சண்டையில்லாமல் நடந்த ஒரே டாஸ்க் இது தானா... பெயிண்ட் டாஸ்க்கை கலாய்த்த நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 இன்று 62 வது நாளை எட்டி உள்ளது. மிகவும் விறுவிறுப்பாக, அனல் பறக்கும் சண்டைகளுடன் போட்டிகள் நடந்து வருகிறது. போட்டியாளர்கள் தினமும் சண்டை போட்டுக் கொள்வது எரிச்சலடைய வைப்பதாக ரசிகர்கள் அழுத்துக் கொண்டாலும் இது சுவாரஸ்யமாக இருப்பதாக பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வாரம் 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளதால் யார் வெளியேற போகிறார், யார் முதலில் சேவ் செய்யப்பட போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதே சமயம் கொரோனாவில் இருந்து மீண்ட கமல், மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பி உள்ளதால் இன்றைய நிகழ்ச்சி கூடுதல் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.

நன்றி சொன்ன கமல்

நன்றி சொன்ன கமல்


நிகழ்ச்சியின் துவக்கத்தில் கமல், தான் நலம் பெற வேண்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அனைவரின் அன்பின் காரணமாகவே தான் சீக்கிரம் குணமடைந்து வந்ததாக கமல் தெரிவித்தார். கமலை மீண்டும் பார்த்த மகிழ்ச்சி ரசிகர்கள் இடையே காணப்பட்டது. தொடர்ந்து 61 வது நாளில் நடந்த நிகழ்வுகள் காட்டப்பட்டது.

 பெயிண்ட் டாஸ்க்

பெயிண்ட் டாஸ்க்

இதில் மற்ற சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் நிப்பான் பெயிண்ட் டாஸ்க் வழங்கப்பட்டது. இதற்காக ஹவுஸ்மேட்கள், சிவப்பு மற்றும் வெள்ளை என இரு அணிகளாக பிரிந்தனர். இதில் இரு அணியை சேர்ந்தவர்களுக்கும் மினியேச்சர் ஹவுஸ் கொடுக்கப்பட்டது. இதற்கு போட்டியாளர்கள் பெயிண்ட் செய்ய வேண்டும். எதிரணியை சேர்ந்தவர்கள் அதை பந்துகளை எறிந்து தடுக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது.

கொண்டாடிய ஹவுஸ்மேட்கள்

கொண்டாடிய ஹவுஸ்மேட்கள்

இதில் வெள்ளை அணி வெற்றி பெற்றனர். இந்த டாஸ்க் மற்றும் வெற்றியை அனைவரும் ஜாலியாக விளையாடி, சந்தோஷமாக கொண்டாடினர். இரு அணிகளுக்கும் பிக்பாஸ் பரிசுகள் வழங்கினார். அதிலும் அக்ஷராவின் சிக்சியாரிட்டியை பாராட்டுவதாக கூறி பிக்பாஸ் பரிசு வழங்கினார்.

கலாய்த்த நெட்டிசன்கள்

கலாய்த்த நெட்டிசன்கள்

இதை பார்த்த நெட்டிசன்கள், இந்த சீசனில் சண்டை, பிரச்சனை, மோதல் இல்லாமல் நடந்த ஒரே டாஸ்க் இது தான் போல. வீக் என்ட் டாஸ்க் என்பதால் போட்டியாளர்கள் ஒற்றுமையாக நடந்து கொள்கிறார்களா. அப்படியானால் இவ்வளவு நாளான இருந்த சண்டை, பிரச்சனைகள் என்னப்பா ஆச்சு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X