எல்லா டாஸ்க்லையும் சண்டை தானா... ப்ரோமோ பார்த்து கடுப்பாகும் நெட்டிசன்கள்
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை எட்டி உள்ளது. இதில் வாரத்தின் முதல் நாளான நேற்று, வரும் வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ், கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது.
இதில் இந்த வாரம் தலைவராக அபிநய் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இசைவாணி தன்னிடம் உள்ள காயின் பவரை பயன்படுத்தி, வீட்டின் இந்த வார தலைவர் பதவியை அபிநய்யிடம் இருந்து தட்டி பறித்தார். பிறகு அதற்கு அபிநய்யிடம் விளக்கமும் சொன்னார் இசைவாணி. இந்த வாரத்தில் வீட்டை ஆளுமை செய்யும் அதிகாரம் பாவனிக்கு வழங்கப்பட்டது.

பிக்பாஸில் முதல் முறையாக
பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வாரம் நாமினேஷன் ப்ராசசில் மூன்று பேரை தேர்வு செய்து சொல்லுமாறு கூறினார் பிக்பாஸ். இதில் ராஜு, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, பாவனி, சிபி, மதுமிதா, அபிநய் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.

லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்
இந்நிலையில் 37 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்படுகிறது. இதில் மற்றவர்களின் பெயர்கள் உள்ள பொம்மைகளை எடுத்துக் கொண்டு போட்டியாளர்கள் ஓட வேண்டும். கூடாரத்திற்குள் கடைசியாக ஓடும் நபரின் கையில் வைக்கப்பட்டுள்ள பொம்மையில் யாருடைய பெயர் உள்ளதோ அவர் விளையாட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

நிரூப் - வருண் சண்டை
இதில் முதல் ப்ரோமோவில் தாமரை மற்றும் நிரூப் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அடுத்த ப்ரோமோவில் நிரூப் மற்றும் வருண் மிக கடுமையாக சண்டை போட்டு, கத்துகிறார்கள். இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள், எல்லா டாஸ்கிலும் சண்டை தானா. இந்த ப்ரோமாவில் வருணை பார்த்தால் மகத் ஞாபகம் வருது. என்னப்பா வருண் டான்ஸ் எல்லாம் ஆடுறாரு என கேட்டுள்ளனர்.

எல்லாத்துலையும் சண்டையா
எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் ரெண்டு பேர் கண்டிப்பா சண்டை போடுறாங்க. ஆஹா ப்ரோமோ செமயா இருக்கே. கத்திக்கிட்டே இருக்கீங்களே எப்போப்பா அடித்துக் கொள்வீர்கள். நிரூப் - வருண் சண்டையை பார்க்கும் போது கடந்த சீசனின் பாலாஜி - ஆரி சண்டை போட்டுக் கொண்டது தான் நினைவுக்கு வருது என கமெண்ட் செய்துள்ளனர்.

இப்போ தான் சூடுபிடிக்குது
இன்னும் சிலர் இப்போ தான் பிக்பாஸ் சூடுபிடிக்குது. இந்த வாரம் முதல் ஆளாக ராஜு தான் காப்பாற்றப்படுவார். இத இத தான் எதிர்பார்த்தோம். என்னடா பண்ணுறீங்க. இப்போ தான் ஒரிஜினல் கேம் ஸ்டார்ட் ஆகுது. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் என கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











