இதுல என்ன எதிர்பாராத திருப்பம்...பிக்பாஸ் ஃபினாலே ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : அக்டோபர் 3 ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு துவங்கி இறுதிப் போட்டி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Recommended Video

BIGG BOSS TRP-ஐ பின்னுக்கு தள்ளிய Sun Tv Serial | Channel TRP, Poove Unakkaga

இறுதி போட்டியாளர்களாக தற்போது வரை 5 பேர் வீட்டிற்குள் உள்ளனர். அமீர், பாவனி, ராஜு, பிரியங்கா, நிரூப் ஆகியோர் வீட்டிற்குள் உள்ளனர். இவர்களில் மூன்று பேர் வெளியேற்றப்பட்டு, இருவர் ஃபினாலே மேடைக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இணையத்தில் கசிந்த விபரம்

இணையத்தில் கசிந்த விபரம்

இந்த முறை ஃபினாலே நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படாமல், ஏற்கனவே எடுக்கப்பட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஃபினாலேவிற்கான ஷுட்டிங் நேற்றே எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. இதனால் வெற்றியாளர்கள் யார் என்ற முழு விபரமும் இணையத்தில் கசிந்து விட்டது.

இவர் தான் டைட்டில் வின்னர்

இவர் தான் டைட்டில் வின்னர்

ராஜு, பிக்பாஸ் டைட்டில் வின்னர் டிராபி வைத்திருப்பது போன்ற போட்டோ வெளியாகி தீயாய் பரவி வருகிறது. பிரியங்கா தான் ரன்னர் அப் பட்டத்தை வென்றுள்ளார். ஐந்தாவது இடத்தில் இருக்கும் நிரூப் மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் அமீர் ஆகியோர் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். மூன்றாவது இடத்தை பாவனி பெற்றுள்ளார்.

ஃபினாலே மேடையில் கமல்

ஃபினாலே மேடையில் கமல்

இந்நிலையில் இன்றைய ஃபினாலே எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல், ஃபினாலே மேடையில் தோன்றுவது போன்றும், இறுதி போட்டியாளர்கள் 5 பேரும் வீட்டிற்குள் ஃபினாலேவிற்கான உடையணிந்து தயாராக உள்ளது போலவும் காட்டப்பட்டுள்ளது.

எதிர்பாராத திருப்பங்களுடன்

எதிர்பாராத திருப்பங்களுடன்

இதில், எதிர்பாராத திருப்பங்களுடன் ஒரு நீண்ட பயணம். அதன் உச்சகட்டம் இன்று. ஒவ்வொருவருக்கும் மனம் கவர்ந்த போட்டியாளர் என்ற ஒருவர் இருந்திருப்பார். ஒட்டுமொத்த மக்கள் தீர்ப்பில் அவருக்கு இடம் இருக்குமா? பிக்பாஸ் சீசன் 5...தி கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6.30 மணிக்கு என கமல் பேசுகிறார்.

இதுல என்ன எதிர்பாராதது

இதுல என்ன எதிர்பாராதது

இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு, ரொம்ப சஸ்பென்ஸ் வேண்டாம் ராஜு தான் டைட்டில் வின்னர். எதிர்பார்த்த திருப்பம் தான். இதுல என்ன எதிர்பாராத திருப்பம். ஃபினாலேவில் என்னவெல்லாம் நடக்க போகிறது என்பது அனைத்தும் தெரிந்து விட்டது. இதுல என்ன சஸ்பென்ஸ் போல பில்ட் அப் என நெட்டிசன்கள் கடுப்பாகி கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X