For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமல்ஹாசனுக்கு மீம் போட்ட ப்ளூசட்டை மாறன்...கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

  |

  சென்னை : முன்பெல்லாம் ப்ளூசட்டை மாறன் போடும் விமர்சனங்களை தான் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். ஆனால் வலிமை படத்திற்கு பிறகு அவர் என்ன போஸ்ட் போட்டாலும் அதை கண்டபடி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

  வலிமை படத்தை விமர்சனம் செய்வதாக அஜித்தை பாடி ஷேமிங் செய்து வசமாக சிக்கிக் கொண்டார் ப்ளூசட்டை மாறன். இதை திரை பிரபலங்கள், ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் கடும் எதிர்த்து, தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். ஆனாலும் ப்ளூசட்டை மாறன், தன்னை கண்டித்தவர்களையும் விமர்சித்து போஸ்ட் போட்டு வந்தார்.

  எந்த படம் வந்தாலும் அதை விமர்சித்து ப்ளூசட்டை மாறன் போஸ்ட் போடுவதும், அதை கலாய்த்து, திட்டி நெட்டிசன்கள் கமெண்ட் போடுவதும் வழக்கமாகி நடந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது விக்ரம் படத்தையும், கமல்ஹாசனையும் கிண்டல் செய்து மீம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ப்ளூசட்டை மாறன்.

  பா.ரஞ்சித் 10 ஆண்டு திரைப்பயணம்..வித்தியாசமான போஸ்டருடன் வாழ்த்து சொன்ன சந்தோஷ் நாராயணன்!பா.ரஞ்சித் 10 ஆண்டு திரைப்பயணம்..வித்தியாசமான போஸ்டருடன் வாழ்த்து சொன்ன சந்தோஷ் நாராயணன்!

  கடைசில நான் திருந்திட்டேன்

  கடைசில நான் திருந்திட்டேன்

  விக்ரம் போஸ்டருடன், நடிகர் வி.கே.ராமசாமியின் போட்டோவை இணைத்து, அதோடு, கமல் பேசுவதை போன்று மீம் போட்டுள்ளார் ப்ளூசட்டை மாறன். அதில், அதுல பாருங்க...நல்ல கதையுள்ள படமா செலக்ட் பண்ணி உசுர குடுத்து நடிச்சிருப்பேன். அந்த படத்தையெல்லாம் ஒருத்தனும் தியேட்டர்ல வந்து பாக்கல. இப்ப உள்ள சின்ன பசங்களோட சேர்ந்து ஒரு மசாலா படம் பண்ணேன். அதைப் போய் ஆஹா ஓஹோனு கொண்டாடுறாங்க. இவங்கள திருத்த பாத்தேன். முடியல..கடைசில நான் திருந்திட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

  விக்ரம் மசாலா படமா

  விக்ரம் மசாலா படமா

  இதை பார்த்த நெட்டிசன்கள், தம்பி...விக்ரம் மசாலா படம்னு சொல்ற ஒரே பைத்தியக்காரன் நீயாத்தான் இருப்ப. கே.வி.ராமசாமி வாய்ஸ் தான் இனி ப்ளூசட்டை மாறன் வாய்சா. கரெக்ட் தான். முதல்ல நீ திருந்து. கமல்ஹாசன் திருந்திட்டாரு நீ எப்போ திருந்த போற. நீ மொதல்ல ஒழுங்கா ரெவ்யூ பண்ணு. அப்புறம் இந்த மாதிரி ட்வீட் போடலாம். அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல ராஜான்னு சொல்றியா. கமல் என்ன பண்ணினாரு அவரு திருந்தறதுக்கு.

  நீ எப்போ திருந்த போற

  நீ எப்போ திருந்த போற

  அந்த நல்ல படத்தையே நீ குப்பைனு சொல்றவன். நீயெல்லாம் பேசுற நல்ல படம் பத்தி. ஒரு தமிழ் சினிமா தரம் குறைவதில்லை. உன்னை மாதிரி சில பேரால தான் அந்த படத்தின் தரம் குறைக்கப்படுகிறது. நீ ஒரு படம் பண்ணுனியே ஆன்டி இந்தியன்னு...மாதிரி இருந்துச்சு. ஒவ்வொரு சீன், டயலாக்கா சுட்டு, அத படம்ன்னு நீ ரிலீஸ் பண்ணின. அதெல்லாம் விட உன்ன பாரதிராஜா கலாச்சிருப்பாரு பாரு அதுதான் ஹைலைட் யா என கண்டபடி கழுவி ஊற்றி உள்ளனர்.

  Recommended Video

  Marmayogi , Marudhanayagam Release பற்றி பேசிய கமல் | Vikram Success Meet | *Kollywood
  நேற்று த்ரிஷா...இன்று கமலா

  நேற்று த்ரிஷா...இன்று கமலா

  உங்க இஷ்டத்துக்கு எல்லாம் இங்க எவனும் படம் எடுக்க மாட்டான். மக்களுக்கு பிடிச்சிருந்தா அது நல்ல படம் தான் என அதிகமானவர்கள் கமெண்ட் செய்திருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் நயன்தாராவின் திருமணத்தை வைத்து, வயசு ஏறிக்கிட்டே போகுது நீ எப்பம்மா திருமணம் செய்து கொள்ள போற என த்ரிஷாவை வம்புக்கு இழுந்த ப்ளூ சட்டை மாறன் இன்று கமலை வம்புக்கு இழுந்துள்ளது ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. விக்ரம் படம் கமலின் Comeback படம் கிடையாது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் comeback என ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் ப்ளூசட்டை மாறனின் இந்த ட்வீட் கமல் ரசிகர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

  English summary
  Blue Sattai Maran post a meme for Kamal who spokes about Vikram movie. He posted a meme with comedian V.K.Ramasamy's image. Netizens trolls and criticise Blue Sattai Maran's meme. They questioning and adviced to change Blue Sattai Maran.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X