இவர் தான்னு தெரியும்...எதுக்கு மொக்க ப்ரோமோ...ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்புக்களுக்கான முதல் ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து விட்டனர். முதலில் அறிவிக்கப்பட போகும் போட்டியாளர் யார் என்பதையும் சொல்லி விட்டார்கள்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. அன்று மாலை 6.30 மணி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. சப்ஸ்கிரைபர்கள் 24 மணி நேரமும் பார்க்கலாம். மற்றவர்கள் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக விஜய் டிவியில் பார்க்க முடியும்.

இன்று முதல் பிக்பாஸ் அல்டிமேட்
ஜனவரி 30ஆம் தேதி துவங்கப்பட உள்ள இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தற்போது தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் இன்று முதல் வெளியிடப்படும். தினம் ஒரு போட்டியாளர் என ஒவ்வொரு போட்டியாளர் பற்றி வெளியிடப்பட உள்ளதாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தமிழ் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

க்ளூ கொடுக்கும் புகழ்
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி வரை காத்திருக்க வேண்டும் என சொல்லி, முதல் ஆளாக இன்று யாரை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என்பதற்காக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் குக் வித் கோமாளி புகழ், 007 போல் உடையணிந்து தோன்றுகிறார். இதில் அவர்கள் கொடுக்கும் க்ளூவை வைத்து இன்று யார் பெயரை சொல்ல போகிறார்கள் என்பதை அனைவரும் கண்டுபிடித்து விட்டனர்.

இவர் தான்னு எங்களுக்கு தெரியும்
சூரரைப் போற்று படத்தில் வரும் காட்டு பயலே பாடலின் வரிகள், snake + gun, வந்துச்சா வந்துச்சா என ஆட்டோகிராஃப் பட பாடல் இவை அனைத்தும் சினேகன் என்பதை காட்டுகிறது. காட்டு பயலே பாடல், மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா ஆகிய பாடல்களை எழுதியது சினேகன் தான். இதை பார்த்த ரசிகர்கள், சினேகன் என சொல்லி விட்டு போக வேண்டியது தானே...எதற்காக இந்த மொக்க ப்ரோமோ என கலாய்த்துள்ளனர்.

எதுக்கு இந்த மொக்க ப்ரோமோ
சினேகன் என்பதை அனைவரும் கண்டுபிடித்து கமெண்ட் செய்து விட்டனர். சினேகன், பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்க போகிறார், அவர் தற்போது தனிமையில் உள்ளார் என்பதை ஏற்கனவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதி செய்து விட்டன. இந்த நிலையில் இது ஒரு ப்ரோமோவா என கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











