நாமக்கல் வரைக்கும் நக்கல் பண்ண விஜய்.. இப்போ ’சிஎம் சார்’ என சைலன்ட் ஆகிட்டாரே.. அவ்ளோதானா?

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்ததில் இருந்தே ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வரும் விஜய் கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு முற்றிலும் அமைதியாகி விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நாமக்கல்லில் புதுசா ஏதாவது சொல்லலாமான்னு கேட்டு செவ்வாய் கிரகத்துல ஐடி பார்க் அமைக்கலாமா? என நக்கல் அடித்தார்.

ஆனால், அன்று இரவு கரூரில் விஜய் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்த போதே மக்கள் செத்து மடியும் துயரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உயிரிழந்த மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் தவெகவை சேர்ந்தவர்கள் ஈடுபடாமல் இருந்ததும், விஜய் பத்திரிகையாளர்களை கூட சந்திக்காமல் தனி விமானத்தில் சென்னைக்கு வந்து வீடு திரும்பியதும் பொதுமக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

Netizens slams Vijay and trolled him with CM Sir hashtag trending
Photo Credit:

முதல் முறையாக விஜய் ட்வீட் போடாமல் இப்படியொரு வீடியோவை அந்த மனநிலையுடனே வெளியிட்டு இருக்கலாமே என்றும் இப்போது ஏன் 3 நாள் கழித்து விஜய் பொறுமையாக இப்படியொரு வீடியோவை சத்தமே கேட்காமல் வெளியிட்டுள்ளார் என்றும் இங்கேயும் மைக் பிரச்னையா என கலாய்த்து வருகின்றனர்.

அப்போ ஸ்டாலின் அங்கிள்: நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிய நிலையில், 2026ம் ஆண்டு ஆட்சியை தமிழக வெற்றிக் கழகம் தான் பிடிக்கும் என உறுதியுடன் கர்ஜித்து வந்தார். கரப்ஷன் கபடதாரி, பாசிசம், பாயாசம்னு அரசியல் கட்சிகளை எதிர்த்து வந்த விஜய் திமுகவை நேரடி எதிராகவே கருதி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேலும், ஸ்டாலின் அங்கிள் என விஜய் கலாய்த்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கரூர் அசம்பாவிதத்துக்குப் பிறகு இப்போ விஜய் பேசும் போது, சிஎம் சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்க, என் தொண்டர்களை எதுவும் பண்ணாதீங்க என கெஞ்ச ஆரம்பித்துள்ளார்.

நாமக்கல்லில் நக்கல்: கடந்த சனிக்கிழமை காலை நாமக்கல்லுக்கு சென்று விஜய் பேசும் போது, புதுசா எதையாவது சொல்லுங்கண்ணு கேட்கிறாங்க, புதுசா என்னத்த சொல்ல, வேணா செவ்வாய் கிரகத்துல ஐடி பார்க் கட்டித்தரேன் சொல்லலாமா? அமெரிக்காவுக்கு இங்கே இருந்தே ரோடு போடுறேன் சொல்லலாமா? வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் விடுறேன்னு சொல்லலாமா என ரொம்பவே நக்கல் அடித்து பேசினார்.

சிஎம் சார்: ஆனால், கரூருக்கு சொன்ன நேரத்தில் கூட செல்லாமல் காலம் தாழ்த்தி இத்தனை மக்கள் பலியான சம்பவம் அறிந்தும் மக்களுக்காக களத்தில் இறங்கி போராடாமல் அங்கே இருந்து கிளம்பிச் சென்று 3 நாட்கள் கழித்து இப்படி மீண்டும் திமுக அரசை குறை சொல்லிக் கொண்டு இருப்பது மாற்று அரசியலுக்கான பாதை இல்லை என்றும் விஜய்யை நம்பிய மக்களுக்கு விஜய் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்தவர்களுக்கு அவரது இந்த வீடியோ எந்தவொரு பயனும் தராது என்றே நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் "சிஎம் சார்" என்கிற ஹாஷ்டேக் தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X