»   »  மெர்சல் விழாவில் ஓவரா கூவி பல்பு வாங்கிய பார்த்திபன்

மெர்சல் விழாவில் ஓவரா கூவி பல்பு வாங்கிய பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் தளபதி ரசிகர்களிடம் விசில் வாங்கிய பார்த்திபனை நெட்டிசன்கள் வச்சு செஞ்சிட்டார்கள்.

தளபதி விஜய்யின் மெர்சல் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. அரங்கில் திரும்பும் பக்கம் எல்லாம் தளபதி ரசிகர்களாக இருந்தனர்.

அரங்கமே ரசிகர்களால் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில் பேசி விசில், கைதட்டல் வாங்கினார்.

கூவிட்டார்

கூவிட்டார்

பொடிமாஸ் செய்யணும்னா முட்டை வேணும், மாஸ் படத்திற்கு விஜய் மட்டும் தான் வேண்டும். விஜய்யின் பெற்றோர் கிறிஸ்டியன் தேவாலயங்களில் நடக்கும் மாஸுக்கு எல்லாம் போய் வேண்டி இப்படி ஒரு மாஸான பிள்ளைய பெத்திருக்கிறார்கள் என்றார் பார்த்திபன்.

சி.எம்.

சி.எம்.

உலகத்தில் மிகச் சிறந்த சி.எம். நீங்க தான் என்று விஜய்யின் அடுத்த படத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் பண்ணுவார். சி.எம். என்றால் கலெக்ஷன் மன்னர் என அர்த்தம்.

கலாய்

கலாய்

மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் ஓவராக கூவியதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முடியல

முடியல

கைதட்டல் கிடைக்கிறது என்றால் என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா பார்த்திபன் சார். இது எல்லாம் கொஞ்சம் ஓவர். கொடுத்த காசுக்கு மேல கூவும் மொமன்ட் என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

புலி

புலி பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் விஜய்யை புகழ்ந்து தள்ளி நெட்டிசன்களிடம் பல்பு வாங்கினார். தற்போது பார்த்திபனுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
Netizens are making fun of R. Parthiban for his speech in the Mersal audio launch function held in Chennai on sunday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil