Coolie: விக்ரமும் கூலியும் ஒன்னா? ரஜினி தலையில் மிளகாய் அரைச்சுட்டாரு கமல் ரசிகர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை: எங்கு திரும்பினாலும் கூலி படத்தின் ட்ரோல்கள் தான் அதிகம் உள்ளது. படம் பான் இந்தியா ஹிட், தமிழ் சினிமாவுக்கு முதல் ஆயிரம் கோடிகளை வசூல் செய்யும் படம் என பலரும் நம்பிக்கொண்டு இருந்தவர்களுக்கு படம் ரிலீஸ் ஆன பின்னர், " இடியே ஆனாலும் தாங்கிக் கொள்ளும் இதயம்" என ரஜினியின் எஜமான் பட பாடலைப் போல நிலை ஆகிவிட்டது. எங்கு திரும்பினாலும் ட்ரோல்கள்தான்.

அப்படியான ஒரு ட்ரோல் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோவில், விக்ரம் படத்தின் கதையும் கூலி படத்தின் கதையும் ஒன்றுதான் என கூறப்படுகிறது. இவ்வாறு கூறப்படுவது ஏதோ ட்ரோல் எல்லாம் இல்லை, இரண்டு படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஆகியவை ஒரே மாதிரி இருக்கிறது. அதாவது கமல் மற்றும் ரஜினியிடம் லோகேஷ் கனகராஜ் எவ்வாறு கதை சொல்லி இருப்பார் என கற்பனையில் கூறுகிறார். அது பார்ப்பதற்கு என்னடா படத்தை இப்படி முடிச்சு விட்டுட்டீங்க என்று சொல்வது போல இருக்கிறது.

Netizens Trolles Lokesh Kanagaraj Kamal Haasan Vikram Story And Rajinikanth Coolie Story Are Same
Photo Credit:

விக்ரம் - கமல் சார் நீங்க 30 வருசம் தலைமறைவா இருக்கீங்க.

கூலி - ரஜினி சார் நீங்க 30 வருசமா ஆஃப் லைன்ல இருக்கீங்க.

விக்ரம் - உங்க மகனை வில்லன் குரூப் கொன்றுவிடுகிறார்கள்.

கூலி - உங்க நண்பனை வில்லன் குரூப் கொன்று விடுகிறார்கள்.

விக்ரம் - உங்கள் மகன் சாகும்போது எங்க அப்பா வருவாருடா உங்களைத் தேடி-னு சொல்றாரு.

கூலி - உங்க நண்பன் சாகும் போது என் நண்பன் வருவான்டா உங்களைத் தேடி-னு சொல்றாரு.

விக்ரம் - அவர் சொன்னபடியே உங்க மகனைக் கொன்ற குரூப்பை நீங்க தேடுறீங்க.

கூலி - அவர் சொன்னபடியே உங்க நண்பனை கொன்ற குரூப்பை நீங்க தேடுறீங்க.

விக்ரம் - முதல் பாதி முழுவதும் டாமினேட் செய்யப்போவது ஒரு நல்ல போலீஸ். அதை ஒரு மலையாள நடிகர் செய்கிறார்.

கூலி - முதல் பாதி முழுவதும் டாமினேட் செய்யப்போவது ஒரு கெட்ட போலீஸ். அதை ஒரு மலையாள நடிகர் செய்கிறார்.

Netizens Trolles Lokesh Kanagaraj Kamal Haasan Vikram Story And Rajinikanth Coolie Story Are Same
Photo Credit:

விக்ரம் - அந்த நல்ல போலீஸ்க்கு யாருக்குமே தெரியாமல் சீக்ரெட்டாக ஒரு மனைவி இருக்கிறார்.

கூலி - அந்த கெட்ட போலீஸ்க்கு யாருக்குமே தெரியாமல் சீக்ரெட்டாக ஒரு மனைவி இருக்கிறார்.

விக்ரம் - நல்ல போலீஸின் மனைவியை வில்லன் கண்டுபிடித்து வில்லன் கழுத்தை அறுத்துக் கொல்கிறான்.

கூலி - கெட்ட போலீஸின் மனைவியை வில்லன் கண்டுபிடித்து வில்லன் கழுத்தில் குத்தியே கொல்கிறான்.

விக்ரம் - வில்லன் போதைப்பொருள் கடத்துகிறான்.

கூலி - வில்லன் மனித உறுப்புகளை கடத்துகிறான்.

விக்ரம் - இடைவேளையில் ஆரம்பிக்கலாமானு சொல்றீங்க.

கூலி - இடைவேளையில் முடிச்சுடலாமானு சொல்றீங்க.

விக்ரம் - இரண்டாம் பாதியில் ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு ஒரு மாஸான ட்ரான்ஸ்பர்மேஷன் கொடுக்கிறோம்.

கூலி - இரண்டாம் பாதியில் ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு ஒரு மாஸான ட்ரான்ஸ்பர்மேஷன் கொடுக்கிறோம்.

விக்ரம் - காளிதாஸ் உங்க தத்துப் பையன் இல்லை, உங்க பையன்னு ரசிகர்களுக்கு ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம்.

கூலி - ஸ்ருதி ஹாசன் உங்க நண்பனின் மகள் இல்லை, உங்கள் மகள்னு ரசிகர்களுக்கு ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம்.

விக்ரம் - க்ளைமேக்ஸில் பால் டப்பாவை எடுப்பதற்கு ஒரு சண்டைக் காட்சி வைக்கிறோம்.

கூலி - க்ளைமேக்ஸில் போன் கால் எடுப்பதற்கு ஒரு சண்டைக் காட்சி வைக்கிறோம்.

விக்ரம் - படத்தோட கடைசியில சூர்யாவைக் கொண்டு வந்து மாஸ் பண்றோம்.

கூலி - படத்தின் கடைசியில் ஆமிர் கானைக் கூட்டிக் கொண்டு வந்து தமாஸ் செய்கிறோம்" என்று அந்த வீடியோவில் அந்த நெட்டிசன் இரண்டு படத்தின் கதையும் ஒன்றுதான் என புட்டு புட்டு வைக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் என்னப்பா, லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் கதையை அப்படியே ரஜினிக்கு சொல்லி அவர் தலையில் இப்படி மிளகாய் அரைச்சுட்டாரே லோகி எனவும் இணையவாசிகள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X