காதை பிடித்து திருகிய கிரேஸி மோகன்...த்ரோபேக் ஃபோட்டோ வெளியிட்ட சதீஷ்

சென்னை : கோலிவுட்டில் டாப் காமெடியன்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ். பல படங்களில் காமெடியனாக கலக்கி வரும் சதீஷ், விரைவில் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடிக்க போகிறார்.

மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த தமிழ் படத்தின் மூலம் நடிகரான சதீஷ், சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, எதிர் நீச்சல், மான் கராத்தே, ரெமோ, விஜய் நடித்த கத்தி, தனுஷ் நடித்த தங்க மகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். தமிழ் படம் 2 ல் வில்லன் ரோலிலும் நடித்துள்ளார்.

Netizens troll Sathishs through back photo with Crazy Mohan

படிக்கும் போதே சினிமாவின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கிரேஸி மோகன் ட்ரூப்பில் சேர்ந்து 8 வருடங்கள், மேடை நாடகங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார். கிரேஸி மோகன் ட்ரூப்பில் சேரும் போது சதீஷுக்கு வயது 14 தான். பிரபலமான கிரேஸி மோகன் நாடகமான சாக்லேட் கிருஷ்ணா நாடகத்திலும் சதீஷ் நடித்துள்ளார்.

பிறகு ஏ.எல்.விஜய்யிடம் பொய் சொல்ல போறோம் படத்தில் இணை வசன எழுத்தாளராக பணியாற்றினார். அதற்கு பிறகு செர்ரி, மதராசப்பட்டினம் போன்ற படங்களில் சிறிய ரோலில் நடித்தார். கத்தி, தங்கமகன், ரெமோ போன்ற படங்களுக்காக சிறந்த காமெடியன் விருதுகளையும் பெற்றுள்ளார். மேடை நாடகங்களுக்காக கமல் கையில் கூட விருது வாங்கி உள்ளார் சதீஷ்.

இந்நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கிரேஸி மோகனுடன் இருக்கும் த்ரோபேக் ஃபோட்டோவை சதீஷ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சதீஷ் மிக இளம் வயதில் இருக்கும் அந்த ஃபோட்டோவில் கிரேஸி மோகன் ஒரு புறமும், மாது பாலாஜி மற்றொரு புறமும் சதீஷின் காதைப்பிடித்து திருகுவது போன்று உள்ளது. அதோடு ஹேப்பி டீச்சர்ஸ் டே என பதிவிட்டுள்ளார் சதீஷ்

Netizens troll Sathishs through back photo with Crazy Mohan

இந்த ஃபோட்டோவை ரீட்வீட் செய்தும், ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் சிலர் சதீஷை கலாய்த்து கமெண்ட் செய்துள்ளனர். கிரேஸி மோகன் செய்ததில் 5 சதவீதம் கூட காமெடி செய்யவில்லையே. இனியாவது அவரை போல் காமெடி செய்ய ட்ரை பண்ணுங்க என கமெண்ட் செய்துள்ளனர். அதே சமயம் இந்த ஃபோட்டோவுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

கிரேசி மோகன் சார் கிட்ட இருக்கிற காமெடி சென்ஸ்ல 1% கூட உங்ககிட்ட இல்லையே ப்ரோ என ஒருவர் பதிவிட்ட கமெண்டிற்கு பதிலளித்துள்ள மற்றொருவர், ஏங்க அவரு வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணறாப்ல??????? பைல இருந்தாத்தானே......கைல வரும்.....என நக்கலாக கலாய்த்துள்ளார்.

இன்னும் சிலர் அந்த ஃபோட்டோவில் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்கும் சதீஷின் ரியாக்ஷனையே கமெண்ட்டாக பதிவிட்டுள்ளனர். ஆசிரியரை கேவலப்படுத்தாத, அவர்கிட்ட இருந்ததுல ஒரு சதவீதம் கூட உன்கிட்ட இல்ல. அவங்க தூக்கி போட்ட காமெடியை பொருக்கி வைத்திருந்தாலே டாப் காமெடியனாக வளர்ந்திருப்பியே. ஒரு கமெண்டாவது பாசிடிவ்வா இருக்கான்னு பலரும் சதீசை கிண்டல் செய்து கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X