For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கும்தலக்கா.. காட்டுவாசிப் பெண்ணாக மாறிய பிரபல நடிகை.. பங்கமாக கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

  |

  சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஷாலு ஷம்மு, காட்டுவாசிப் பெண்ணாக செம கெட்டப் போட்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

  Bigg Boss Tamil Predicted Contestant Shalu Shammu Exclusive | Kamal Hassan

  வழக்கம் போல ஷாலு ஷம்முவின் புகைப்படங்களை பார்த்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

  பிக்பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக இவர் கலந்து கொள்வார் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  சிவகார்த்திகேயன் படங்களில்

  சிவகார்த்திகேயன் படங்களில்

  இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான கலாட்டா காமெடி திரைப்படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து இருப்பார் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருப்பார்.

  கவர்ச்சி போட்டோஷூட்

  கவர்ச்சி போட்டோஷூட்

  காமெடி நடிகையாக நடித்து வந்த ஷாலு ஷம்முவுக்கு மாடலிங் துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், சாக்‌ஷி அகர்வால், பார்வதி நாயரை போல இவரும் வித விதமான போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகிறார்.

  நிர்வாண போட்டோவை காட்டியதால்

  நிர்வாண போட்டோவை காட்டியதால்

  ஜி தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷாலு ஷம்முவிடம் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என அவர் நிர்வாணமாக எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை திரையிட்டு தொகுப்பாளர் கேட்டனர். உடனே கோபமான ஷாலு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிரேக்குக்கு பின்னர், மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்து இது வெறும் பிராங்க் என்றார்.

  பிக்பாஸ் போட்டியாளர்

  பிக்பாஸ் போட்டியாளர்

  வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கவுள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 4ல் இவரும் ஒரு போட்டியாளர் என்கிற தகவல்கள் பரவின. ஆனால், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் அதற்கு மனசு இன்னமும் பக்குவம் பெற வேண்டும் என்று கூறியிருந்தார்.

  இருட்டு அறையில் முரட்டு குத்து 2

  இருட்டு அறையில் முரட்டு குத்து 2

  இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்திலும் நடிகை ஷாலு ஷம்மு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இந்த பாகத்தில் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரிகா ரவி பேயாக நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் இவர் தான் பேயாக நடித்துள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்னொரு பேய் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

  காட்டுவாசி லுக்கில்

  காட்டுவாசி லுக்கில்

  சமீபத்தில் பிக்பாஸ் ஜூலி காட்டுவாசி கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி அசத்தி இருந்தார். மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனனும் காட்டு வாசிப் பெண்ணாக ஏகப்பட்ட புகைப்படங்களில் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கிய நிலையில், தற்போது நடிகை ஷாலு ஷம்முவின் காட்டு வாசி லுக் கலக்கலாக இருக்கிறது.

  கும்தலக்கா

  கும்தலக்கா

  ஷாலு ஷம்முவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என்றும், கும்தலக்காவா இருக்கீங்க என்றும், சூப்பர், அமேசிங் எனவும் வர்ணித்து வாய் பிளந்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். ஸ்லீவ்லெஸ் உடையில் செம செக்ஸியாக இருக்கீங்க என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

  சரியான கெட்டப்

  சரியான கெட்டப்

  இப்பதான் சரியான கெட்டப் செட் ஆகி இருக்கு, இன்னைக்கு கூட இப்படி காட்டணுமா ஷாலு, காட்டு ராணி உங்களை எப்போதுமே வணங்குவேன் என ஷாலு ஷம்முவை கடவுள் ரேஞ்சுக்கெல்லாம் பில்டப் பண்ணி அவரது தீவிர விசிறிகள் வர்ணித்தும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தும் இணையத்தை கலகலப்பாக்கி வருகின்றனர்.

  நல்ல மனசு

  நல்ல மனசு

  சமீபத்தில், தனது ரசிகர்கள் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் விசிட்டாக அவரது இல்லத்திற்கு சென்று, அவருடன் கேக் கட்டிங் செய்து, அவருக்கு கேக் ஊட்டி விட்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகின. அவரது நல்ல மனசை பல ரசிகர்கள் பாராட்டியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Shalu Shamu’s new tribal look photoshoot goes viral in social media, after she shared it in her twitter and instagram pages. Netizens trolled her for the tribal look.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X