தினமும் ஓட்டுப் போடணும் பிரபலங்களின் உண்மையான முகம் இதுதான் இவங்க சூப்பர், இவங்க டம்மி பீஸ் என காட்டி டிஆர்பி கிங்காக இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது.

பரபரப்பை கூட்ட

பரபரப்பை கூட்ட

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஆரம்பம் ஆகிவிட்டது. போட்டியாளர்கள் பலரும் பெரிதளவில் தெரியாத முகங்களாக உள்ளார்களே என நினைத்துக் கொண்டு இருக்கும் போது நமீதா மாரிமுத்துவின் கண்ணீர் கதை ஒட்டுமொத்த ரசிகர்களையும் அந்த நிகழ்ச்சிக்குள் வரவழைத்தது. ஆனால், அதே சமயம் அவரை வெளியே அனுப்பி விட்டால் இன்னமும் நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்கும் பரபரப்பு கூடும் என செய்த வேலை தான் அவரது வெளியேற்றம் என்கின்றனர்.

அபிஷேக் எவிக்‌ஷன்

அபிஷேக் எவிக்‌ஷன்

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் கமல் சார் பற்றியும் அவதூறாக பேசிய அபிஷேக் ராஜா உள்ளே இருக்காரு இந்த வாரம் அவரை கமல் சார் வெளியேற்றினால் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார் என பட்டி தொட்டி எங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த தீ பற்றிக் கொள்ளும் என்றே அவரது எவிக்‌ஷனும் இருந்தது.

நார்மல் எவிக்‌ஷன்

நார்மல் எவிக்‌ஷன்

பரபரப்புக்காக சில எவிக்‌ஷன்களையும் நார்மலாக சில வெளியேற்றங்களையும் கலந்து கட்டி செய்து வருவதால் தான் இந்த ஷோ ஸ்க்ரிப்டட்டா? அல்லது ரியாலிட்டியா? என்பது புரியாமல் இருதரப்பட்ட கருத்துக்களுடன் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள்? நமக்கு டிஆர்பி எகிறும் என பக்காவா பிளான் பண்ணி நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்து வரும் வேலை தான் இந்த பிக் பாஸ் என்கிற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டு வருகிறது. பிக் பாஸ் ஓட்டு எல்லாம் ஃபேக் என்பது குறித்து கஸ்தூரி உள்ளிட்ட முன்னாள் போட்டியாளர்களே கூறியுள்ளனர்.

சுருதியை பற்றி பேசுவாங்க

சுருதியை பற்றி பேசுவாங்க

இந்த வாரம் எதிர்பார்த்தபடியே அபிநய் வெளியேறி இருந்தால் ஏற்கனவே தீபாவளி வாரம் கடுப்பாக போனது. அபிநய் வெளியே போனால் யார் பேசுவார்கள். ஆனால், அவருக்கு பதில் சுருதி இந்த வாரம் வெளியேறியுள்ளார் என ரகசியத்தையும் லீக் செய்து விட்டு ஞாயிற்றுக் கிழமை ஷோவை ரசிகர்களை பார்க்க வைப்பதில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியே அடங்கி இருக்கிறது.

மறந்து விடுவார்கள்

மறந்து விடுவார்கள்

அடுத்த வாரமே பிக் பாஸ் வீட்டுக்கு வேறு ஒரு வைல்டு கார்டு என்ட்ரி வந்தால் சுருதியின் எவிக்‌ஷனை மறந்து விட்டு அதை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள் பிக் பாஸ் ரசிகர்கள் என்பது நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஓவியா முதல் சனம் ஷெட்டி வரை ஏகப்பட்ட போட்டியாளர்களை இப்படி வெளியே அனுப்பிய பிறகும் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிநடை போட்டுள்ளது என்று ஏகப்பட்ட பாயின்ட்டுகளை நம்பலாம் போல இருக்கே என்பதை போலவே நெட்டிசன்கள் சிலர் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X