என்ன தான் வேணும் பாவ்னிக்கு ... அமீர் –பாவனியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 63 வது நாளான இன்று நிகழ்ச்சி துவங்கியதும் கமல், தான் சொல்லும் துருப்புக்களை புரிந்து கொள்ளாமல் போட்டிளர்கள் தொடர்ந்து தங்களின் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதாக கூறுகிறார். வழக்கமாக வெள்ளிக்கிழமை நிகழ்வு மட்டும் தான் காட்டப்படும். ஆனால் இன்று சனிக்கிழமை நடந்த பேச்சவார்த்தையை பார்க்கலாம் என நிகழ்ச்சியை துவக்கினார்.
சனிக்கிழமை நிகழ்வுகளின் போது பிரியங்கா, சஞ்சீவ், அபினய், பாவ்னி, அபிஷேக் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வெளியில் இரந்து பார்த்ததற்கும், உள்ளே வந்த பிறகும் யார் மீதான அபிப்ராயம் மாறி உள்ளது என கேட்கிறார்.

தாமரை பற்றி சஞ்சீவ்
அதற்கு பதிலளிக்கும் சஞ்சீவ், அப்படி குறிப்பிட்டு யாரையும் எனக்கு தோன்றவில்லை. அப்படி எனது எண்ணம் மாறியது தாமரையை பற்றி தான். அவர் சண்டை போடுவார் என நினைத்து வந்தேன். ஆனால் அவர் அப்படி இல்லை என இங்கு வந்த பிறகு தெரிந்தது என்றார். அதே சமயம், வீட்டிற்குள் பிரியங்கா பற்றி தாமரை, வருண், அண்ணாச்சி, அக்ஷரா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்டிரிட் ஆஃபீசர்
பிறகு அமீர் மற்றும் பாவ்னி தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமீரிடம் நிஜமாகவே என்னை இம்ப்ரஸ் பண்ண முயற்சி செய்கிறாயா என கேட்கிறார். அமீர் அதற்கு மழுப்பமாக பதில் சொல்லுகிறார். தொடர்ந்து விடாமல் பாவ்னியும் உன்னை பற்றி சொல் என்கிறார். அதற்கு, நான் அதிகம் பேச மாட்டேன். ஸ்டிரிட் ஆபீசர். கோபமாக இருப்பேன் என்கிறார்.

லவ் பண்ணுறியா
லவ் பண்ணுறியா என வெளிப்படையாக அமீரிடம் கேட்கிறார் பாவ்னி. ஆனால் நான் பிளே பாய் கேரக்டர் கிடையாது என பதில் சொன்னதும் பேச்சை மாற்றி, ராஜு எதற்காக என்னை பற்றி அப்படி சொல்ல வேண்டும். அதை பற்றி கமல் சாரோ, பிக்பாசோ இதுவரை கேட்காதது, பேசாதது ஏன் என கேட்கிறார். பிக்பாஸ் பேசிடுங்க பிக்பாஸ் என்கிறார் அமீர் நக்கலாக.

பாவ்னி பேசுவது ஏன்
இதை பார்த்த நெட்டிசன்கள், பாவ்னியை லவ் பண்ணுறியா என அபினய்யிடம் வெளிப்படையாக கேட்டவதற்காக ஒவ்வொருவரிடமாக சொல்லி வருத்தப்பட்ட பாவ்னி, எதற்காக அமீரிடம் சம்பந்தமே இல்லாமல் தானாக வழிய சென்று என்னை இம்ப்ரஸ் பண்ண டிரை பண்ணுறியா, யாரையாவது லவ் பண்றியா என கேட்கிறார். இருவரும் யாருக்கும் புரியாமல் பூடகமாக பேசிக் கொள்கிறார்களே என கேள்வி கேட்டுள்ளனர்.

நிஜமான ஃபிரண்ட்ஸா
இன்னும் சிலர், நீங்க நிஜமாகவே ஃபிரண்ட்ஸ் தானா. வந்த ஒரு வாரத்திற்குள் எப்படி இவ்வளவு க்ளோஸ் ஆனீர்கள். என்ன நடக்குது இங்க என பல விதமாக சந்தேக கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











