ரிசல்ட் தான் முன்பே தெரியுமே...அபிஷேக் மைண்ட் வாய்சை சுட்ட ரசிகர்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, இன்றுடன் 63 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஆரம்பத்தில் 18 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், அவர்களில் இதுவரை 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சஞ்சீவ் மற்றும் அமீர் வைல்ட்கார்டு என்ட்ரியாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஒரு வார பிரேக்கிற்கு பிறகு கமல் மீண்டும் இந்த வாரம் திரும்ப வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடான இன்று அபிஷேக் ராஜா எட்டாவது ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

கன்டென்ட் தந்த அபிஷேக்

கன்டென்ட் தந்த அபிஷேக்

ஆரம்பம் முதலே கடும் சர்ச்சைகளையும், எதிர்ப்புக்களையும் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் சம்பாதித்தவர் அபிஷேக். அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுத்த போட்டியாளரும் இவர் தான். சக போட்டியாளர்களை இன்ஃபுலியன்ஸ் செய்வதாக இவர் மீது பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

ஒப்புக் கொண்ட அபிஷேக்

ஒப்புக் கொண்ட அபிஷேக்

தான் கன்டென்ட் கொடுப்பதையும், தான் ப்ரோமோவில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவும், தனது முகம் வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காக அனைத்தையும் செய்வதாகவும், இன்ஃபுலியன்ஸ் செய்வதாகவும் அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இது தான் அபிஷேக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான காரணமாக கூறப்பட்டது.

கேள்வி கேட்ட ரசிகர்கள்

கேள்வி கேட்ட ரசிகர்கள்

நிகழ்ச்சியின் 21 ம் நாளில் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிஷேக், வைல்ட்கார்டு என்ட்ரியாக 47 வது நாளில் மீண்டும் அழைத்து வரப்பட்டார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாங்கள் ஓட்டுப் போட்டு ஒருவரை வெளியேற்றினால், நீங்கள் கன்டென்ட் வேண்டும் என்பதற்காக அவரை மீண்டும் கூட்டி வருவீர்களா. அப்படியானால் மக்கள் அளித்த ஓட்டுக்கள் என்ன ஆனது என விஜய் டிவியை கேள்வி கேட்டனர்.

 மீண்டும் வெளியேறினார்

மீண்டும் வெளியேறினார்

ஆனால் இரண்டாவது முறை வந்ததும் மீண்டும் அதே தவறை செய்தார் அபிஷேக். தான் பிரியங்காவை இன்ஃபுலியன்ஸ் செய்யவில்லை என சொல்லி, சொல்லியே பிரியங்காவிற்கு அனைவரிடம் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தார். அபிஷேக் வந்த பிறகு பிரியங்கா மாறி விட்டதாக அனைவரும் பேச துவங்கினார். இந்த நிலையில் அபிஷேக் இன்று மீண்டும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிரேக்கிங் நியூஸ் போட்ட கமல்

பிரேக்கிங் நியூஸ் போட்ட கமல்

இன்றைய எபிசோட் ஆரம்பித்தது முதலே சோகமான முகத்துடனேயே இருந்தார் அபிஷேக். பிரேக்கிங் நியூஸ் டாஸ்கில் ரிப்போர்டராக சிறப்பாக செய்ததாக கமல் பாராட்டிய போதும், பெயருக்கு கூட அவர் முகத்தில் சிரிப்பு வரவில்லை. வெளியேற்றப்பட போகிறவர் யார் என்பதை கமல் பிரேக்கிங் நியூசாக போட்டுக் காட்டிய போது ஒரே ரியாக்ஷனுடனேயே முகத்தை வைத்திருந்தார்.

முன்பே தெரியுமா

முன்பே தெரியுமா

இந்த ரிசல்ட் தனக்கு முன்பே தெரியும் என்பதை போல் அபிஷேக் முகத்தை வைத்திருந்ததை வைத்து நெட்டிசன்கள் செமயமாக கலாய்த்து வருகின்றனர். இப்படி கொளுத்தி போட்டு, பிரியங்காவை காலி பண்ண எதற்காக நீ திரும்ப வர வேண்டும். வெளியில் நடப்பது அபிஷேக்கிற்கு முன்பே தெரியும் என்பது உண்மை தானா. எல்லாம் ஏற்கனவே தெரியும் என்பதை போலவே முகத்தை வைத்துள்ளாரே என பலர் கேள்வி கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X