உலக நடிப்புடா சாமி...டாஸ்க்கில் ஒன்றிப் போன அண்ணாச்சி...கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 53 வது நாளான நேற்றுடன் போர்டிங் ஸ்கூல் லக்சுரி பட்ஜெட் டாஸ்ட் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இறுதி நாளான நேற்று சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியரை தேர்வு செய்து பேட்ஜ், சாக்லேட் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த டாஸ்க் நிறைவடைந்ததும் ஆசிரியர்களாக இருந்து ஓவராக டார்ச்சர் செய்த சிபி, ராஜு, அமீர், அபிஷேக் ஆகியோரை, மாணவர்களாக இருந்த மற்ற ஹவுஸ்மேட்கள் அடித்து, உதைத்து கலாட்டா செய்து விளையாடினர். இந்த டாஸ்க் முடிந்ததுமே அடுத்த டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.

ரியாக்ட் செய்யக் கூடாது

ரியாக்ட் செய்யக் கூடாது

புதிய டாஸ்க் பற்றிய விபரங்களை இமான் அண்ணாச்சி வாசித்தார். இந்த டாஸ்கிற்கு பெயர் சும்மா இருடா...டேய்...சும்மா இருடா என்பது தான். இந்த டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தாலும் போட்டியாளர்கள் யாரும் எந்த ரியாக்ட்டும் செய்யாமல் தங்களின் அன்றாட வேலைகளை பார்க்க வேண்டும். அப்படி ரியாக்ட் செய்தால், அந்த நபர் அடுத்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ராசசிற்கு நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

3 பேரை அழுக வைத்திருக்கலாம்

3 பேரை அழுக வைத்திருக்கலாம்

இந்த டாஸ்க் என்னவென்று புரியாமல் சிலர் குழம்ப, பிரியங்கா, அபினய் போன்றோர் மற்றவர்களுக்கு இது பற்றி விளக்குகிறார்கள். டாஸ்க் துவங்குவதற்கு முன்பே, அக்ஷரா, அபிஷேக், வருண் ஆகியோர் டைனிங் டேபிள் மீது ஏறியும் அமர்ந்தும், மற்ற ஹவுஸ்மெட்கள் பெட்ரூம் ஏரியாவிலும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜு, உண்மையான போர்டிங் ஸ்கூல் இதை விட கண்டிப்பாக இருக்கும். எல்லோரும் ஸ்டிரிட் ஆபீசராக இருப்பார்கள். நாமும் இன்னும் ஸ்டிரிட்டாக இருந்து தினமும் மூன்று பேரை அழுக விட்டிருக்கலாம் என சிபியிடம் சொல்கிறார்.

படிக்க ஆசைப்படும் தாமரை

படிக்க ஆசைப்படும் தாமரை

அப்போது தாமரை, கடந்த 2 நாட்களாக இடையெல்லாம் பார்க்கும் போது தான் நம்மளும் நன்றாக படிக்க வைத்திருந்தால், படித்திருக்கலாம் என தோன்றுகிறது என ராஜு மற்றும் சிபியிடம் கூறுகிறார். அதற்கு ராஜுவும் இனி கவலைப்பட்டு ஒரு பிரயோஜனமும் கிடையாது என்கிறார் நக்கலாக. அப்போது பசர் அடிக்கிறது. என்ன நடந்தாலும் ரியாக்ட் செய்து விடாதே அக்கா என தாமரையை எச்சரிக்கிறார் சிபி.

 இதுதான் அன்றாட வேலையா

இதுதான் அன்றாட வேலையா

இருந்தாலும் பயங்கர இடி சத்தம் கேட்க, தாமரை, சிபி உள்ளிட்டோர் ஜர்க் ஆகிறார்கள். சமாளித்துக் கொண்டு சகஜமாக பேசுவதை போல் இருக்கிறார்கள். ஆனால் ராஜு, இப்படி தான் அன்றாட வேலைகளை பார்ப்பீர்களாடா என கிண்டல் செய்கிறார். அப்போது மெயின் டோர் ஓபனாக பாடல் ஒலிக்கிறது. இருந்தாலும் யாரும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால் அண்ணாச்சி, அம்மா குரல் போட்டார்கள் என்றால் அபிஷேக் அழுதுவான். என் பொண்ணை காட்டினால் நான் அழுவேன். அவர் மனைவி முகத்தை காட்டினால் சிபி அழுவார் என்கிறார்.

பிரியங்காவை திட்டும் நிரூப், அபிஷேக்

பிரியங்காவை திட்டும் நிரூப், அபிஷேக்

சும்மா இருடா டேய் சும்மா இருடா டாஸ்க் இத்துடன் முடிகிறது என வேறு ஒருவர் குரல் கேட்க, தொடர்ந்து பசர் அடித்ததும் டாஸ்க் முடியும் என பிக்பாஸ் குரலும் அளிக்கிறது. பிறகு பசர் அடித்ததும் அண்ணாச்சி உட்பட அனைவரும் கத்துகிறார்கள். இருந்தாலும் யாரோ வருகிறார்கள் என வாசலுக்கு ஓடும் பிரியங்காவிடம், ஏய் பைத்தியம் நில்லு. ரியாக்ட் பண்ண கூடாதுன்னு சொல்லிருக்காங்கல்ல என்கின்றனர் நிரூப் மற்றும் அபிஷேக். அது தான் பசர் அடிச்சுதே என்கிறார் பிரியங்கா.

நம்பாத அண்ணாச்சி

நம்பாத அண்ணாச்சி

அப்போது சஞ்சீவ் என்ட்ரி கொடுக்க, ரியாக்ட் செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் ஹவுஸ்மேட்கள் இருக்கிறார்கள். கேம் முடிந்தது என சஞ்சீவ் சொன்னதும் மற்றவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொள்கின்றனர். வைல்ட் கார்ட் என்ட்ரி என அனைவரும் சொன்னாலும் அதை நம்பாமல், சஞ்சீவ் இருப்பதை பார்க்காதது போலவும் நடந்து கொள்கிறார் அண்ணாச்சி. அவரை கலாய்க்க 14 பேர் நாமினேஷனுக்கு போய் விட்டார்கள் என்கின்றனர் சிலர். மற்றவர்கள் அவரை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு சஞ்சீவை கட்டிபிடித்து, நாமினேஷனுக்கு போனாலும் பரவாயில்லை என்கிறார் அண்ணாச்சி.

உலக நடிப்புடா சாமி

உலக நடிப்புடா சாமி

இதை பார்த்த நெட்டிசன்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர். நிஜமாவே சஞ்சீவ் வந்ததை நீங்க பார்க்கலியா அண்ணாச்சி. இது உலக நடிப்புடா சாமி என பலவிதங்கள் கலாய்த்து வருகின்றனர். டாஸ்க் முடிந்ததாக பசர் அடித்ததும் கத்திய அண்ணாச்சி, பிறகு டாஸ்க் முடிந்தது தெரியாது என சொல்வது நம்புவதாக இல்லை. ஓவர் ஆட்டிட்யூட் இது சொல்லி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X