தேங்காய்.. குழவிக்கல்லு தானா சுத்தும்.. அம்மனுக்கே ப்ரோமோஷன் செய்த இந்திரஜா..பணத்திற்காக இப்படியா?

சென்னை: ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா கடந்த வருடம் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு ஒரு மகள் சமீபத்தில்தான் பிறந்த நிலையில்,. மகன் பிறந்ததிலிருந்து தொடர்ந்து வீடியோக்களாக போட்டு வரும் இந்திரஜா அண்மையில் குழந்தையை வைத்து ஓரு வீடியோ போட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும் அடங்காத இந்திரஜா, தற்போது வாராஹி அம்மன் கோவிலுக்கு ப்ரோமோஷன் செய்து இணையவாசிகளிடம் பேச்சு வாங்கி வருகிறார்.

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த ரோபோ சங்கர் தனுஷின் மாரி படத்தில் நடித்து திரைத்துறைக்கு வந்தார். அந்தப் படத்துக்கு பிறகு வரிசையாக பல திரைப்படங்களில் நடிது தனக்கு என பெயர் எடுத்தார். இவரின் மகளான இந்திரஜா, பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர், முறை மாமன் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு நட்சத்திரன் என அழகான தமிழ் பெயர் வைத்தார்.

Indraja Shankar Robo Shankar
Photo Credit:

இந்திரஜா சங்கர்: சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து இருக்கும் இந்திரஜா, அதில் குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்திலேயே, தனது குழந்தைக்கு முருகன் கெட்டப் போட்டு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து 100 வது நாள் செலப்ரேஷன் என குழந்தையை வைத்து பல பல வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். அதைத் தொடர்ந்து, தனது ஆறு மாத குழந்தையை He Guru என்ற நிறுவனத்துக்கு தூக்கி சென்றார். அந்த நிறுவனம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண்டும் பயிற்சியை கொடுக்கும் நிறுவனம் என விளம்பரம் செய்திருந்தார். இதைப்பார்த்த இணையவாசிகள் 6 மாத குழந்தைக்கு எதற்கு பயிற்சி, குழந்தையை வைத்து சம்பாதிக்க வேண்டுமா என கடுமையாக அவரை திட்டித்தீர்த்தனர்.

அம்மனுக்கே ப்ரோஷனா: இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில், சித்தரின் அருள் வாக்கால் தேய்காயும், குழவிக்கல்லும் தானாக சுத்தும். இந்த கோவில் திருப்பூர் வஞ்சிபாளையம் அரசு பள்ளி அருகில் உள்ள ஶ்ரீ சுயம்பு வாலை வாராஹி தெய்வீக சித்தர் பீடம், இந்த கோவிலில் வாராஹி அம்மன் சுயம்புவாக உருவானது. நாம அருள் வாங்கு கேட்க கேட்க, தேய்காயும், குழவிக்கல்லும் தானாக சுத்துகிறது இதைப்பார்த்து எனக்கு மெய் சிலிர்த்துவிட்டது என கூறிவிட்டு, இந்த கோவிலுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யும் படி பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த இணைவாசிகள் அம்மனுக்கே ப்ரோமோஷனா என்றும், தெய்வத்தை நம்புங்க சித்தரை நம்பாதீங்க, காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்களா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X