மாதம்பட்டி ரங்கராஜை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மேடையில் ஓப்பனா சொன்ன நடிகை.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: சமையல் நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜருக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை ஏமாற்றிய திருமணம் செய்து கொண்டதாக கூறி பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த நேரத்தில், பிரபல நடிகை ஒருவர், மேடையிலேயே ஓப்பனாக உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இணையவாசிகள் பலரும் கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ், ஈஸ்வர் கார்த்திக் இயக்கிய மெஹத்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து, பென்குயின் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமையல் நிபுணரான இவரின் உணவை, விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் ரசித்து ருசித்து சாப்பிட்ட கமல்ஹாசன் அவரை புகழ்ந்து பாராட்டி இருந்தார். அதன் பின், இயக்குநர் ஷங்கர் மகளின் திருமணம், ராஜமௌலி வீட்டு விசேஷம், நடிகர் அர்ஜூன் மகள் திருமணம், அரசியல் பிரமுகர்களின் விசேஷம் என எதுவாக இருந்தாலும் அதில் மாதம்பட்டி ரங்கராஜின் சமையல் கட்டாயம் இருக்கும் என சொல்லும் அளவிற்கு கொடி கட்டி பறந்து வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.
மாதம்பட்டி ரங்கராஜ்: விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவராக இருந்த போது, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை ஏமாற்றிய திருமணம் செய்து கொண்டு, கர்ப்பிணியாக இருக்கும் என்னை விட்டு சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், ரங்கராஜ் தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

ரொம்ப பிடிக்கும்: இந்நிலையில், Vaanam Presents Wedding Award Show 2025 சென்னையில் நடைபெற்றது. இதில் மாதம்பட்டி ரங்கராஜ், ஏவிஎம் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகை தீபா, மாதம்பட்டி சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் எனக்கு சாப்பாடு ரொம்ப பிடிக்கும், சாப்பாடு செய்து போடுபவர்களை மிகவும் பிடிக்கும். நீங்கள் மெஹந்தி சர்க்கஸ் என்கிற ஒரு படத்தில் நடித்தீர்கள் அந்த திரைப்படத்தில் காதல் அட்டகாசமாக இருக்கும் காதல் எனக்கு பிடிக்கும் என்பதால், அந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அந்த திரைப்படத்தில் நீங்கள் நடித்ததற்காகவே உங்களை நான் பாராட்டுகிறேன்.
ட்ரோல் செய்யும் ஃபேன்ஸ்: நீங்க, இவ்வளவு பெரிய சமையல் நிபுணராக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது. எந்த துறையாக இருந்தாலும் அதில் அவர் பெஸ்ட்டாக இருக்கிறார். அதை நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று பேசி இருந்தார். நடிகை தீபா பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பல இணையவாசிகள் இவர் யாருன்னு தெரியாம, தீபா அக்கா இப்படி பேசுறாங்க என்றும், பெண்கள் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும், கழட்டிவிடுவதை அவர் தொழிலாக வைத்திருக்கிறார் என பலரும் பலவிதமான கமெண்ட்களை போட்டு அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











