Just In
- 12 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 13 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 14 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 14 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- News
சசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெள்ளிக்கிழமையான போதும் ஞானோதயம் வந்திடும்.. அது தான் பாலா ஸ்ட்ராட்டஜி.. இந்த வாரம் சிக்குவாரா?
சென்னை: கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அத்தனை போட்டியாளர்களும் சந்தோஷமாகவும் எந்தவொரு பேகேஜும் இல்லாதவர்கள் போல நல்லாவே நடித்தனர்.
கடைசியாக லைம் லைட்டை பிடிக்க பாலாஜி முருகதாஸ், கொடுக்கப்பட்ட பிரியாணி உணவை சாப்பிடுவதற்கு முன்பாக போட்ட ஒரு பிட் இருக்கே, அப்பப்பா சீக்கிரமே சினிமாவில் சான்ஸ் கிடைத்து விடும்.
வெள்ளிக்கிழமையான போதும் பாலாவுக்கு ஞானோதயம் பிறந்திடும் என நெட்டிசன்கள் கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.
அது எப்படி பிக் பாஸ்.. எல்லாரும் சரியா பதில் சொல்றாங்க.. கன்ஃபெஷன் ரூமிலும் தில்லு முல்லா?

வாரத்தின் தொடக்கத்தில்
பிக் பாஸ் வீட்டில் வாரத்தின் தொடக்கத்தில் சண்டை கோழியாக சீறுவதும், எப்படி ஆரியை வீட்டை விட்டு வெளியேற்றுவது. ரியோவின் அன்பு டீமை காலி பண்ணுவது என பக்காவாக பிளான் போட்டு நரி முகத்தை அப்படியே காட்டுவார் பாலாஜி முருகதாஸ்.

வெள்ளிக்கிழமையான போதும்
ஆனால், வெள்ளிக்கிழமையான போதும், அப்படியே ஞானோதயம் பிறந்து அப்படியே நல்லவன் வல்லவன் ரேஞ்சுக்கு மாறிவிடுவார் பாலாஜி முருகதாஸ். கிறிஸ்துமஸ் தின எபிசோடிலும் ரியோ, ஆஜீத், ஷிவானி எல்லாம் பிரியாணியையும், லெக் பீஸையும் வச்சு ஒரு பக்கம் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் ஏசுவாகவே மாறி பாலா பேசிய பேச்சு ஷப்பா முடியவில்லை.
|
கத்துக்கிட்டு கால வாருவேன்
வெள்ளிக்கிழமை ஆனால், போதும் ஆரி அண்ணாவிடம் அதை கற்றுக் கொண்டேன், ரியோ பிரதரிடம் இதை கற்றுக் கொண்டேன், ரம்யா சிறந்த போட்டியாளர், ஷிவானிக்கும் ஸ்கோர் போடுவேன், ஆஜீத்திடமும் ஐஸ் வைப்பேன் என இன்றைக்கு கொஞ்சம் மப்பு ஓவர் ஆகிடுச்சு போல, கத்துக்கிறேன் என பேசிய பாலாவை பார்த்து நெட்டிசன்கள், திங்கட் கிழமை கால வாரத்தானே என பங்கம் செய்து வருகின்றனர்.

உடம்பு முழுக்க பொய்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதல் இதுவரை பாலாஜி முருகதாஸ் பேசுவது எல்லாமே பொய் என்றும் அவரது உடம்பு முழுக்க பொய் தாண்டவம் ஆடுகிறது என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கிழித்து தொங்கவிட்டு டோட்டல் டேமேஜ் செய்து வருகின்றனர்.

கமலிடம் பாராட்டு வாங்க
திங்கள் முதல் வியாழன் வரை அடாவடி பண்ணி, ஏளனமாக பேசி விட்டு ஆட்டிட்யூட் காட்டிவிட்டுத் திரியும் பயில்வான் பாலா, சனிக்கிழமை கமல் சார் எபிசோடு இருப்பதால், அப்படியே நல்லவனாக வெள்ளிக் கிழமையே மாறி நடித்து மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டு கமலிடம் பாராட்டையும் வாங்கி வருகிறார்.

சுதாரிப்பாரா கமல்
கடந்த வாரமும் ஆரி மற்றும் ரியோவிடம் மன்னிப்பு கேட்ட பாலாவை கமல் பாராட்டிய அடுத்த நொடியே, ஆரியை சீண்டி வம்பிழுத்து பேசி பாலா பண்ண அட்டகாசத்தை ரசிகர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்த வாரமாவது கமல் சார் பார்த்து பாலாவை சுளுக்கெடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை.