For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் யாருன்னு காட்டுற நேரம் வந்துடுச்சு.. சவால் விட்ட தனுஷ் பட இயக்குநரை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: நடிகர் தனுஷின் மாறன் படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன், சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் ஆர்யா பேசும் வசனத்தை ஷேர் செய்து போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

  அப்படியொரு வசனத்தை போட்டு இயக்குநர் பா. ரஞ்சித் கம்பேக் கொடுத்து விட்டார். தற்போது அதே வசனத்தை போட்டு கார்த்திக் நரேனும் கம்பேக் கொடுக்கப் போகிறார் என தனுஷ் ரசிகர்கள் குஷியில் கொண்டாடி வருகின்றனர்.

  அதே சமயம் படைப்பு தான் பேச வேண்டும், நீங்க பில்டப் கொடுக்காதீங்க கார்த்திக் என நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

  முதல் படமே ஹிட்

  முதல் படமே ஹிட்

  மெக்கானிக்கல் இன்ஜினியரான கார்த்திக் நரேன் விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு போல சினிமா மீது கொண்ட காதல் காரணமாக 22 வயதிலேயே தனது முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்த படங்களும் அவருக்கு கிடைத்தது.

  துருவங்கள் பதினாறு

  துருவங்கள் பதினாறு

  கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் ரகுமான், யாஷிகா ஆனந்த், அஸ்வின் குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியான பக்கவான கிரைம் த்ரில்லர் திரைப்படம் துருவங்கள் பதினாறு. அந்த படத்தில் ஷார்ட் ஃபிலிம் இயக்குநராக கார்த்திக் நரேன் கேமியோ அப்பியரன்ஸும் கொடுத்திருப்பார். யாருமே எதிர்பாராத கிளைமேக்ஸ் ட்விஸ்ட் உடன் வெளியான அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

  நரகாசூரன்

  நரகாசூரன்

  கார்த்திக் நரேன் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவான நரகாசூரன் திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை. இயக்குநர் கெளதம் மேனன் கார்த்திக் நரேன் படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த படம் ரிலீஸ் ஆகாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

  லைகா தயாரிப்பில்

  லைகா தயாரிப்பில்

  அந்த படம் ரிலீசாகாமல் சோர்வில் இருந்த கார்த்திக் நரேனுக்கு லைகா நிறுவனம் தெம்பு கொடுத்தது. மூன்றாவது படத்தை லைகா தயாரிப்பில் அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் இயக்கி இருந்தார் கார்த்திக் நரேன். ஆனால், வாய்ப்பு கொடுத்த லைகாவுக்கு பெரிய வெற்றியை கொடுக்க தவறி விட்டார் கார்த்திக் நரேன்.

  படம் ஃபிளாப்

  படம் ஃபிளாப்

  மாஃபியா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் டெக்ஸ்டர் எனும் பெயரில் உருவாகும் என்கிற ரேஞ்சுக்கு படத்தில் ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாஃபியா படம் ரொம்பவே ஸ்லோ பேஸில் சென்றது தான் அந்த படம் படு ஃபிளாப் அடைய காரணம் என விமர்சகர்கள் விமர்சித்து இருந்தனர்.

  மாறன்

  மாறன்

  மாஃபியாவை தொடர்ந்து மாறன் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். தனுஷ், மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி வரும் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷ் ரசிகர்கள் மாறன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

  நான் யாருன்னு

  நான் யாருன்னு

  இந்நிலையில், தற்போது இயக்குநர் கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தான் யாருன்னு காட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு என்பதை சொல்லும் விதமாக சார்பட்டா பரம்பரையில் நடிகர் ஆர்யா பேசும் அதிரடி வசனத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை ஷேர் செய்துள்ளார். மாஃபியா தோல்வியில் இருந்து மீண்டு பழைய கார்த்திக் நரேன் ஆக கம்பேக் கொடுக்கப் போகிறார் என தனுஷ் ரசிகர்கள் சந்தோஷப்பட்டு வர அங்கே ஒரு பெரிய ட்விஸ்ட்டும் காத்திருக்கிறது.

  நவரசாவுக்குத் தான்

  நவரசாவுக்குத் தான்

  வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நவரசா ஆந்தாலஜியில் அற்புதம் எனும் குறும்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இன்ஸ்டாகிராமில் நவரசா பெயரை போட்டு இந்த மீமை அவர் ஷேர் செய்துள்ளார். ஆனால், ட்விட்டரில் வெறுமனே அவர் பதிவிட மாறன் படத்தைத் தான் சொல்கிறார் என நினைத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

  மீண்டும் அரவிந்த் சாமியுடன்

  மீண்டும் அரவிந்த் சாமியுடன்

  நரகாசூரன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அரவிந்த் சாமி உடன் இணைந்து அற்புதம் குறும்படத்தில் பணியாற்றியுள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன். மாஃபியா படத்தில் வில்லனாக கலக்கிய பிரசன்னா மற்றும் நடிகை பூர்ணா உள்ளிட்டோரும் இந்த நவரசா ஆந்தாலஜியில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள போர்ஷனில் நடித்துள்ளனர்.

  நாம பேசக் கூடாது

  நாம பேசக் கூடாது

  நவரசா ஆந்தாலஜியில் பல திறமையான நடிகர்கள் இருந்தாலும், நெட்பிளிக்ஸே சூர்யாவை மட்டுமே ஃபோகஸ் செய்து விளம்பரம் செய்து வருகிறது. இந்நிலையில், நவரசா ஆந்தாலஜிக்கு விளம்பரம் செய்துள்ள கார்த்திக் நரேனின் இந்த ட்வீட்டை பார்த்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர். நாம பேசக் கூடாது.. நம்ம படம் தான் பேசணும் என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

  ஓவரா உருட்டாத

  ஓவரா உருட்டாத

  படத்தை பார்த்துட்டு முடிவு பண்ணுவோம் என கமெண்ட் போட்டு ஓரளவுக்கு உருட்டு ஓவரா உருட்டாத என சினிமா ரசிகர்கள் இயக்குநர் கார்த்திக் நரேனை ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். மற்றொரு பக்கம் தனுஷ் ரசிகர்கள் நிச்சயம் கார்த்திக் நரேன் செம கம்பேக் கொடுப்பார். நவரசா மற்றும் மாறன் படங்கள் வேற லெவலில் இருக்கும் என ஆதரவு கொடுத்து வருகின்றனர். பா. ரஞ்சித் செய்ததை போல கார்த்திக் நரேனும் தரமான சம்பவம் பண்ண வாழ்த்துக்கள்!

  English summary
  Dhanush’s Maaran movie director Karthick Naren shared a photo meme of Sarpatta Parambarai which gets trolled by Netizens for this reason.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X